Book 7 - 2019
National Situations
S.No
|
Content
|
Page
|
1
|
3
|
|
2
|
உயிரற்ற ஜனநாயகமே நவீன பாசிசம்தீக்கதிர், ஆகஸ்ட் 25, 2019 பேரா.விஜய் பிரசாத் நேர்காணல் |
5
|
3
|
‘மேக் இன் இந்தியா’ தோல்வித் திட்டமே! |
12
|
4
|
மோட்டார் தொழிலை நிர்மூலமாக்கும் மோடி அரசு! - வி.குமார் தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019 |
14
|
5
|
மோட்டார் வாகன சட்டத்திருத்தம் யாருக்காக? - கே.ஆறுமுக நயினார் தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019 |
18
|
6
|
வாங்கும் சக்தியும் அதீத உற்பத்தியும்நமது நிருபர், தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019 |
22
|
7
|
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 971 கோடி டாலர் முதலீடு வெளியேறியது தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019 |
25
|
8
|
இந்து ராஷ்டிரத்தை நோக்கி அமலாகும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் - பூர்ணிமா எஸ்.திரிபாதி |
26
|
9
|
மோட்டார் வாகனத் துறை போல் நுகர்பொருள் வணிகமும் சரியும் அபாயம் வரி பயங்கரவாதத்தின் உச்சம் |
30
|
10
|
உண்மையை களவாடும் கார்ப்பரேட் அரசியல்! -எம்.கண்ணன் தீக்கதிர், ஆகஸ்ட் 22, 2019 |
32
|
11
|
இது தேசத் துரோகம் இல்லையா? தீக்கதிர், ஆகஸ்ட் 22, 2019 |
38
|
12
|
பாதுகாப்புத்துறை கார்ப்பரேட்மயம் மக்களின் பாதுகாப்பிற்கும் வேட்டு - கே.சி.கோபிகுமார் |
40
|
13
|
தொழில்துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தனியார்மயமாக்குவது ஆபத்து தீக்கதிர், ஆகஸ்ட் 19, 2019 |
44
|
14
|
வச்ச குறி... முதலும் கடைசியுமாய்... -க.சுவாமிநாதன் |
47
|
15
|
ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி ஆபத்தான அறிகுறி... நாடு பொருளாதார தேக்க நிலையில் இருப்பதற்கு இதுவே உதாரணம் தீக்கதிர், ஆகஸ்ட் 18, 2019 |
52
|
16
|
இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?
மக்கள் விடுதலை, 24 Aug 2019
|
55
|
17
|
காஷ்மீருக்காக
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா!
|
63
|
18
|
வலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்! By Pugazharasi
S August 25, 2019
|
65
|
19
|
பொருளாதார வீழ்ச்சி பாடம் கற்குமா மோடி அரசு? -கே.பாலகிருஷ்ணன் தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019 |
68
|
20
|
ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தியாவின் 7 வங்கிகள்! |
73
|
21
|
ஆபத்தான நிலையில் இந்திய வங்கிகள்.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..!
By Prasanna Venkatesh
Krishnamoorthy August 24, 2019
|
74
|
22
|
கழுத்தை
நெறிக்கும் கடன்..! உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..!
By Gowthaman Mj Updated: Friday, August
23, 2019
|
75
|
23
|
படு
வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் துறை.. அதள பாதாளம் நோக்கி சென்ற பங்குகள்.. கதறும்
முதலீட்டாளர்கள்! By
Pugazharasi S August 21, 2019
|
76
|
24
|
“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்”: பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்! 21 August 2019 |
78
|
புதுதில்லி:
“70 ஆண்டுகளில் இல்லாத
அளவிற்கு கடும் பணப்புழக்க நெருக்கடியில் இந்திய நாடு தள்ளப்பட்டுள்ளது; முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது” என்றுநிதி
ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் கூறியது, பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நாடு முழுவதும்
விவாதங்கள் முன்னுக்கு வந்தன. மேலும்அது மோடி ஆட்சிக்கு எதிராக, தீ போலபரவியது. மத்திய பாஜக ஆட்சியில் நாடுபின்னோக்கிச் செல்வதற்கு,
நிதி ஆயோக் அதிகாரி ராஜீவ் குமாரின் நேர்காணலே சாட்சி என்று எதிர்க்கட்சிகள்
கூறின.இதனால், பதறிப்போன மத்திய அரசு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் உடனடியாக பத்திரிகையாளர்
சந்திப்பை நடத்தி, “நாட்டின்பொருளாதாரம் சிக்கலில்
இருப்பதாககூறுவதெல்லாம் தவறு; எல்லாம் சிறப்பாகவே உள்ளது”
என்று முழுப்பூசணிக் காயையும் சோற்றுக்குள் மறைத்து, முதலீட்டை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில், சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பாஜக-வினரோ, நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை சமூகவலைத்தளங் களில் வேகவேகமாக
பரப்பியதுடன், அதனை மறுக்கும் பொருளாதார வல்லுநர்களுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் கூறுவது மட்டும் உண்மை; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பொய்யா? என்று மோதலில் இறங்கினர்.பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார
ஆலோசனைக்குழு உறுப்பினராக இருப்பவர் ஷாமிகா ரவி. இவருடன், அத்வைத் என்ற ட்விட்டர் பயனாளிஒருவர், “பிரதமரின்
பொருளாதார ஆலோசகரான நீங்களும் இந்திய பொருளாதாரத்தில், வீழ்ச்சி
இருப்பதாக கருதுகிறீர்களா?” என்று கேள்வி
எழுப்பியிருந்தார்.ஆனால், அவர் எதிர்பாராத வகையில்,
ஷாமிகா ரவியும் “இந்தியாவில்
பொருளாதாரத் தேக்க நிலை இருப்பதுஉண்மைதான்” என்று பதில்
போட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். “கட்டமைப்பு பொருளாதார மந்த நிலையை நாங்கள் (இந்திய நிதித்துறை) எதிர்
கொண்டு வருகிறோம்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
ஒப்புக் கொண்டுள்ளார்.“தற்போதைய தேக்க நிலையை சமாளிக்க,
அனைத்து அமைச்சகங்களுக்கும் இலக்கு நிர்ணயித்து தேசிய அளவிலான
வளர்ச்சி திட்டத்தை வகுக்க வேண்டும்” என்ற வேண்டுகோள்
ஒன்றையும்விடுத்துள்ள ஷாமிகா ரவி,“பொருளாதாரத்தில் பெரிய
