Sunday, October 21, 2018

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பரிதாப தோல்வியுற்ற மோடி அரசு


வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பரிதாப தோல்வியுற்ற மோடி அரசு

தீக்கதிர், 22.10.2018, தலையங்கம்

ஒவ்வோராண்டும் 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மோடி அரசாங்கமோ போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே மேலே உள்ள புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வேலை வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடியும் அவருடைய அரசாங்கமும் கூறி வந்ததற்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு நாளும்அதிகரித்து கொண்டிருக்கும் கசப்பான எதார்த்த நிலையை நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.சமீபத்தில் ரயில்வே துறையில் 62,907 நான்காம் பிரிவுஊழியர் பணியிடங்களுக்காக செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம் (சுயடைறயல சுநஉசரவைஅநவே க்ஷடியசன) நடத்திய தேர்விற்காக, 1 கோடியே90 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. ரயில்வேயில் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகளில் கேங்மேன், கேட்மேன், ஹெல்ப்பர்கள் போன்ற பணியிடங்களுக்கே இந்த விண்ணப்பங்கள். விண்ணப்பித்தவர்களில் முதுநிலைப் பட்டதாரிகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள்.முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் சுமார் 400 நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்களுக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் 50 ஆயிரம்பேர் பட்டதாரிகள். இதேபோன்று மேற்குவங்கத்தில் 2017இல் 6,000 நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங் களுக்காக நடைபெற்ற தேர்விற்காக, 25 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களிலும் பலர் பட்டதாரிகள் அல்லது முதுநிலைப் பட்டதாரிகள். மும்பையில் 1,137 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்விற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது +2 தான். ஆனால் வந்திருந்தவர்களில் 543 பேர் முதுநிலைப் பட்டதாரிகள், 425 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். மேற்கண்ட விவரங்களிலிருந்து, வேலை வாய்ப்புக்காகப் போட்டியிடுபவர்களில் பெரும்பாலான வர்கள் அவ்வேலைக்குத் தேவையான கல்வித்தகுதி யைவிட அதிக அளவில் படித்தவர்கள் என்பதாகும். இவற்றிலிருந்து படித்த இளைஞர்கள் மத்தியில் வேலை யின்மை எந்த அளவிற்கு மிகவும் கொடுமையானதாக இருக்கிறது என்பதைக் காணமுடிகிறது.

பட்டதாரிகள் வேலையின்மை மூன்று மடங்கு அதிகம்

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ‘இந்தியாவில் வேலையிலிருப்போர்’ குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையானது, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேற்படி அறிக்கையில், பட்டதாரிகளின் மத்தியில் உள்ள வேலையின்மை என்பது ஒட்டுமொத்த வேலையில்லாதவர்களின் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம் என்று கூறியிருக்கிறது. மேலும், இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் மிகவும் படித்த இந்தியர்கள் மத்தியில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இப்போதுதான் உச்சத்தில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. மேலும் நாட்டில் மொத்தத்தில் வேலை யில்லாதிருக்கும் 2 கோடியே 30 லட்சம் பேர்களில் 90 லட்சம் பேர் பட்டதாரிகள் அல்லது அதிக அளவு படித்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

வேலையிலிருப்பவர்களிலும் தங்களின் தகுதிக்குக் குறைவான வேலையிலிருப்பவர்களின் அல்லது தங்களுடைய தகுதிக்கேற்ற ஊதியம் பெறாமல் இருப்பவர்களின் (under-employed) எண்ணிக்கையும் பெரிய அளவில் வீங்கியிருக்கிறது.

வேலை தேடுவோரிடம் காணப்படும் மற்றுமோர் அம்சம், இவர்களில் அதிகமானவர்கள் அரசாங்க வேலைக்கே முன்னுரிமை அளிப்பதாகும். வளர்கின்ற சமூகங்களின் ஆய்வு மையம் (Centre for the Study of Developing Societies), நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, 2007க்கும் 2016க்கும் இடையேயான ஆண்டுகளில் அரசாங்க வேலைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், 62 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இதற்குக் காரணம், முறைசாராத் துறைகளில் காணப்படும் வேலைவாய்ப்புகள் என்பவை பாதுகாப்பற்ற வைகளாக இருப்பதும், அவற்றின் மூலம் குறைந்த வருமானமே கிடைப்பதும் மற்றும் அவற்றின் பணிநிலைமைகளும் மோசமாக இருப்பதுமேயாகும். அதனால்தான் முதுநிலைப் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள்கூட ரயில்வே அல்லது இதர அரசாங்கத் துறைகளில், நான்காம் பிரிவு ஊழியமாக இருந்தாலும் பரவாயில்லை என்று விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்புப் பயன்கள் கிடைத்திடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பல்வேறு துறைகளிலும் வேலைகளை உருவாக்கு வோம் என்று மோடி அரசாங்கம் கூறிவந்ததற்கு நேர்முரணாக அதன் கொள்கைகள் வேலைகளை ஒழித்துக்கட்டும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, 2016 நவம்பரில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது (demonetisation) என்று அறிவித்ததாகும். சிஎம்ஐஇ எனப்படும் இந்தியப் பொருளாதாரத்தினைக் கண் காணிப்பதற்கான மையம் (CMIE-Centre for MonitoringIndian Economy) மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, இதன் தாக்கத்தால் 35 இலட்சம் வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன.

பெண்கள் வேலைவாய்ப்பு வீழ்ச்சி

சிஎம்ஐஇ அறிக்கையானது மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு என்பது எந்த அளவிற்குக் கூர்மையாக வீழ்ந்துவிட்டது என்பதையும் காட்டியிருக்கிறது. உலகில் பெண்கள் வேலைபார்க்கும் சதவீதம் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மோடி அரசாங்கத்தின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு சம்பந்தமாக வெளியாகி இருக்கும் தரவுகளிலிருந்து ஓர் அடிப்படை உண்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது என்பதேயாகும். அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது 2018 ஏப்ரலிலிருந்து ஜூன் இறுதிவரையிலான காலத்தில் 8.2 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு என்பதோ ஒரு சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் செம்மையாக இருப்பதுபோல் தோன்றும் அதே சமயத்தில், வேலையின்மை விகிதமோ இந்த ஆண்டின் ஆகஸ்டில் 6.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது ஜூலையில் 5.6 சதவீதமாக இருந்த விகிதத்தைவிட அதிகமாகும்.மேலும் 2017 ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்டிருந்த வேலையின்மை விகிதமான 4.1 சதவீதத்தைவிட மிகவும் அதிகமாகும்.ஒவ்வோராண்டும் 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், மோடி அரசாங்கமோ போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்கு வதில், பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே மேலே உள்ள புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

