Friday, August 16, 2019

பாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது?


பாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது


By Shyamsundar I | Updated: Friday, August 16, 2019, 21:34 [IST] UN on Kashmir issue | 

காஷ்மீர் பிரச்சனையில் ஐநாவின் ரகசிய ஆலோசனை நியூயார்க்: காஷ்மீர் பிரச்சனை என்பது இரண்டு நாட்டு பிரச்சனை என்று பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஆகிய நாடுகள் ஐநாவில் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளும் இதை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. 

காஷ்மீர் பிரச்சனை தற்போது சர்வதேச அரங்கத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. காஷ்மீரில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி உள்ளது. 


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய 15 நாடுகள் இது தொடர்பாக ஆலோசித்து உள்ளது. 

சீனா முதலில் இருந்து காஷ்மீர் பிரச்சனையில் சீனா பாகிஸ்தான் பக்கம்தான் நிற்கிறது. இந்தியாவின் முடிவால் காஷ்மீரில் உள்ள சீனாவின் எல்லைக்கும் ஆபத்து வந்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் ஒன்றாக இருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனையில் சீனா இந்தியாவிற்கு எதிராக பேசி உள்ளது. 

ஆனால் என்ன முதலில் காஷ்மீரில் இந்தியா எடுத்த நடவடிக்கை உள்நாட்டு பிரச்சனைதான் என்று அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த சில அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது அந்த நாடுகளின் ஐநா பிரதிநிதிகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதன்படி காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்குமான பிரச்சனை என்று கூறியுள்ளனர். 

எல்லாம் போச்சு பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இது இரண்டு நாட்டு பிரச்சனை என்றுள்ளது. மலேசியாவும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காஷ்மீர் விவாகரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையாக இருக்கும் வரை சிக்கல் இல்லை. ஆனால் இப்போது இது உலக பிரச்சனையாகி உள்ளது. 

யார் கையில் தற்போது காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடந்து முடிந்துள்ளது. 5 நிரந்தர உறுப்பினர்கள், 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டது. இந்த பெரும்பாலான உறுப்பு நாடுகளும் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Read more at: 
https://tamil.oneindia.com/news/new-york/un-security-council-meeting-what-are-russia-and-the-usa-stand-on-kashmirissue/articlecontent-pf394600-360328.html

No comments:

Post a Comment

பொருளாதார நெருக்கடி குறித்த தகவல்கள் தமிழில்

Book 7 - 2019 National Situations S.No Content Page 1 பொருளாதாரத் தேக்கம் உண்மைதான்.. பிரதமர் மோடியி...