சீர்திருத்தங்கள் வேண்டும்” என்றும் “பொருளாதாரத்தை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது ஒரு நிறுவனத்தின்
வளர்ச்சியைக் கணக்குத் துறையிடம் கொடுப்பது போலஉள்ளது” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.இந்தியா பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக,
சில நாட்களுக்கு முன்புதான், ரிசர்வ்
வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இவர் மோடி அரசின்
பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர். பொருளாதார அறிஞராக
கருதப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இதுதொடர்பாக
எச்சரிக்கைகளை செய்திருந்தனர்.ஆனால், பிரதமர் மோடியால்
நியமிக்கப்பட்ட நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், பொருளாதார
ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷாமிகா ரவிஆகியவர்களே, நாட்டின்
பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருப்பது, பாஜக தலைமை மட் டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாமிகா ரவி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக மட்டுமின்றி, ‘ப்ரோக்கிங்ஸ் இந்தியா திங்டேங்க்’ ஆய்வு
நிறுவன இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமரின் பொருளாதார
ஆலோசனைக்குழு தலைவரான பிபெக் தெப்ராயின் கருத்தும் இதுவாக உள்ளது. பிபெக்தெப்ராய்
அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “சரக்கு
மற்றும் சேவை வரி கவுன்சில் (ஜிஎஸ்டி) இந்த பொருளாதார மந்த நிலை, மாறக்கூடியதா அல்லது கட்டமைப்பு சார்ந்ததா? என்பதை
ஆலோசிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரற்ற ஜனநாயகமே நவீன பாசிசம்
தீக்கதிர், ஆகஸ்ட் 25, 2019 பேரா.விஜய் பிரசாத் நேர்காணல்
உலகின் தலைசிறந்த மார்க்சிய ஆய்வாளர்களில்
ஒருவரும், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் ‘லெப்ட் வேர்டு’ புத்தக நிறுவனத்தின் முதன்மை ஆசிரியரும், சர்வதேச
சமூகவியல் ஆராய்ச்சி மையமான ‘டிரைகாண்ட்டினண்டல்’ அமைப்பின் இயக்குநருமான பேராசிரியர் விஜய் பிரசாத், சர்வதேச நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில்
ஆய்வு செய்து தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது தொடர் கட்டுரைகள் ஆங்கிலம்,
பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ், கிரீக் ஆகிய மொழிகளில் இணைய
ஏடுகளிலும் அச்சு ஏடுகளிலும் வெளியாகி வருகின்றன. தமிழிலும் தீக்கதிர்
வெளியிடுகிறது. பேரா.விஜய் பிரசாத் சமீபத்தில் பிரேசில் சென்றிருந்தார்.
பிரேசிலில் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களாக இருந்த லூலா, அவரைத் தொடர்ந்து டில்மா ரூசெப் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தனர்.
இவர்களது ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான
வலதுசாரி சக்திகள் அராஜகமான முறையில் ஜனநாயக சீர்குலைவில் ஈடுபட்டு, லூலா மீதும் டில்மா மீதும் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளை புனைந்து
அவர்களது ஆட்சியை கவிழ்த்தனர். தற்போது பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி அராஜகவாதியான
ஜெயிர் பொல்சானரோ ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். பிரேசிலை தீவிர வலதுசாரிப்
பாதையில் கொண்டு செல்லும் அவர், இதுவரையிலும் தொழிலாளி
வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை ஈவிரக்கமின்றி பறிக்கவும், அடக்குமுறைகளை ஏவவும் தயங்காதவராக இருக்கிறார். உலகின் மாபெரும்
காலநிலை பாதுகாப்பு மண்டலமான அமேசான் காடுகளை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப
வேட்டைக்கு திறந்து விட்டிருக்கிறார். பிரேசிலில் ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்
நிறுவ முயல்கிறார். இதை எதிர்த்து பிரேசில் தொழிலாளி வர்க்கம் உறுதியோடு
போராடுகிறது. பிரேசில் உழைக்கும் வர்க்கத்தின் ஜன்னலாக திகழ்கிறது. அவர்கள் 2003ஆம் ஆண்டு உலக சமூக மாமன்றம் எனும் மாபெரும் மாநாட்டை நடத்திய போது
துவக்கிய “பிரேசில் டி பேட்டோ” எனும்
பத்திரிகை. ‘பிரேசில் டி பேட்டோவுக்கு’ பேரா.விஜய் பிரசாத் அளித்த விரிவான நேர்காணலின் முக்கிய அம்சங்கள்
இங்கு தரப்படுகின்றன: (தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்)
·
கேள்வி:
பிரேசிலின் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோவின் அரசாங்கத் தைப் பற்றி உலக மக்கள்
என்ன கருது கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
பதில் : பொல்சானரோ போன்ற நபர்கள் சற்று ஏளனப் புன்னகையுடனே மக்களால்
பார்க்கப்படுபவர்கள். இவர்களது செயல்பாடு கள் நையாண்டி செய்யத்தக்க தன்மையுடை யவை
போல தோன்றும். டொனால்டு டிரம்ப், பொல்சானரோ, தற்போதைய பிரிட்டிஷ் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்களை
சொல்லலாம். ஆனால் இவர்கள் கொடூரமான ரவுடித்தனம் நிறைந்த கோமாளிக் குணம்
படைத்தவர்கள். இவர்களது செயல்பாடு களைப் பற்றி ஜனநாயகம் பேசுபவர்கள் மட்டுமல்ல,
தாராளவாதிகள் மட்டுமல்ல, எல்லோருமே
எரிச்சலுடனும் எச்சரிக்கை யுடனும் விமர்சிக்கிறார்கள். உலகில் இரண்டு இடங்கள்
கரியமில வாயுவின் தாக்கம் மிகுந்து புவி வெப்பமடைந்து மூழ்கிப் போகும் நிலையில்
இருக்கின்றன. ஒன்று, பாப்புவா தீவுகள். இதில்
மேற்கு பாப்புவா மற்றும் பாப்புவா நியூ கினியா ஆகிய இரண்டுமே அடங்கும். மற்றொன்று,
அமேசான். அமேசான் காடுகளை கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு
திறந்து விட பொல்சானரோ தீர்மானித்தபோது, இந்த உலகம்
உண்மையில் அதிர்ச்சியில் உறைந்துதான் போனது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூட
பொல்சானரோவின் அமேசான் கொள்கையை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறது.