விவசாய நெருக்கடியும் முறைசாராத் தொழிலும்

விவசாய நெருக்கடி என்றென்றும் நீடித்திருக்கக்கூடிய விதத்திலேயே மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருப்பதால், கிராமப்புற வேலை யின்மையும் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் தொழிலாளர் படையில் 50 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்திருக்கிறது. தனியார்மயக் கொள்கைகளும், சந்தை சம்பந்தமான அனைத்து அடிப்படைச் சேவைகளும் தனியாருக்கேத் திறந்து விடப்பட்டிருப்பதாலும், வேலைவாய்ப்பு அதிக அளவு முறைசாராத்துறையிலேயே இருந்துவருகின்றன. இவ்வாறு முறைசாராத் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் குறைந்தபட்ச ஊதியமின்மை, வேலை பாதுகாப்பின்மை மற்றும் சமூகநலத் திட்டங்களின் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக் கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் மாற்று என்று சொன்னால் அது “சுய வேலைவாய்ப்புதான்”. வாழ்வதற்கான வழிமுறை கள் அற்றவர்கள் பயன்படுத்தும் இடக்கரடக்கல் சொல்லாக “சுயவேலைவாய்ப்பு’’ என்பது இருந்து வருகிறது. இவ்வாறு வேறு வழியின்றி பெட்டிக்கடை வைத்திருப்பவர்களைப் பார்த்துத்தான், மோடி, “பக்கோடா விற்பதும்” நாகரிகமான வாழ்வாதாரம் என்று கேலி செய்திருக்கிறார்.இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு உருப்படியான வேலைகள் வழங்கப்பட வேண்டுமானால், நாளும் அதிகரித்துவரும் வேலை யில்லா இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் சமூகஉற்பத்திச் சார்ந்த வேலைகளை அளித்திட வேண்டு மானால், தற்போது ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகள் அதனிடத்தில் வைக்கப்பட வேண்டும்.

(அக்டோபர் 17, 2018) தமிழில்: ச. வீரமணி


மனித வணிகத்திற்கு எதிரான சட்டம்! உடனடி மற்றும் அத்தியாவசியத் தேவை


மனித வணிகத்திற்கு எதிரான சட்டம்! உடனடி மற்றும் அத்தியாவசியத் தேவை

By ரெணி ஜேக்கப்.  |  தினமணி  Published on : 16th October 2018 12:39 PM 

மனித வணிகம் என்ற சொற்றொடருக்கு ஒரு நாடு அல்லது பகுதியிலிருந்து வேறொன்றுக்கு, வழக்கமாக கட்டாய வேலை அல்லது வர்த்தக நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்ற நோக்கங்களுக்காக சட்ட விரோதமாக மக்களை கொண்டு செல்வது / கடத்துவது என அகராதியில் பொருள் வரையறை செய்யப்படுகிறது. மனித வணிகம் என்பது என்ன என்று இந்த பொருள் வரையறையே மிக தெளிவாக எடுத்தியம்புகிறது.

தவறாக பயன்படுத்துவதற்காக சிறார்களை பணிக்கு ஆட்சேர்ப்பு செய்தல், போக்குவரத்து, மாற்றுகை, ஒளித்து தங்க வைத்தல் அல்லது பெறுதல் ஆகிய செயல்பாடுகள் சிறார்களின் / குழந்தைகளின் மனித வணிகத்தில் இடம்பெறுகிற செயல்பாடுகளாகும். குழந்தைகளின் வர்த்தகரீதியிலான பாலியல் சுரண்டல் என்பது பல வடிவங்களை எடுக்கலாம்; விபச்சாரத்திற்குள் ஒரு குழந்தையை பலவந்தமாக ஈடுபடுத்துதல் அல்லது வேறு வடிவங்களிலான பாலியல் செயல்பாடுகள் அல்லது குழந்தைகளை இடம்பெற செய்கிற ஆபாச படங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும். குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதில், கட்டாய வேலை அல்லது சேவைகள், அடிமைத்தனம் அல்லது அடிமை வேலைகள் போன்ற நடைமுறைகள், உடல் உறுப்புகளை அகற்றுதல், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுத்தல், சிறுவயதிலேயே திருமணத்திற்காக கடத்துவது. குழந்தை படைவீரர்களாக செயல்படுவதற்கு ஆட்சேர்ப்பு, பிச்சையெடுத்தல் அல்லது விளையாட்டுகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆட்சேர்ப்பு (ஒட்டக ஜாக்கி அல்லது கால்பந்தாட்ட வீரர்  போன்ற செயல்பாட்டுக்கு) ஆகியவையும் சிறார்களை தவறாக பயன்படுத்தலில் இடம் பெறுகின்றன. குழந்தைகளை தவறான நோக்கங்களுக்காக கடத்துபவர்கள் குழந்தைகளது பெற்றோர்களின் கடுமையான ஏழ்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு அல்லது வருவாய் ஈட்டுவதற்கு பெற்றோர்கள் இத்தகைய நபர்களிடம் தங்களுடைய குழந்தைகளை விற்கக் கூடும் அல்லது தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கை மற்றும் திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளினால் பெற்றோர்கள் ஏமாற்றப் படக் கூடும். வேலை, பாலியல் செயல்பாடுகள் அல்லது சட்ட விரோத தத்தெடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை விற்கக் கூடும்.

உலகெங்கிலும், 4.5 மில்லியன் நபர்களின் பாலியல் நோக்கங்களுக்கான மனித வணிகம் பாதிக்கிறதென்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிடுகிறது. இதில் சிக்கி பாதிக்கப்படுபவர்களுள் அநேகர் கட்டாயப்படுத்தப்படுகிற அல்லது சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிற சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கின்றனர். இவற்றிலிருந்து தப்பிப்பது சிரமமானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட.

பாலியல் சுரண்டலுக்காக / தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஆட்கடத்தல் செய்வதென்பது, உடல் ரீதியாக நிர்ப்பந்தித்தல், ஏமாற்றுதல் மற்றும் கட்டாயப்படுத்தப்படுகிற கடன் வழியாக அடிமைத்தனத்தில் சிக்க வைத்தல் போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலுக்காக நாடுகளுக்குள் மற்றும் நாடுகளுக்கிடையே மக்களை, வழக்கமாக பெண்களை ஒழுங்கமைப்பு முறையின்கீழ் இடம்பெயரச் செய்வது என்றே முன்பு கருதப்பட்டது.

பாலியல் தொழிலுக்கான மனித வணிகத்தில், குடிபெயர்தலை ஏற்பாடு செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்காக பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுமாறு, குடிபெயரும் ஒரு நபரை நிர்ப்பந்திப்பது உள்ளடங்கும். பாலியல் தொழிலுக்கான மனித வணிகம், உடல் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த நிர்ப்பந்தம், ஏமாற்றுதல் அதிகாரத்தை / பதவியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் கடனின் வழியாக ஏற்பட்ட அடிமைத்தனம் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இவ்வாறு கடத்தப்படுகிற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, எடுத்துக்காட்டாக, வீட்டு வேலைக்காக அல்லது சேவைத் தொழில்துறையில் பணி வழங்கப்படும் என்ற உறுதிமொழி பெரும்பாலும் வழங்கப்படுகிறது; ஆனால், அதற்கு பதிலாக விபச்சார விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களது, பாஸ்போர்ட்களும் மற்றும் அடையாளச் சான்று ஆவணங்களும் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்படுகின்றன. அவர்களை வாங்குவதற்காக கொடுத்த விலை அத்துடன் அவர்களது பயணம் மற்றும் விசா கட்டணங்களுக்கான செலவு ஆகியவற்றை விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்து தந்ததற்கு பிறகே அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. பல நேரங்களில் அவர்கள் அடித்து உதைக்கப்படுகின்றனர் அல்லது காவலில் வைக்கப்படுகின்றனர்.

