நான் அண்ணா அசாரேவாக இருக்க விரும்பவில்லை - அருந்ததி ராய்
தொலைக்காட்சிகளில் (அண்ணா அசாரே தொடர் பாக) நாம் காண்கின்றவை உண்மையில் ஒரு புரட்சி என்று கூறப்படுமானால், அண் மைக்காலத்தில் நடந்த நிகழ்ச் சிகளுள், அதிக அளவில் அவமானமானதும், புரிந்து கொள்ள முடியாததுமான முதன்மையான நிகழ்ச்சி இதுவேயாகும். அசாரேவின் மக்கள் லோக் பால் சட்டம் குறித்து உங்களுக்கு எத்தகைய கருத்து வேறுபாடு இருந்தாலும் பின்வருவனவற்றை ஆத ரிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள். 1. வந்தே மாதரம், 2. பாரத் மாதாகீ ஜே, 3.இந்தியாவே அண்ணா, அண்ணாவே இந்தியா, 4. ஜெய்ஹிந்த்.