பொல்சானரோவின் செயல்கள் கோமா
ளித்தனமாக இருக்கலாம். ஆனால் பயங்கர மானவை. அமேசானை அழித்துவிட்டால் உலகமே அழிவின்
பிடியில் சிக்கும். இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் கவலையோடும் நாம் குரல்
எழுப்புகிறோம்.
·
கேள்வி: கடந்த பத்தாண்டுகளில்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா
ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் (BRICS) பிரபலமாக
பெயர் பெற்று வந்தது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்குக்கூட
பிரிக்ஸ் அமைப்பு முன்னேறி வந்தது. இப்போது டிரம்ப்புக்கு மிக நெருக்கமான நபராம்
பொல்சானரோ பிரேசில் ஜனாதிபதியாகியிருக்கும் சூழலில் பிரிக்ஸ் கதி என்னவாகும்?
பதில் : நாடுகளின் கூட்டமைப்புகளை நாம் ஒருபோதும் மிகைப்படுத்திப் பார்க்க
வேண்டியதில்லை. பிரிக்ஸ் அமைப்பும், அதில் இடம் பெற்றுள்ள
வேறுபட்ட நாடுகளின் அரசாங்கங்களது வர்க்க குணாம்சத்தின் அடிப்படையிலே செயல்பட்டது.
பிரிக்ஸ் அமைப்புக்கு முன்பு இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மட்டும் இணைந்த ‘இப்சா’ (IBSA) எனும் அமைப்பு இருந்தது.
இப்போதும் அது இருக்கிறது. இந்த மூன்று நாடுகளில் சமூக ஜனநாயக கட்சிகள்
ஆட்சியிலிருந்தன. மூன்றும் ஒரே குரலில் மருந்துப் பொருட்கள் பரிவர்த்தனை முதல்
விவசாய மானியம் வரை சர்வதேச அரங்கில் எழுப்பின. இந்த நாடுகளின் மக்க ளுக்கு
போதுமான மருந்துகளும் சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்றும், பல்வேறு உலக நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளால் தங்களது நாடுகளின்
விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் பேசி வந்தன. அது 2003ஆம் ஆண்டு.
பின்னர் 2009ல் பிரிக்ஸ் உதயமானது. இந்த அமைப்பும் விவசாயிகளின் மானிய வாய்ப்புகளை
பாதுகாப்பது, பரஸ்பரம் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்வது
என்ற அடிப்படை நிகழ்ச்சி நிரலுடன் இயங்கியது. ஆனால் இப்சாவைப் போல் அல்லாமல்
பிரிக்ஸ் அமைப்பு அந்தந்த நாடுகளின் ஆளும் வர்க்க - செல்வந்த கார்ப்பரேட்டுகளின்
குரலை யும் எதிரொலித்தன. அதே வேளையில் உலக ளாவிய முறையில் தெற்கு நாடுகளின்
வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்தன. பிரிக்ஸ் அமைப்பில்
சோசலிச சீனா உறுப்பு நாடாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும்
அதனதன் வர்க்க குணாம்சத்திற்கேற்பவே பிரிக்ஸ் அமைப்புக்குள் செயல்பட்டன. பிரேசில்
பெரும் கார்ப்பரேட் வர்த்தகர்கள் இந்திய சந்தைகளுக்குள் நுழைய விரும்பு கிறார்கள்.
எனவே இதற்குள் அவரவர் நலன்கள் அடங்கியிருக்கிறது. இது வெறுமனே ஒரு அரசியல்
கருவியாக மட்டும் செயல்பட வில்லை. சர்வதேச அரங்கில் பன்முகத்தன்மை என்ற அரசியலை
முன்வைக்க மட்டும் பிரிக்ஸ் செயல்படவில்லை. வர்த்தகத்திற்காகவும் செயல்படுகிறது.
அதற்குள் ராணுவ நலன்கள், ஆயுத பேரங்கள் எல்லாம்
இருக்கின்றன. எனவே பிரிக்ஸ் அமைப்பு கலைந்து விடாது.