கட்டாய திருமணம் :

கட்டாயம் திருமணம் என்பது, திருமண பந்தத்தில் ஈடுபடும் நபர்களுள் இருவரது அல்லது ஒருவரது, சுதந்திரமாக வழங்கப்பட்ட சம்மதம் இல்லாமலேயே நடைபெறுகிற திருமணமாகும். அடிமைப்பணி திருமணம் என்பது, அந்த திருமணத்திற்குள் விற்கப்படுகிற, மாற்றப்படுகிற அல்லது சுவீகரிக்கப்படுவதை உள்ளடக்கிய ஒரு திருமணம் என பொருள் வரையறை செய்யப்படுகிறது. 'கட்டாய திருமணத்திற்காக குழந்தைகளை / சிறார்களை கடத்துவது என்பது, மனித வணிகத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகவே இருக்கிறது; குறிப்பிட்ட தேசிய இனங்கள் அல்லது நாடுகளுக்கு மட்டும் இது உரியதல்ல.’  

கட்டாய திருமணம் என்பது குறிப்பிட்ட சில சூழல்களில் மனித வணிகத்தின் ஒரு வடிவமாக இருக்கக் கூடும். ஒரு பெண் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரானால், திருமண பந்தத்திற்குள் கட்டாயமாக திணிக்கப்பட்டிருப்பாரானால் மற்றும் அவளது புதிய கணவருடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பாரானால், அப்போது, அவளது அனுபவமானது, பாலியல் செயல்பாட்டுக்கான மனித வணிகமாகும். புதிதாக திருமணமான மணப்பெண், அவளது கணவரால் மற்றும் / அல்லது அவரது குடும்பத்தினரால் ஒரு வீட்டு பணியாளராக நடத்தப்படுவாரானால், அப்போது இது கட்டாயப் பணிக்கான மனித வணிகத்தின் ஒரு வடிவமாக இருக்கும்.

வேலைக்கான மனித வணிகம் என்பது, கட்டாய வேலை மற்றும் சேவைகளுக்காக மனிதர்களை இடம்பெயர செய்வது, கொத்தடிமைத் தொழில்முறை, விருப்பமில்லாத அடிமைப்பணி, வீட்டு வேலை மற்றும் குழந்தைத் தொழிலாளர்முறை ஆகியவை இதில் உள்ளடங்கும். வேலைக்கான மனித வணிக செயல்பாடு, பெரும்பாலும், வீட்டு வேலை, விவசாயம், கட்டுமானப் பணி, உற்பத்தி மற்றும் கேளிக்கைத் துறை ஆகிய தளங்களில் நிகழ்கிறது; குடிபெயரும் தொழிலாளர்கள், சமூகப் பொருளாதார ரீதியில் கடைநிலையில் உள்ளவர்கள் மற்றும் பழங்குடியினர் இதில் சிக்கி பாதிப்படைபவர்களாக குறிப்பாக இருக்கின்றனர். மக்களை ரகசியமாக கொண்டு செல்லும் கடத்தல் செயல்பாடுகளும் அவர்களது வேலையை தவறாக பயன்படுத்துவதற்காக இந்த போக்குவரத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் தெரிந்திருக்கிறது. எ.கா., போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர்களாக.

உடல் உறுப்புகளில் வர்த்தக செயல்பாடும் மனித வணிகத்தின் ஒரு வடிவமே. இது பல்வேறு வடிவங்களை எடுக்கக் கூடும். சில நேர்வுகளில், பாதிப்புக்கு உட்படுத்தப்படும் நபர் அவரது உடல் உறுப்புகளை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார். வேறு நேர்வுகளில் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தனது உடலுறுப்பை விற்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் உறுதியளிக்கப்பட்ட பணம் தரப்படுவதில்லை அல்லது குறைவாக தரப்படுகிறது. இறுதியாக, பாதிப்புக்கு ஆளாகுபவருக்கு தெரியாமலேயே அவரது உடலுறுப்பானது அகற்றப்படக் கூடும். (பொதுவாக, அந்நபர் மற்றொரு மருத்துவ பிரச்னைக்காக / நோய்க்காக - உண்மையானதாகவோ அல்லது பிரச்னை / நோய் இருப்பதாக புனையப்பட்டோ சிகிச்சையளிக்கப்படும்போது) குடிபெயரும் தொழிலாளர்கள், குடியிருப்பு வசதியில்லாத நபர்கள் மற்றும் படிப்பறிவில்லாத நபர்கள், இந்த வகையான சுரண்டலுக்கு குறிப்பாக உட்படுத்தப்படுகின்றனர். உடல் உறுப்புகளில் வணிகம் என்பது, கீழ்வரும் பல குற்றவாளிகளை கொண்டு, ஒழுங்கமைவுடன் நடத்தப்படும் ஒரு குற்றமாகும் :

ஆட்சேர்ப்பு செய்பவர்

அழைத்துச் செல்பவர் (போக்குவரத்து)
மருத்துவ பணியாளர்கள்
தரகர்கள் / ஒப்பந்ததாரர்கள்
உறுப்புகளை வாங்குபவர்கள்
அடிமைத்தனம் என்பது, வெறும் ஒரு கனவு / கற்பனை சிந்தனையோ அல்லது கதையோ அல்ல சமீபத்தில் 72-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிய ஜனநாயக வரலாறு கொண்ட ஒரு நாட்டில் இது யதார்த்தமான உண்மையாகும்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு மரம் வெட்டும் தொழிலகத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளால் 3 குடும்பங்கள் மீட்கப்பட்ட நிகழ்விலிருந்து மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. 'அப்போது 8 வயதாகும் கவிதா என்ற சிறுமி, வருவாய் கோட்ட அலுவலரின் மடியில் அமர்ந்திருந்த நிலையில், தான் பள்ளியில் படிக்க விரும்புவதாக கூறிய நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அடிமைத்தன குறியீட்டு அட்டவணையில் 167 நாடுகளில் இந்தியா 53-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நவீன அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களில் 80 லட்சம் மக்கள் கடும் சிரமத்தோடு வாழ்ந்து வருவதாக நாங்கள் மதிப்பிட்டிருக்கிறோம். எனினும், 2016-ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணப்பதிவகம், மனித வணிக குற்றச் செயல்கள் 8132 என்று மட்டுமே பதிவு செய்திருக்கிறது.

மிகச் சமீப காலம் வரை, அடிமைத்தனத்தில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்கள் சிக்கியிருக்கின்றன என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில், உண்மை கண்டறியும் ஆய்வு பயணத்தை நான் மேற்கொண்டிருந்தேன். அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகத்தையே சந்தித்து பேசுகின்ற ஒரு நேரடி அனுபவம் கடந்த வாரம் எனக்கு கிடைத்ததது.  இந்த உண்மை கண்டறியும் பயணத்தில் சல்லாங் பழங்குடியினர் என்று அறியப்படுகிற சமூகத்தில் 10,000-க்கும் அதிகமான நபர்கள் இருக்கின்றனர் என்பது எனக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது. விலங்குகளைப் போலவே வசிக்கின்ற இந்த பழங்குடி சமூகத்தினர், நிஷிஷ் என்று அழைக்கப்படுகின்ற மற்றொரு சாதி மக்களுக்கு முழுமையாக அடிமைப்பணி செய்பவர்களாக இருக்கின்றனர். மாலிக்ஸ் அல்லது முதலாளிகளுக்கே இவர்கள் சொந்தமானவர்கள் இவர்களது வாழ்க்கை, திருமணம், குழந்தைகள், கல்வி என ஒவ்வொரு விஷயமும் உயர் ஜாதி பழங்குடியினங்கள் என அழைக்கப்படும் இவர்களாலே தான் முடிவு செய்யப்படுகிறது. ஒரு பசு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் விலங்கான மிதுன் என்பதற்கு எதிரான ஒரு பண்டமாற்று முறையை பின்பற்றி இந்த இனத்து மக்கள் விற்கப்படுகின்றனர்.

அஸ்ஸாமைச் சேர்ந்த குழந்தைகள் கடத்தப்படுதல்

வீட்டு வேலை என்ற பெயரில் அஸ்ஸாமிலிருந்து மாநில எல்லையை தாண்டி அருணாச்சல பிரதேசத்திற்கு குழந்தைகள் கொண்டு செல்லப்படுவது, இது தொடர்பாக நாங்கள் நடத்திய கலந்துரையாடல்களில் அதிக கவனம் பெற்ற மற்றுமொரு பிரச்னையாகும். அஸ்ஸாமில் எல்லைப்புற மாவட்டங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இனத்தவரான விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். முற்போக்கான சட்டங்களுக்கு இந்தியா பிரபலமாக அறியப்படுகிறது. ஆனால், மனித வணிகம் என்பது, இன்னும் இதற்குரிய சட்டம் எதுவும் இயற்றப்படாத, செயல்படுத்தப்படாத தளமாகவே இருந்து வருகிறது.

சர்வதேச தொழிலாளர் நல அமைப்பின், நவீன அடிமைத்தனத்தை உலகளாவிய மதிப்பீடுகள் 2017 அறிக்கையின்படி, கட்டாய வேலையில் 24.9 மில்லியன் மற்றும் கட்டாய திருமணத்தில் 15.4 மில்லியன் நபர்கள் உட்பட நவீன அடிமைத்தனத்தில் 40.3 மில்லியன் நபர்கள் சிக்கித் தவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களில் தவறான நோக்கங்களுக்காக இந்த வணிகம் என்பது அடிப்படை உரிமைகளை மீறுகிற உலகின் 3-வது மிகப்பெரிய ஒழுங்கமைவு கொண்ட குற்றச் செயலாக இருக்கிறது. இக்குற்றத்தை ஒடுக்குவதற்கோ, கலைவதற்கோ குறிப்பிட்ட சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை.

2015-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியன்று மனித வணிகம் மீதான தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், 'இந்தியாவை மாடுகளைப் போல வணிகத்தில் விற்கப்படுகின்றனர் மற்றும் கொத்தடிமைத் தொழில்முறை இன்னும் வலுவாகவும், பரவலாகவும் இருந்து வருகிறது,’ என்று குறிப்பிட்டார். இது அதிக அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர், மனித வணிகத்திற்கு எதிரான செயல்பிரிவுகளை (AHTUs) வலுப்படுத்த உள்துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஒத்துழைப்போடு சேர்ந்து திருத்தியமைக்கப்பட்ட செயல்திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மனித வணிகத்தை எதிர்த்து போரிட்டு வெற்றி காண்பதற்கு என்ஜிஓ-க்கள் உட்பட இதில் அக்கறையுள்ள பல்வேறு நபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்கை இந்திய அரசும் மற்றும் உச்சநீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளன.

2030-ம் ஆண்டுக்குள் 1.84 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டுமென்ற தனது தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் 2016-ம் ஆண்டு ஜுலை மாதத்தில், கட்டாய வேலையின் ஒரு தீவிர வடிவமான கொத்தடிமைத் தொழில்முறையின் பிரச்னையின் கடும் பாதிப்பு நிலையையும், தீவிரத்தையும் இந்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு துறையின் மாண்புமிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்களால் 2018-ம் ஆண்டு ஜுலை 2018-ம் தேதியன்று மனித வணிகத்திற்கு எதிரான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மனித வணிகத்திற்காக கடத்தப்படும் நபர்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது மற்றும் இது நிகழாமல் தடுப்பது ஆகியவற்றுக்கு இந்த மசோதா வகை செய்கிறது. மனித வணிக பிரச்னையை சமாளிப்பதற்கு தென்-ஆசிய நாடுகள் மத்தியில் முன்னணி நாடாக இந்தியாவை ஆக்குவது இதன் நோக்கமாகும். மனித வணிகம், கட்டாய வேலை மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றை குறிப்பாக இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ள முதல் தேசியளவிலான சட்ட மசோதாவாக இது இருக்கிறது.

மனித வணிகத்தை போராடி வெல்வதில் தான் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வெளிப்படுத்துவதற்காக கீழ்கண்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசை நாங்கள் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்:

1. மனித வணிகத்தால் பாதிக்கப்படுபவர்களை விடுவிப்பதற்கு கால வரம்புடன் செயல் நடவடிக்கைகள்.

2. மனித வணிகத்தால் பாதிக்கப்படுபவர்களின் கடன் / கடமைப் பொறுப்பின்மையை புதிய சட்டம் பாதுகாக்க வேண்டும்.

3. மீட்பதற்கு, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மற்றும் பதிவு செய்வதற்கு, கைது செய்வதற்கு சான்றுகளை கைப்பற்றுவதற்கு, புலன் விசாரணை செய்வதற்கு மற்றும் வழக்கு தொடர்வதற்கு என ஒரு நேர்வின் அனைத்து செயல்பாடுகளிலும் மீட்பு மற்றும் புலன் விசாரணைக்கான அதிகாரங்களை கொண்டிருப்பதற்கு இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் AHTUs ளுக்கு அதிகாரமளித்தல்.

4. மீட்கப்படுபவர்களுக்கும் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கும் தங்குமிட மற்றும் உணவு வசதி உட்பட அதிகாரிகள், மீட்கப்படுபவர்கள் மற்றும் NGOக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுகிற மாநிலங்களுக்கு இடையிலான வழக்குகளை ஒருங்கிணைப்பதற்கு உரிய நெறிமுறைகளும் மற்றும் நிதி ஆதாரங்களும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுகை செய்கின்ற போது போதுமான காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

5. வேலைக்கான மனித வணிகம் மற்றும் கொத்தடிமை தொழில்முறை உட்பட அனைத்து வடிவங்களிலான மனித வணிகத்தை போராடி வெல்வதில் NGOக்களை மிக முக்கிய பங்கை அங்கீகரிப்பது மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது.

6. மனித வணிகம் மீதான புதிய சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு போதுமான நிதியையும் மற்றும் ஆதார வளங்களையும் ஒதுக்கீடு செய்வது.

மனித வணிகத்தின் மீதான இந்த புதிய மற்றும் விரிவான சட்டம் இயற்றப்படுவது, மனித வணிகத்தை எதிர்த்து போரிட தெற்கு ஆசிய நாடுகள் மத்தியில் தலைவராக இந்தியாவை இது நிலை நிறுத்தும். எஸ்ஃஎஸ்டி பிரிவினர், குடிபெயரும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற ஏழ்மையான மற்றும் வசதியற்ற சமூகத்தினர் உட்பட, அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நபர்களை பாதிக்கின்ற, பரவலாக இருந்து வருகிற, ஆனால் கண்ணுக்கு புலப்படாத இந்த கொடுங்குற்றத்தை எதிர்த்து தீவிரமாக செயல்படுவதில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் தலைமைத்துவ பங்கை இது உலகிற்கு எடுத்துக்காட்டும்.

பணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் குறைவதேன்?


பணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் குறைவதேன்?