·
கேள்வி : உலகின் வெவ்வேறு
பிராந்தியங்களில் தீவிர வலதுசாரிகள் முன்னேறியிருக்கிறார்கள். இதன் விளைவாக
தற்போது “பாசிசம்” என்ற பதத்தைப் பற்றி விவாதம் தீவிர மடைந்திருக்கிறது. 20ஆம் நூற்றாண் டின் துவக்கத்தில் இத்தாலியில் உரு வான பாசிசம்
என்பதையும் தற்போது உருவாகியிருக்கக்கூடிய தீவிர வலதுசாரி அரசாங்கங்களையும் ஒப்பிட
முடியாது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள், அன்றைக்குத் தோன்றிய பாசிசத்திற்கும் தற்போதைய தீவிர வலதுசாரி
ஆட்சியாளர்களின் செயல்பாடு களுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும்,
எனவே பாசிசம் என்று பெயரிட்டு அழைப் பதை விட வேறு பொருத்தமான
சொல் இல்லை என்றும் கூறுகிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில் : இந்த விவாதங்கள் மிக முக்கியமான வை. நீங்கள் சரியாக ஆய்வு
செய்திருக்கிறீர்க ளா என்பது இதில் முக்கியமில்லை. தற்போ தைய சூழ்நிலைமையை நாம்
எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதை இந்த விவாதங்கள் தெளிவுப்படுத்துகிறதா
என்பதுதான் முக்கியம். நாம் ஏன் 1920 களுக்கும் 1930களுக்கும் பயணிக்கிறோம்; அன்றைக்கு என்ன
நடந்தது என்பதைப் பேசுகிறோம் என்றால், ஒரு ஜன நாயகக்
கட்டமைப்பிற்குள் சர்வாதிகாரம் அல்லது எதேச்சதிகாரம் எப்படி செயல்படும் என நாம்
புரிந்து கொள்ள விரும்புகிறோம் என்பதால்தான். பெனிட்டோ முசோலினியும், அடால்ப் ஹிட்லரும், ஜனநாயகத்தின் மூலம்தான்
அதிகாரத்திற்கு வந்தார்கள். வாக்குப்பெட்டி மூலம்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.
பிறகு அவர்கள் சமூகத்தில் எதேச்சதிகார அரசியலை மிகத் தீவிரமாகவும், ஆழமாகவும் திணித்தார்கள். ஆனால் ஹிட்லரும் முசோலினியும் உரு
வாக்கிய பாசிசமும் நாஜிசமும் இன்றைய நிலைமையோடு ஒப்பிடும்போது முற்றிலும் வேறானவை.
அன்றைக்கு அவர்களது பிர தான பணி என்னவாக இருந்தது என்றால், முதலாளிகளிடமிருந்தும் நிலப்பிரபுக்களிடமி ருந்தும் அவர்களுக்கு
தரப்பட்ட பணி என்ன வாக இருந்தது என்றால், அன்றைக்கு மிகப்
பிரம்மாண்டமாக எழுந்துவந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அடித்து நொறுக்கி முற்றாக
அழிப்பதுதான். 20ஆம் நூற்றாண்டின் துவக் கத்தில்
அதிகாரத்தைக் கைப்பற்றிய நாஜிக ளுக்கும், பாசிச
சக்திகளுக்கும் கொடுக்கப்பட்ட முதன்மையான பணி அதுதான். ஆனால் இன்றைக்கு தொழிலாளர்
வர்க்க இயக்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. எனவே முதலாளித் துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள், “ஏ பாசிஸ்ட்டு களே,
மீண்டும் அதிகாரத்திற்கு வாருங்கள், தொழிலாளர்
இயக்கத்தை அழித்து விடுங்கள்” என்று உத்தரவு போட வேண்டிய
அவசியம் இல்லை. அப்படி ஒரு சூழல் இன்று இல்லை. இன்றைய தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி
எதன் அடிப்படையிலானது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
நவீன தாராளமய காலம் இது. இந்த
காலகட்டத்தில் நவீன தாராளமயக் கொள்கை யானது இரண்டு பெரும் தாக்கங்களை ஏற்
படுத்தியிருக்கிறது. ஒன்று, உண்மையிலேயே தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் சமூ கத்தின் அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள்
தங்களை அணிதிரட்டிக் கொள்ளும் சக்தியை பலவீனப்படுத்தியிருக்கிறது. அதாவது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி
குறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர்கள்
தங்களைத்தாங்களே அணி சேர்த்துக் கொள்கிற, ஒன்று திரட்டிக்
கொள்கிற சக்தியையே நவீன தாராளமயக் கொள்கை பலவீனப்படுத்தியிருக்கிறது. இது
முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனவே இப்போது நாம் வலு குறைந்த
விவசாய மற்றும் தொழிலாளர் சங்கங்களையே பெற்றிருக்கிறோம். இது, முதலாளித்துவ சக்திகளுக்கு மிக மிக சாதகமான - தொழிலாளி யையும்
விவசாயியையும் அட்டையாய் உறிஞ்சு கிற - வாய்ப்பினை உருவாக்கிக்
கொடுத்திருக்கி றது. இப்படித்தான் இந்த காலகட்டத்தில் முதலாளி வர்க்கம் மேலும்
மேலும் செல்வ வளங்களைக் குவித்திருக்கிறது.
இதுபற்றி பொருளாதார அறிஞர்
தாமஸ் பிக்கெட்டி விரிவான விபரங்களை அளித்திருக்கி றார். வருமான ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத் தாழ்வு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த ஏற்றத் தாழ்வு மேலும் மேலும் ஆழமாவதைப் பார்த்து முதலாளி வர்க்கம்
உண்மையில் கவலைப்படு கிறது. ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்தால், சமூ கத்தில் அமைதியின்மையும் கிளர்ச்சிகளும் அடுத்தடுத்த விளைவுகளும்
வெடித்தெழும் என்று முதலாளித்துவம் அஞ்சுகிறது. பல நாடுகளில் அதைப் பார்க்கிறோம்.
மக்கள் சமூகங்கள் கொதித்து எழுகின்றன. உணவுக் கலவரங்கள் நடக்கின்றன. சமூகத்தில்
செல்வ வளங்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கிறது.
இந்தக் கட்டத்தில்தான் வலதுசாரி சித்தாந்தம் தனது தலையீட்டை கூர்மைப்
படுத்துகிறது. சமூகத்தில் செல்வ வளங்களை குவித்து வைத்திருக்கக்கூடிய நபர்கள் -
அதாவது முதலாளித்துவ அதிகார வர்க்கங்கள், தங்களுக்கு
எதிரான மக்கள் சமூகங்களின் எழுச்சி, கிளர்ச்சி
போன்றவற்றுக்குக் காரணம் அந்த மக்கள் சமூகங்களுக்குள் இயங்குகிற முற்போக்கு
சக்திகள், பெண்ணியவாதிகள், சிறுபான்மை
மக்கள்- இவர்கள் தான் என்று கருதுகின்றன. அவர்களுக்கெதிராக குறி வைக்கின்றன.
அவர்களுக்கெதிராக மக்கள் சமூகங்களுக்குள்ளேயே சித்தாந்த ரீதியாக தாக்குதல்களை
திருப்பி விடுகின்றன. அகதிக ளாக வந்தவர்கள், ஓரிடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு பிழைக்க வந்தவர்கள் இவர்களை யெல்லாம் அந்தந்த பகுதிகளின்
மக்கள் சமூ கத்திற்கு எதிரிகள் என்று அடையாளப்படுத்து கின்றன. பிழைக்க
வந்தவர்களால்தான் உள்ளூரில் உனது வேலை பறிபோய்விட்டது என்று தூண்டி விடுகின்றன.
ஒட்டுமொத்த சமூகத்தின் மீது தங்களது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பேணுவதற்காக
இத்தகைய வலதுசாரி சித்தாந்த கருத்துக்களை நவீன தாராளவாத முதலாளிகள் மற்றும்
கார்ப்பரேட் செல்வந்தர்கள் அன்றாட அரசியல் நடவடிக்கை களுக்குள் புகுத்துகிறார்கள்.
ஆனால் ஏற்றத்தாழ்வுக்கும்
வாழ்வாதா ரங்கள் சீர்குலைந்ததற்கும் மேற்கண்ட நவீன தாராளவாத சக்திகள்தான் காரணம்
என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. இந்த
நிலையில்,
ஏற்கெனவே இடதுசாரிகளும் பலவீனமான உள்ள சூழலில், வலதுசாரி சக்திகள் தீவிர வலதுசாரிகளாக உரு வெடுக்கிறார்கள். அவர்கள்
எதேச்சதிகார வலது சாரிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்கி றார்கள்.
நவீனதாராளவாதிகள் ஏற்னெவே நடைமுறைப்படுத்திய அனைத்தையும் தங்கள் வசப்படுத்திக்
கொள்கிறார்கள். நவீன தாராள வாதிகளின் பிரச்சார உத்தியையும் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.
அனைத்து சக்தி களையும் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள்.
எனவே இப்படித்தான் நவீன
எதேச்சதிகாரி கள் - அதாவது நவீன பாசிஸ்ட்டுகள் அதிகா ரத்திற்கு
வந்திருக்கிறார்கள். இவர்கள் 20ஆம் நூற்றாண்டின்
துவக்கத்தில் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது போல அதே வழியில் வரவில்லை.
வேறுபாடு இருக்கிறது. இவர்கள், 20ஆம் நூற்றாண்டில்
பாசிஸ்ட்டுகள் செய்ததுபோல ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்க வேண்டிய தேவையில்லை.
மாறாக ஜனநாயக நிறுவனங்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். ஜனநாயக நிறுவனங்க ளை
அவர்கள் ஒன்றுமில்லாத இடமாக, வெற்றுப்பாத்திரமாக வைத்துக்
கொள்கிறார் கள். தேர்தல் நடத்தப்படும். நாடாளுமன்றம் இருக்கும். எல்லாமே
இருக்கும். சர்வாதிகாரம் என்று செல்லவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனென்றால்
ஜனநாயகம் என்ற கோட்பாட்டையே அவர்கள் வெறுமையானதாக மாற்றி, உயிரற்றதாக மாற்றி விடுவார்கள். எதேச்சதிகாரத்தையும் தங்களது வலதுசாரி
சித்தாந்த நிலைபாட்டையும் ஒன்றிணைத்து அதன் மூலம் வெற்று ஜனநாயகம், வெற்று ஊடகம், வெற்று விவாதம் என அனைத்தை யும்
ஒன்றுமில்லாததாக மாற்றுவார்கள். இப்படித் தான் இன்றைய தீவிர வலதுசாரி சக்திகள்
அரசி யலை முழுமையான வலதுசாரி சுழலுக்குள் கொண்டு வருவார்கள். எனவே இது,
20ஆம் நூற்றாண்டின் துவக்கத் தில் இந்த உலகம் பார்த்ததை விட வேறு
வடிவத்திலான பாசிசம். எனவே இதைப்பற்றி இன்னும் கூர்மையான முறையில் நாம் ஆய்வு
செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் திட்டவட்டமாக நிலவுகிற சூழ்நிலைமைகள்
குறித்து திட்டவட்டமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
·
கேள்வி : பிரேசிலில் புதிய
ஆட்சியாளர்களால் மிகக் கடுமை யாக குறிவைக்கப்பட்டு தாக்குத லுக்குள்ளாகியிருப்பது
தொழிற் சங்கங்கள்தான். இந்தியாவிலும் 90 சதவீதம் தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என்ற நிலையில்
இருக்கிறார்கள். சங்கமாக மாற்றப்பட்ட தொழிலாளர்களின் விகிதம் மிகக் குறைவாக
இருக்கிறது. அப்படியானால், தொழிற்சங்கம் என்ற
கட்டமைப்பிற்கு வெளியே தொழிலாளர்களை அணிதிரட்டுவது பற்றி யோசிக்க வேண்டிய நிலை
எழுந்துள்ளதா? வழக்கமான சங்க அமைப்பு அல்லது தொழிற்சாலை
அளவிலான சங்க அமைப்பு என்பதற்கு வெளியே தொழிலாளர் களை அணிதிரட்ட மாற்று வழி உள்ளதா?
பதில்: சங்கமாக மாற்றுவது அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குவது என்பதே
தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது என்று அர்த்தமல்ல. தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது
என்பது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில்
நம்பிக்கையைக் கட்டுவது, அதன்மூலம் அவர்களது பேர சக்தியை
வலுப்படுத்துவது என்பதுதான். நமது இலக்கு ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பது அல்ல. மாறாக,
சங்கம் மூலமாக அணி திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக சவால்
விடுவதற்கும் அதை முறியடிப்பதற்கும் பலம் பொருந்தியதாக மாறுகிறதா என்பதுதான். எனவே
ஒரு சங்கத்தை உருவாக்குவது மட்டுமே போது மானது அல்ல.