By ரமாமணி சுந்தர்  |   தினமணி Published on : 20th October 2018 01:34 AM

நமது நாட்டில் போதிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது ஒரு மாபெரும் பிரச்னையாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், நமது நாட்டில் பணிக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கையும், விகிதமும் குறைந்து கொண்டே வருகின்றன என்பது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காத ஒரு பிரச்னை.

2015-16-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, நமது நாட்டில், பணிக்குச் செல்லும் வயதுடையவர்களில் (15 -59) 27 விழுக்காடு மகளிர் மட்டுமே வருமானம் ஈட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அதாவது 2004 -05-இல் இது 43 விழுக்காடாக இருந்தது. நகரங்களை விட கிராமப்புறங்களில் மகளிரின் பணி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

கிராமப்புறங்களில் 2004 -05-ஆம் ஆண்டில் 49 விழுக்காடாக இருந்த பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதம், 2015 -16-இல் 32 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே கால கட்டத்தில் நகரங்களில் இந்த விகிதம் 24.4 விழுக்காட்டிலிருந்து 16 .6 ஆகக் குறைந்துள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு சில அரபு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில், பணியில் உள்ள மகளிரின் விகிதம் இந்தியாவை விட அதிகமாக உள்ளது. சீனா(64%), வங்கதேசம்(57 %) அமெரிக்கா(56 %) ஐரோப்பிய நாடுகள் (51%) இங்கெல்லாம் பணிக்குச் செல்லும் வயதுடையவர்களில் பாதிக்கு மேற்பட்ட மகளிர் பணியில் உள்ளார்கள். இந்த விஷயத்தில் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் கூட நம்மைவிட முன்னிலையில் உள்ளன. பாகிஸ்தான் மட்டுமே நம்மைவிட ஓரளவு பின்தங்கி (25 %) உள்ளது.

நமது நாட்டு மகளிரின் குறைவான பணி விகிதத்திற்கு நிச்சயமாக நமது மகளிர் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என்பதைக் காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பணிக்குச் செல்லும் வயதுடைய 580 லட்சம் மகளிர், வேலை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

மகளிரின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளுக்கான தர வரிசையில் 144 நாடுகளில் தற்பொழுது நமது நாடு 139-ஆவது இடம் வகிக்கிறது எனும் அதிர்ச்சி தரும் தகவலை உலகப் பொருளாதார அமைப்பின் உலக பாலின இடைவெளி அறிக்கை (குளோபல் ஜெண்டர் கேப் ரிப்போர்ட் 2017) வழங்குகிறது.

நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லும் பெண்களின் விகிதமும், எழுத்தறிவு பெற்ற மகளிரின் விகிதமும் அதிகரித்துக் கொண்டிருந்தும் பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதம் ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

முன்பைவிட இப்போது பெண்கள் அதிக ஆண்டுகள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதனால் பணிக்குச் செல்லத் தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்படி பள்ளி இறுதி வரையில் கல்வியைத் தொடரும் பெண்களை, அவர்கள் பெற்றோர் திருமணச் சந்தையில் அவர்களது மதிப்பு கூடும் என்ற காரணத்துக்காகவே பெரும்பாலும் பள்ளிப் படிப்பைத் தொடர அனுமதிக்கிறார்கள். தங்கள் பெண்களை பணிக்கு அனுப்பும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.

பணி புரிவோர்- வேலைக்குச் செல்லாதோர் பற்றி அரசு சேகரிக்கும் புள்ளிவிவரங்களின்படி ஓரளவு பள்ளிப் படிப்பை முடித்த அல்லது பள்ளி இறுதி வரை கல்வியைத் தொடர்ந்த மகளிரை விட, எழுத்தறிவில்லாத அல்லது கல்லூரி இறுதி வரையில் கல்வியைத் தொடர்ந்த மகளிரே அதிகம் பணிக்குச் செல்கின்றனர். அதாவது, கொஞ்சம் கூட எழுத்தறிவு இல்லாத பெண்களிலும், கல்லூரி வரையில் படித்துள்ள பெண்களில் மட்டுமே அதிக விழுக்காடு பேர் பணிக்குச் செல்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் ஓரளவு படித்த பெண்கள் கூலி வேலை போன்ற சாதாரண வேலைகளுக்குப் போகத் தயாராக இல்லை என்பதே. இவர்கள் செய்யக்கூடிய வேறு வேலைக்கான வாய்ப்புகளும், குறிப்பாக கிராமப்புறங்களில் மிகக் குறைவாகவே உள்ளன.

நமது நாட்டில் சமீப காலமாக குடும்பங்களின் வருமானத்தின் நிரந்தரத் தன்மை அதிகரித்துள்ளதும், மகளிர் பணிக்குச் செல்வது குறைந்துள்ளதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வருமானத்தின் நிரந்தரத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க குடும்பங்களில் மகளிர் பணிக்குச் செல்வது குறையும் என்றும், அதற்கு பதில் மகளிர் வீட்டின் சமூக நலனைப் பாதுகாப்பதில் அதிகம் அக்கறை காட்டுவார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

பயிற்சித் திறன் சாராத கீழ்மட்ட வேலைகளை ஏற்பதற்கும் அவர்களது குடும்ப கெளரவம் தடையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

நமது நாட்டில் பெரும்பாலான மகளிர் விவசாயம் சார்ந்த பணிகளிலேயே ஈடுபட்டுள்ளனர். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி149.8 மில்லியன் மகளிர் பணியில் உள்ளனர். இவர்களில் மூன்றில் இருவர் தங்களது சொந்த நிலத்தில் அல்லது விவசாய கூலித் தொழிலாளியாகப் பணியாற்றுகின்றனர்.

விவசாயத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்டதன் விளைவாக கூலிவேலை செய்பவர்களுக்கான பணிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. நாட்டின் தற்பொழுது விவசாயத்தை நம்பியிருப்போரின் நிலை என்ன என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். மேலும், தகுந்த பாதுகாப்பின்மை, தங்குவதற்கான வசதியின்மை, குடும்பத்தினரின் எதிர்ப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் முதலிய காரணங்களினால் எல்லா பெண்களாலும் தாங்கள் வசிக்கும் கிராமம் அல்லது அதன் சுற்று வட்டாரத்தை விட்டு பணி நிமித்தம் இடம் பெயர முடிவதில்லை.

ஆக, மகளிரின் பணி விகிதம் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணம் பொருத்தமான வேலைவாய்ப்பு போதிய அளவு இல்லை என்பதே. ஒரே மாதிரி வேலைக்கு ஆண்கள் பெறும் ஊதியத்தில் 62 சதவிகித ஊதியமே பெண்கள் பெறுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பெரும்பாலான மகளிர் பயிற்சித் திறன் சாராத, குறைந்த வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழில்களிலேயே உள்ளனர். அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்களில் 20.5 சதவிகிதம் மட்டுமே மகளிர்.

திருமணத்திற்குப் பிறகு, அதுவும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிடுவது மிகவும் சகஜமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.

குடும்பத்தில் குழந்தைகளின் பராமரிப்பு, முதியோர்களின் கவனிப்பு எல்லாமே மகளிரின் பொறுப்பு என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது.

அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களுக்கு மகப்பேறு விடுமுறை, குழந்தை காப்பகங்கள் போன்ற வசதிகளும் கிடையாது. அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு போன்ற வசதிகள் உள்ளன.