சங்கம் அமைப்பது மிகவும்
முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதுமட்டுமே இலக்கு அல்ல.
சங்கங்கள் என்பவை, தொழிலாளி வர்க்கத்தின்
சக்தியை வலுப்படுத்துவதற்கான ஒரு வடிவம் மட்டுமே. இன்றைய நிலைமையில் உற்பத்தி
மையங்க ளில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது என்பது நாளுக்குநாள் கடினமானதாக மாறிக்
கொண்டிருக்கிறது என்பதை சங்கங்கள் உணர்கின்றன. தொழிற்சாலை கள் சிறைச்சாலைகளைப் போல
செயல்படு கின்றன. வேலை நாள் என்பது கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டதாக
மாற்றப்பட்டிருக்கிறது. தடுப்பு அரண்களுக்குள் ளே இருப்பதுபோல தொழிலாளர்கள் வேலை
பார்க்கிறார்கள். நீங்கள் கழிவறைக்குச் செல்ல முடியாது; உங்கள்
இருக்கையிலிருந்து வேறெங்கும் திரும்ப முடியாது; ஒரு
தொழிலாளி மற்றொரு தொழிலாளியோடு பேச முடியாது. எல்லோரும் கண்காணிப்பின் கீழே வைக்
கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் அதி வேக உற்பத்தியை ஈட்டுவதற்காக ஈவிரக்க
மற்ற முறைகளைக் கொண்டதாக மாற்றப் பட்டுள்ளன. எனவே தொழிற்சங்கங்கள் தொழிலாளியோடு
தொழிற்சாலையில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தொழிலாளியை எங்கு சந்திப்பது,
எப்படி அணி திரட்டுவது என்று சிந்திக்கத் துவங்கியுள்ளன.
தொழிலாளி வாழும் இடத்தில் சந்தித்து அணி திரட்டலாம் என்ற யோசனைக்கு வரு கின்றன.
ஏனென்றால் நமது நோக்கம் தொழி லாளர்களை அணி திரட்டுவது என்பதுதான். இப்போது
நீங்கள் தொழிலாளர்கள் வாழும் இடத்தில் அவர்களை அணி திரட்டினால், அவர்கள் அந்தப் போராட்டத்தை தொழிற்சா லைக்கு எடுத்துச் செல்வார்கள்.
தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்களை சங்கம் சேர்க்க முடியவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் இன்னும் ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். எப்படி
தொழிலாளர் சக்தியை கட்டி அமைப்பது என்பதில் புதிய புதிய வடிவங்களை ஆலோசிக்க
வேண்டும்.
தொழிற்சாலையிலேயே அல்லது
பொருள் உற்பத்தி செய்யும் இடத்திலேயே தொழிலா ளர்களை அணி திரட்டுவது முக்கியம்தான்.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், நீங்கள்
எங்கு வேண்டுமானாலும் அவர்களை சங்கத்திற்குள் அணி திரட்ட முடியும்; எங்கு வேண்டுமானாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் உருவாக்க முடியும்; எல்லா
இடங்களிலும் அவர்கள் தங்களது பலத்தை உணர்ந்து விட்டால் அந்த அனுபவத்தை அவர்கள்
நேரடியாக தொழிற்சாலைக்குள் எடுத்துச் செல்வார்கள். எனவே தொழிற்சங்கங்கள் புதிய
புதிய வடிவங்களை, நடைமுறைகளை பரீட்சித்துப் பார்த்து
வருகின்றன.
எனவே உலகளாவிய முறையில்
தற்போது தெளிவாக, மிகத் தெளிவாகத் தெரிவது
என்னவென்றால், நவீன தாராளவாதமும் எதேச்சதிகாரமும்
ஒன்றிணைந்த ஒரு ஒட்டுரக நவீன பாசிசம் தலைதூக்கி இருக்கிறது. இந்த ஒட்டுரக நவீன
பாசிசம் தொடுத்திருக்கிற போர், ஜனநாயகத்தின் உயிரைப்
பறித்து விடும். ஒட்டுமொத்த பூவுலகிற்கும் இது எதிரானது. இந்த போரின்
அடிப்படைநோக்கம் பெரும் செல் வந்தர்களின் அரசாங்கத்திற்கு, ஆதிக்கத்திற்கு சேவகம் செய்யும் விதத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக
நடைமுறைகளையும் அதன் அடிப்ப டைகளையும் முற்றாக நிர்மூலமாக்குவது என்பதுதான். அதை
எதிர்த்து தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாய
வர்க்கத்தையும் அணி திரட்ட பழைய வடிவங்கள் மட்டுமே போதாது. புதிய புதிய
வடிவங்களில் புதிய புதிய முனைப்புகளுடன் முன் செல்ல வேண்டும். நமது நோக்கம் இந்தப்
போரில் வெல்வதற்கான சக்தியைப் பெறுவதுதான்.
‘மேக் இன் இந்தியா’ தோல்வித் திட்டமே!
மும்பை:
மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’, ஒரு தோல்வியடைந்த திட்டம்;
இதன் மூலம் தொழில்களும் வரவில்லை; வேலைவாய்ப்பும்
உருவாகவில்லை என்று ‘எல்’ அண்ட் ‘டி’ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக், கூறியுள்ளார்.“இந்தியா தற்போது
பொருட்களுக்குப் பதிலாக, வேலைகளை ஏற்றுமதி செய்து
கொண்டிருக்கிறது” என்றும் கிண்டலாக, தனது வருத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார்.லார்சன் அண்ட் டூப்ரோ
லிமிடெட் (எல் அண்ட் டி) நிறுவனத்தின் தலைவரான ஏ.எம். நாயக், பொது - தனியார் கூட்டாண்மை தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின்
(என்.எஸ்.டி.சி.) தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், இந்தியாவின்
கடந்த 5 ஆண்டுகால தொழில், வேலைவாய்ப்பு,
பொருளாதார வளர்ச்சி குறித்து,விரிவான
நேர்காணல் ஒன்றை அண்மையில் வழங்கியுள்ளார். அதில், அவர்
கூறியிருப்பதாவது:
“பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து நிறையப்
பேசப்படுகிறது. ஆனால், அதில் நாம் இன்னும் நிறைய செய்ய
வேண்டும். தற்போது, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப்
பதிலாக வேலைகளை ஏற்றுமதி செய்கிறோம். இதற்கான காரணம் என்ன என்பதைஆராய வேண்டும்.