சமீபத்தில் திருத்தப்பட்ட மகப்பேறு நலன் சட்டத்தின்படி 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 28 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி மகளிரின் வசதிக்காக மாற்றி அமைக்கப்பட்ட சட்டமே, மகளிரின் வேலை வாய்ப்பிற்கு எதிராக மாறுகிறது என்றால் வியப்பாக இல்லையா?

முக்கியமான பத்து தொழில் துறைகளைச் சார்ந்த 300 தொழிலதிபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2018 -19 இல் 11 -18 லட்சம் மகளிர் இந்த திருத்தப்பட்ட மகப்பேறு சட்டத்தின் காரணமாக வேலையை இழந்துள்ளனர். எல்லாத் துறைகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் 1-1.2 கோடி மகளிர் வரையில் வேலையை இழந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்களால் தங்களிடம் பணிசெய்யும் மகளிருக்கு ஆறு மாதங்கள் வரையில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால், சிறு மற்றும் குறு தொழில்களால் ஆறு மாதங்கள் வரையில் வேலை செய்யாமல் ஊதியம் கொடுக்க இயலாது என்ற காரணத்தினால் மகளிரை பணிக்கு அமர்த்துவது தவிர்க்கப்படுகிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது.

ஒரு சில மாநிலங்களில் சுய உதவிக்குழுக்கள் மகளிருக்கு வருமானம் ஈட்டும் பணிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மகளிருக்கு தக்க பயிற்சி அளித்து, தேவையான நிதி உதவி கிடைக்கச் செய்து, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தையை உருவாக்கி, அவர்களை தொழில் முனைவோராக ஆக்கியுள்ள பெருமை இந்த சுய உதவிக் குழுக்களைச் சாரும்.

ஆனால், இந்த சுய உதவிக் குழுக்களால் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அதே போன்று, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்காக கிராமப்புறங்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்களில் பாதிக்கு மேல் மகளிர் என்பது பாராட்டுதலுக்குரிய விஷயம். ஆனால், எல்லா மாநிலங்களிலும் இந்தத் திட்டம் சரியாக செயல்படுகிறதா, உறுதியளித்தபடி 180 நாள்கள் வேலை வழங்கப்படுகிறதா என்பன போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.


கட்டுரையாளர்:
சமூக செயற்பாட்டாளர்


Wednesday, October 17, 2018

ஊழல் நாற்றம் அதிமுக அரசு - தீக்கதிர், 18.10.2018


ஊழல் நாற்றம் அதிமுக அரசு
தீக்கதிர், 18.10.2018

இந்தியாவிலேயே முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தண்டனை பெற்று சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த ஜெயலலிதா சிறைக்கு போனபோது (டம்மி) முதல்வராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதே அதிமுகவில் இருந்து தற்போது முதல்வராக உள்ளவர் எடப்பாடி பழனிசாமி. பொதுப்பணித்துறையே இவர்வசம்தான் உள்ளது. பொதுப்பணித்துறையை தனது உறவினர்களுக்கே ஒதுக்கி சுமார் 4500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக திமுக புகார் எழுப்ப, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பதவியில் இருக்கும் முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த விசாரணை முடிவை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.முதல்வர் குற்றம் செய்யாதவராக, நேர்மையானவராக இருந்திருந்தால் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். குற்றச்சாட்டில் எந்த முகாந்தரமும் இல்லை. தான் நிரபராதி என நிரூபித்துவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். அப்படி ராஜினாமா செய்தால் முதல்வர் பதவி ஓபிஎஸ்-சிடம் போய்விடும் என்பதால் முதல்வர் மவுனம் காக்கிறார்.

எடப்பாடி மட்டும்தான் ஊழல் செய்தாரா?

ஓபிஎஸ்-சின் நெருங்கிய நண்பரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான சேகர்ரெட்டி வீடு, அலுவலகத்தில் ரெய்டு செய்த வருமானவரித்துறை, அவரது வீட்டிலிருந்து 96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 24 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள், மற்ற டினாமினேஷனில் 9.63 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் அதோடு ஒரு டைரியும் கண்டெடுத்தது. இந்த டைரியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் என பெரிய பட்டியலே இருந்தது. அதனடிப்படையில் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் இருக்கும்போதே, தலைமை செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அங்குதான் மணல்கொள்ளைக்காக சேகர் ரெட்டி மாதா மாதம் 120 கோடி ரூபாய் போயஸ்கார்டனுக்கு கொடுத்ததற்கான ஆதாரங்களை எடுத்துள்ளனர்.சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தினால் 5 கோடி பணம், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் யார் யார் மூலம் கொடுக்கப்பட்டது, எப்படி கொடுக்கப்பட்டது, எந்த அமைச்சர் எந்த எந்த வட்டத்தில் கொடுக்க வேண்டும் என பட்டியல் கொண்ட டைரியை எடுத்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்க ஒவ்வொரு மாதமும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 14 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததை குட்கா ஆலை முதலாளி மாதவ்ராவ் வாக்குமூலமும் தந்துள்ளார். அதற்கான டைரியையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் காவல்துறை தலைவரும், அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் சிக்கினர். இவர்களது வீட்டிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களை வருமானவரித்துறை கண்டெடுத்துள்ளது.உணவுத்துறை அமைச்சராக இருக்கிற காமராஜ், லஞ்சம் பெற்றுள்ளதாக அதிமுக-வை சேர்ந்த புகழேந்தி (அ.ம.மு.கழக கர்நாடக பொறுப்பாளர்) பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகிறார். குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு கொடுக்க சத்துணவு மையத்திற்கு வாங்கக்கூடிய முட்டையில் ஊழல் செய்ததையும், பருப்பு வாங்குவதில் சுமார் 250 கோடி ஊழல் நடந்துள்ளதையும் அம்பலப்படுத்தினார். முட்டை, பருப்பு கொள்முதல் செய்ய நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்தது. ஆக, தமிழகத்தின் முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் ஊழல் விசாரணை வளையத்தில் உள்ளனர். இதுதான் தமிழக அரசின் இன்றைய நிலை.
லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவினரின் சோதனையில்...

முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் 180 கோடி ரொக்கமும் 100 கிலோவுக்கு அதிகமான தங்கமும் கிடைத்துள்ளது. முன்னேர் எப்படி போகிறதோ அப்படித்தான் பின்னேரும் போகும் என்பார்கள் அதுபோல தமிழகத்தில் முதல்வர் துவங்கி அனைத்து அமைச்சர்களும், தலைமை செயலாளர் துவங்கி அதிகாரிகளும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் துவங்கி காவல்துறையினரும், ஆளுநர் துவங்கி துணைவேந்தர்கள் வரையிலும் ஊழலில் திளைக்கின்றனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம்

சமூகத்தில் நல்ல ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர் பெருமக்கள் ஊழல்வாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி, பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கு கோடிகோடியாக லஞ்சம் வாங்கியது அவ்வப்போது பத்திரிகையில் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். பேராசிரியர் நிர்மலாதேவி தனது மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தமிழகத்தையே உலுக்கியது.அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இதில் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் லட்சம் லட்சமாக பணம் வாங்கிக் கொண்டு மார்க் போட்டுள்ளனர். இதை ஆய்வு செய்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இந்த முறைகேடு பல ஆண்டுகளாக நடந்து வருவது அம்பலமானது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். தேர்வு கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்த பேரா.உமா இதில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளதாக செய்திகள் அம்பலப்படுத்துகின்றன. இப்படி அதிமுக அரசும், அரசு நிர்வாகமும் மிகப்பெரிய அளவில் வெளிப்படையாகவே கூச்ச நாச்சமின்றி ஊழல் செய்கின்றனர் .

எரியும் வீட்டில் பிடுங்கியதுவரை லாபம்

பன்னாட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும்: தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும், 8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், கடலோர மாவட்ட மக்கள் சாகர்மாலா திட்டத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மேற்கு மாவட்ட விவசாயிகள், தங்களது நிலங்களில் புதைக்கப்படும் உயர் மின்னழுத்த கோபுரம் மற்றும் கெயிலுக்கு எதிராக போராடுகின்றனர். இதைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் ஊழல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.1991-1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு டான்சி ஊழல், சுடுகாட்டு கொட்டகையில் ஊழல், மாணவர்களுக்கு வாங்கிய இலவச செருப்பில் ஊழல் என ஊழல் முடைநாற்றம் வீசியது. 1996 ல் நடந்த தேர்தலில் அந்த அரசு துடைத்தெறியப்பட்டதோடு, ஜெயலலிதா போட்டிபோட்ட 2 தொகுதியிலும் டெபாசிட் இழந்தார். அதேபோன்று 2019 தேர்தலில் அதிமுகவும் அதோடு சேர்ந்த மக்கள் விரோதசக்தியான பாஜகவையும் தமிழக மக்கள், வேறோடும் வேறடி மண்ணோடும் களைந்து எறிவார்கள்.

கட்டுரையாளர் :
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)


Banking on FDI


Banking on FDI
The Hindu, FEBRUARY 04, 2015 13:18 IST
UPDATED: FEBRUARY 04, 2015 13:18 IST

Banking on FDI
Recognizing the well-known fact that in terms of industrial growth India has fallen behind many of its former peers such as Brazil and South Korea, the NDA government has made the revival of manufacturing the centre piece of its economic strategy. However, the policy to be adopted to realise this objective has been reduced to the “Make in India” slogan, often preceded by the word “come”, suggesting that the intention is to attract foreign investors to invest in manufacturing in this country to produce for export to markets abroad. The government’s role, if successful, would be to fashion the policy environment and ensure the infrastructural conditions needed to facilitate such investment.
This strategy is by no means novel, having been experimented with by many a developing country in the past four decades. Other than a few, most such experiments have failed. And making this bet at a time when the world economy is still battling with recession may not be all to wise. What is more, given India’s large domestic market, even when foreign investors come to India they are likely to make for the domestic rather than the export market.
Consider for example India’s own past experience. The Reserve Bank of India (RBI) has recently released a bunch of numbers on the foreign assets and liabilities of companies registered in India and the finances of Foreign Direct Investment Companies (FDICs) operating in India. (FDICs are firms in which a single foreign investor has at least 10 per cent of equity, which (arbitrarily) is taken as indicative of substantial and long-term interest.)
Since 2011 the Reserve Bank of India requires all companies that have received foreign direct investment and/or themselves made investments abroad to file returns on their foreign liabilities and assets. This information collated and released by the RBI point to significant domination by foreign firms in the foreign invested sector. Thus the share of FDI in equity (at market value) of companies with foreign ownership of equity stands at 63.9 per cent in the case of financial companies, and a larger 74.5 per cent in the case of non-financial companies (Chart 1).
Further, the market value of the stock of foreign direct investment equity at the end of March 2013 amounted to 59.4 per cent of the total value of invested capital minus outstanding loans in the registered manufacturing sector. This overwhelming presence, no doubt, partly reflects the unwarranted asset price inflation in India’s stock markets. But, it must be remembered that foreign investors not only own equity of this value. As a result of holding that equity as the largest or the majority shareholders in various enterprises, they have management control of all assets in those enterprises.
Thus, as the Indian government stretches itself to attract more foreign firms to come make in India and convert the country into another manufacturing hub for the world, it may be useful to assess some features of the experience with these firms that are already making in India. There are clearly two sectors into which foreign capital dominantly flows: manufacturing (which accounts for close to 50 per cent of FDI equity valued at market prices; and services (especially financial and business services) which accounts for another 40 per cent (Chart 2). So firms do clearly come into the sectors in which the government sees India as having an advantage because of a low wage, skilled and partly English-speaking workforce.
What is striking is that despite the claim that liberalization, by exposing domestic capacities and firms to the cutting edge of international competition, would restructure and render them internationally competitive, subsidiaries of foreign manufacturing firms in India are not using India as an export platform. Taking foreign subsidiary companies as a whole exports accounted for a reasonable 32 per cent of their sales. But that was because firms in the ‘information and communications sector’, which accounted for 17 per cent of sales of all firms covered, exported as much as 70 per cent of their sales. Foreign firms that were investing in manufacturing in India, on the other hand, were largely catering to the domestic market.
This has had a curious result from the point of view of the balance of payments.
Data on the finances of 917 non-government, non-financial foreign direct investment companies in 2012-13 released early January show that over the three-year period 2010-11 to 2012-13, the earning in foreign currencies of foreign direct investment companies averaged 22 per cent, whereas that ratio in the case of non-FDI companies stood at a higher 26 per cent. Foreign invested firms were less engaged with export markets when compared with non-FDI firms. Evidence from the past suggests that the net foreign exchange earnings of FDICs is negative.
Hence, unless the policies adopted by the government result in a fundamental transformation in the behaviour of foreign firms investing in Indian manufacturing, the hope that the country could ride on their backs to export-driven economic success is likely to be belied. That would be true even if the world economy recovers from the current recession.


பெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்

பெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்

ஆண்டுதோறும் அக்டோபர் 15-ஐ கிராமப்புற மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையும், தேசிய பெண் விவசாயிகள் தினமாக இந்திய அரசும் கொண்டாடுகின்றன. இப்படிக் கொண்டாடப்படும் நாட்களிலேயே பொருத்தமான நாள் என்று இந்த நாளை நாம் சொல்லலாம். ஏனென்றால், இன்றைக்கு இந்திய விவசாயத்தின் தாங்குசக்தியாகப் பெண்களே இருக்கிறார்கள்.
விவசாய வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் - விதைத்தல், நாற்று நடுதல், நீர்ப் பாய்ச்சுதல், தண்ணீர் வடித்தல், உரமிடுதல், பயிர் பாதுகாத்தல், களை பறித்தல், அறுவடை, விளைபொருட்களைப் பத்திரப்படுத்தல் என்று எல்லாப் பணிகளையும் இன்று பெண்கள் செய்கின்றனர். பயிர்ச் சாகுபடி தவிர கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீனளம் ஆகியவற்றிலும் மகளிர் பெரும் பங்கு வகிக்கின்றனர். உணவு தானிய உற்பத்தியில் 60% முதல் 80% வரையும், பால் பண்ணைத் தொழில் உற்பத்தியில் 90%  பெண்களால்தான் நடக்கிறது என்று சொல்கிறது ‘ஆக்ஸ்ஃபாம் இந்தியா’.
ஆனால், பயிர்ச் சாகுபடியிலும் கால்நடை வளர்ப்பிலும் பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படுவதேயில்லை. கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கிராமப்புற கைவினைகளில் பெண்களுக்கு அரசு அளிக்கும் பயிற்சிகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான பெண்களுக்கே பயன்படுகின்றன. விவசாயத்தில் பெண்களைத் தொடர்ந்து ஈர்க்க சரியான கொள்கையும் தொலைநோக்குப் பார்வையும் செய்யக் கூடிய செயல்திட்டங்களும் அவசியம்.
எதிர்கொள்ளும் பெரும் சவால்கள்
 2010-11 வேளாண்மை கணக்கெடுப்பின்படி 11.87 கோடி சாகுபடியாளர்களில் 30.3% பெண்கள். 14.43 கோடி விவசாயத் தொழிலாளர்களில் 42.6% மகளிர். ஆனால், பெண்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்போர் எண்ணிக்கையோ அதிர்ச்சி தருகிறது. 2015-16 கணக்கெடுப்பின்படி நாட்டிலுள்ள 14.6 கோடி நில உடைமையாளர்களில் பெண்கள் வெறும் 13.87% மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில் இது வெறும் 1% மட்டுமே அதிகரித்திருக்கிறது. விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு விரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, பெண் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க அரசு இன்னமும் தயாராகவில்லை.
 எந்த நிலத்தில் பாடுபடுகிறார்களோ அது பெண்களுக்குச் சொந்தமில்லை. இதனால் அதை மேம்படுத்த எந்த உதவியும் பெறாமல் தவிக்கின்றனர். தந்தைவழிச் சமூக அமைப்பால் விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக ஆண்களே பெரும்பாலும் உள்ளனர்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிலிருந்து நிலத்தின் பேரில் கடன் பெற முடியாமல் போகிறது. உலகின் பிற பகுதிகளில், நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பெண்கள் கடன் மூலம் நிலத்தை மேம்படுத்தவும் சாகுபடியைப் பெருக்கவும் முடிந்திருக்கிறது. இந்தியாவிலும் அப்படி நடக்க பின்வரும் நடவடிக்கைகள் அவசியம்.
என்னென்ன செய்ய வேண்டும்?
1. எந்த ஈடும் கேட்காமல் கடன் தரும் முறையை ‘நபார்டு’ முன் முயற்சியில், குறு-நிதி நிறுவனங்கள் மூலம் ஊக்குவிக்க வேண்டும். பெண் நில உடைமையாளர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். கடன் வசதி, நவீன சாகுபடித் தொழில்நுட்பம், நிர்வாகத் திறனில் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டால் பெண்களின் தன்னம்பிக்கை வளரும். விவசாயிகள் சங்கங்களிலோ, அமைப்புகளிலோ பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகமில்லை. அதுவும் மாற வேண்டும்.
2. விவசாய நிலங்களின் விற்பனை, பாகப்பிரிவினை காரணமாக நில உடைமையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. குடும்பங்களிடமிருந்த சராசரி நிலப் பரப்பளவு குறைந்துவிட்டது. எனவே, பெரும்பாலான விவசாயிகள்
2 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளாகத்தான் இருக்கின்றனர். இச்சிறு விவசாயிகளில்தான் பெண்களும் வருகின்றனர். நிலத்தின் அளவு குறையக் குறைய விளைச்சலும் அதன் மூலம் வருவாயும் குறைகிறது. இதனால் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. மகளிர் தன்னிறைவு பெற கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஊக்குவிக்கலாம்.
3. பெண்களுக்கு விவசாயத் தொழில்நுட்பத்தில் பயிற்சி தருவதை மகளிர் சுய உதவிக் குழுக்களும், கூட்டுறவுச் சங்கங்களும் மேற்கொள்கின்றன (ராஜஸ்தானில் சரஸ், குஜராத்தில் அமுல்). இதையே விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும் விரிவுபடுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், விதை, நடவு சாதனங்கள் இயக்கம், தேசிய விவசாய முன்னேற்றத் திட்டம் ஆகியவற்றை மகளிரை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கென்று தனி நிதி ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்.
4. மகளிரும் கையாளும் வகையில் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் புல் அறுத்தல், களையெடுப்பு, சேகரித்தல், பருத்திச் சேகரிப்பு, கால்நடைகளைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெண்கள்தான் அதிகம் செய்கின்றனர். விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு வீட்டு வேலைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டியதாயிருக்கிறது. ஆண் தொழிலாளர்களைவிட அதிக நேரம் வேலை செய்தும் குறைந்த ஊதியம்தான் தரப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்கவோ, ஊதியத்தை உயர்த்துமாறு கோரவோ முடியாத நிலையில் பெண்கள் இருக்கின்றனர். விவசாயக் கருவிகள் சில வேலைகளை எளிதில் செய்ய உதவினாலும் அவை மகளிர் கையாளும் விதத்தில் இல்லை. இதனாலேயே கடினமான வேலைகளை இயந்திர உதவியுடன் ஆண்கள் எளிதாகவும், பெண்கள் கைகளினால் அதிக சிரமத்துடனும் முடிக்க நேர்கிறது. கருவிகளைப் பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க கவனம் செலுத்த வேண்டும். விவசாயக் கருவிகளை வாடகைக்கு விடும் அரசு முகமைகளும் மையங்களும் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தருவதுடன் குறைந்த வாடகையிலும் அளிக்க வேண்டும்.
5. ஆடவர்களுடன் ஒப்பிடும்போது பெண்களால் கடன் வசதி, விதை, உரம், பூச்சிக்கொல்லிகளைப் பெறுவது எளிதாக இல்லை. இவையெல்லாம் பெண்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தியை 2.5% முதல் 4% வரை அதிகரிக்க முடியும்  என்று ஐநாவின் உணவு, வேளாண் அமைப்பு (எப்ஏஓ) தெரிவிக்கிறது. வேளாண் விரிவாக்க சேவைகளைப் பெண் விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தி கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண்டும். மாவட்ட விவசாய மையங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
பெண்களுக்கேற்ப சிந்தியுங்கள்
விவசாய வேலைகளை இப்போது அதிகம் மேற்கொள்வது பெண்களாக இருப்பதால் அவர்களுக்கு சொத்துரிமையை வழங்கி நில உடைமையாளர்களாக்க வேண்டும். நில உடைமையாளர்களாகப் பெண்கள் மாறிவிட்டால் விவசாயக் கடன், விதை, உரம், பூச்சிக்கொல்லிகள், வேளாண் கருவிகள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வது அவர்களுக்கு எளிதாகிவிடும்.
எந்தப் பயிரைச் சாகுபடி செய்வது, எந்தத் தொழில்நுட்பத்தைத் தேர்வுசெய்வது என்பதை நிபுணர்களின் ஆலோசனை, வழிகாட்டல்களோடு பெண்கள் மேற்கொள்ளும்போது விவசாயத்தில் உற்பத்தியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். அத்துடன் விளைந்தவற்றை உள்ளூரில் வியாபாரிகளிடமோ அல்லது மொத்த விலைச் சந்தையிலோ விற்பதை மகளிரே மேற்கொள்ளும்போது இதுவரை கண்ணுக்குத் தெரியாமல், பின்புலத்திலிருந்து பெரிய பங்களிப்பைச் செய்துவரும் பெண்கள் வெளியுலகுக்கு நன்றாகத் தெரிய ஆரம்பிப்பார்கள். பெண்களை அடிப்படையாகக்கொண்டு அரசு சிந்திக்கும்போது இவையெல்லாம் நடக்கும்!
-சீமா பத்லா, ரவி கிரண்
 ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

பொருளாதார நெருக்கடி குறித்த தகவல்கள் தமிழில்

Book 7 - 2019 National Situations S.No Content Page 1 பொருளாதாரத் தேக்கம் உண்மைதான்.. பிரதமர் மோடியி...