பெரும்பாலான நிறுவனங்கள் இங்கே, உற்பத்தி செய்வதை விட
இறக்குமதி செய்யவே ஆர்வமாக உள்ளன. இந்திய நிறுவனங்களுக்குப் போதிய நிதியாதாரம்
இல்லை. இறக்குமதிக்கு இதுவும் ஒரு காரணமாகும். அதாவது, இறக்குமதி
பெரும்பாலும் கடன்வசதியை அளிப்பதால், அது எளிதாக
இருக்கிறது.உலகில் மிக அதிகமான இளைஞர் களைக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாஉள்ளது.
ஆனால், அவர்களுக்குப் போதியவேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு
ஆண்டும் வேலைச் சந்தையில் நுழையும்1 கோடிக்கும் அதிகமான
இளைஞர் களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், அண்மையில் வெளியான வேலைவாய்ப்பு தொடர்பான
ஆய்வறிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ற வேலைவாய்ப்புக்களை
உருவாக்கவில்லை என்று கூறுகிறது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும்
தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் 2008-இல்
அமைக்கப்பட்ட என்.எஸ்.டி.சி.யின் 2018-ஆம் ஆண்டு
அறிக்கையின்படி, 11 ஆயிரத்து 35 பயிற்சி
மையங்கள் மூலம் 3.98 மில்லியன் மாணவர்களுக்குப் பயிற்சி
அளித்தது. ஆனால், இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் வெறும் 12
சதவிகிதம் பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. பலவீனமான நுகர்வு
மற்றும் தனியார் முதலீட்டின் பின்னணியில் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3 மாதங்களில்,
பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகிதமாகக்
குறைந்துள்ளது. இந்தவளர்ச்சி, சில மதிப்பீடுகளின்படி
நடப்புநிதியாண்டில் மேலும் பலவீனம் அடையக்கூடும். வேலைவாய்ப்புக்களை உருவாக்க
குறிப்பாக உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், அது நமது நாட்டில் நடக்கவில்லை.
தற்போது, இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை கிட்டத்தட்ட
ஒரே மாதிரியாக இருப்பதால், சீனாவுக்குச் சமமானபொருளாதாரம்
நமக்குத் தேவை. சீனா சராசரியாக 12 முதல் 13 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அந்த அளவிற்கான
வளர்ச்சி தேவை. அவ்வாறு இல்லையெனில், வேலைகள் பற்றாக்குறை
தொடர்ந்து கொண்டே இருக்கும். மத்திய - மாநில அரசுகள், கடுமையான
நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்
நடந்து வரும் வர்த்தகப் போரை, வியட் நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்கூட பயன்படுத்திக் கொண்டன. ஆனால், இந்தியா அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. என்னிடம் இந்த விஷயம்
விடப்பட்டிருந்தால், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி
சார்ந்த வணிகத்தை, எவ்வாறு இந்தியாவுக்கு கொண்டு வருவது
என்பது குறித்து, நான் ஒரு தனிஅமைச்சகத்தையே உருவாக்கி
இருப் பேன்.இவ்வாறு ‘எல்’ அண்ட் ‘டி’ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக்,
கூறியுள்ளார்.
தற்போது மோடியின் 2-ஆம்
ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டியிருக்கிறது.
இதனால் ஆட்டோமொபைல் உட்பட ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்து
தொழிலாளர்கள் கொத்து கொத்தாக வெளியேற்றப்படுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.
மோட்டார்
வாகனச் சட்டம்
கடந்த முறை மத்தியில்
ஆட்சியி லிருந்த மோடி அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை எப்படியா
வது நிறைவேற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீவிரம் காட்டியது. இந்த
மசோதா சட்டமானால் எந்த அளவுக்கு மக்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து,
மக்களுக்கும் உணர்த்தி, அதற்கு
எதி ராக மிகப்பெரிய இயக்கத்தை நாடுமுழு வதும் சிஐடியு உள்ளிட்ட மத்திய
தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தின. அதோடு இரண்டு முறை வேலை நிறுத்த போராட்டமும்
நடைபெற்றது. சாலைப் போக்குவரத்து சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட போது
அதில் தொடர்புடைய அனைத்து பிரிவினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெயரை மாற்றி மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா என்ற பெயரால் மக்களவையில்
அறிமுகம் செய்து தனக்குள்ள மிருகபல மெஜாரிட்டியைக் கொண்டு 2017 ஏப்ரல் 10ஆம் தேதி நிறைவேற்றிவிட்டது. இந்த
மசோதா மாநிலங்களவைக்கு வந்தபோது சீத்தாராம்யெச்சூரி முன்வைத்த வாதம் காரணமாக மசோதா
தேர்வுகுழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீண்டும் ஆட்சிக்கு
வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு 2019 ஜூலை
மாதம் 5ஆம் தேதி துவங்கிய பட்ஜெட் கூட்டதொடரையொட்டி
மக்களுக்கு விரோதமாக 36 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
அதில் மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டமும் அடங்கும். மரண விபத்துக்களை தடுக்கவே
இந்த மசோதா என அமைச்சர் நிதின் கட்காரி நாள் தவறாமல் கூறி வருகி றார்.
நாடுமுழுவதும் விபத்துக்கள் அதிக ரித்துள்ளன, விபத்தை
குறைப்பதற்கா கவே இந்த மசோதா கொண்டு வரப்படு கிறது என்று பொய்யான விபரத்தை நாட்டு
மக்கள் மத்தியில் பரப்ப முனைகிறார். உண்மையில், விபத்தைக்
காரணம் காட்டி கொண்டுவரப்படும் இந்த மசோதா அரசுப் போக்குவரத்து, பயணிகள் போக்கு வரத்து நிறுவனங்களை முற்றிலுமாக மூடிவிட்டு அவற்றை
தனியார்மயமாக்க வகை செய்திருக்கிறது. தற்போதுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இல்லாத
அக்ரகேட்டர் என்ற பிரிவை உருவாக்கி ஏகபோக நிறுவனங்க ளுக்கு வாசலை
திறந்துவிடுகிறது இந்த மசோதா. தற்போதுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் அரசுத்
துறையில் இயங்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கு பாது காப்பு இருக்கிறது. இந்த
மசோதா சட்ட மானால் பொதுத்துறை போக்குவரத்து என்பது அழிக்கப்பட்டு விடும்.
ஒன்று, இரண்டு என்று ஆட்டோ, டாக்ஸிகளை வைத்துப்
பிழைக்கும் ஒட்டுநர் உரிமையாளர்கள் முற்றிலுமாக துடைத்து எறியப்படுவார்கள். இதர
லாரிகள், தனியார் பேருந்துகள், பள்ளி
வாகனங்கள் முதலியவையும் இதே கதியை சந்திக்கும். சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள
ஒர்க் க்ஷாப்கள், அதில் பணியாற்றும் மெக்கானிக்குகள்,
சிறிய அளவிலான உதிரிபாகங்கள் கடைகள் என்று எல்லா வகையிலும்
உழைக்கும் தங்கள் மக்கள் பிழைப்பை இழக்க நேரிடும். சிறிய அளவிலான வாகன உரிமை
யாளர்களை ஒழிக்கும் நோக்குடன் தான் மத்திய அரசும் மாநில அரசும் எரிபொருள்
விலையையும் அதன் மீதான வரியையும் மேலும், மேலும்
உயர்த்திய வண்ணம் உள்ளன. இதனால், ஆட்டோ தொழில்
மேலும் சீரழியும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. ஒட்டுநர் உரிமம் பெறுவது,
வாகனப் பதிவுச் சான்று பெறுவது, வாகனங்களை
பழுதுபார்ப்பது போன்ற அனைத்து பணிகளையும் கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் பணியை
மோடி அரசு மேற்காண்டுள்ளது. ஆட்டோ வாகனத்திற்கு தகுதி சான்று பெற நடைமுறை
கட்டணம் 600 என இருந்தது. ரூ.10 ஆயிரமாக
உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கான வீட்டு வாடகை,
மின் கட்டணம், பிள்ளைகளின் கல்வி
கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் கூடிக் கொண்டே போகின்றன. மீட்டர் கட்டணத்தை
நிர்ணயம் செய்யும் மாநில அரசோ, கட்டுப்படியான கட்டணம்
நிர்ணயிக்க மறுத்து ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட்
கம்பெனிகளுக்கு வெண்சாமரம் வீசுகிறது.
இன்சூரன்ஸ்
கட்டண உயர்வு
இந்தியாவில் உள்ள
காப்பீட்டு திட்டத்தை கபளீகரம் செய்ய வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான
அங்கீகாரம்தான் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ஆகும். காப்பீடு செய்கிற வாகனங்களில்
இருந்து பிரிமியத்தை அதிகப்படுத்தி வசூல் செய்வது, இழப்பீடு
வழங்கும் போது அதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து தர மறுப்பது, குறைந்த அளவில் இழப்பீடு தருவது என்பதுதான் இன்றைய காப்பீட்டுத்
துறையின் அரசியலாக இருக்கிறது. மோட்டார் வாகனச் சட்டதிருத்தத்தில் காப்பீடு
செலுத்தும் வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட தொகைதான் நிறுவனம் வழங்கும்.
மீதித் தொகையை வாகன உரிமையாளரே வழங்க வேண்டும் என வரையறை செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறை தற்போது வாகன உரிமையாளர்களிடம்
கொள்ளையடிக்கும் துறையாக மாற்றப்படுவதற்கு நவீன தாராளமயம் வழிவகை செய்கிறது.
இதனால் தான் பல பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்
நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் நுழைந்து வாகனம் வைத்திருப்பவர்களிடம்
கொள்ளையடிக்கின்றன.
நவீன தாராளமய கொள்கை
அமலான பிறகு சமூக நலதிட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா நடத்தியது போல் இன்சூரன்ஸ்
துறையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறது. காப்பீட்டுத்துறையில் தனியார் இன்சூரன்ஸ்
நிறுவனங்களுக்கு அனுமதியளித்ததன் விளைவாக வாகன ஒட்டிகள் மற்றும் சிறுகுறு வாகன
உடமையாளர்களின் பாக்கெட்டுகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை பிரிமியமாக
வசூல்செய்கிறது. இந்த கட்டணத்தையும் கட்டமுடியாத அளவில் உயர்த்தியுள்ளார்கள். 2012 வரை ரூ.1633 ஆக இருந்த பிரிமியம் 2013ல் ரூ.3053ஆக ஓரே ஆண்டில் ஆட்டோவிற்கு
அதிகரித்தது. மோடியின் முதல் ஆட்சியின்போது 2015ல் ரூ.4475
ஆகவும் 2017ல் ரூ.6384 ஆகவும், 2018ல் ஆரம்பத்தில் ரூ.7632ஆக இருந்ததை 2018 இறுதி மற்றும் 2019 துவக்கத்தில் ரூ.12,500 என்ற அளவில்
கட்டுப்பாடு இல்லாமல் கடுமையாக உயர்த்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசு இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவுதான் மூன்றாம் நபர் காப்பீட்டு
கட்டண பிரிமியத்தொகையாக வசூல் செய்யப்பட்டது. மோடி பொறுப்பேற்ற இந்த ஐந்தரை
ஆண்டுகளில் தான் வரைமுறையில்லாமல் காப்பீட்டுக் கட்டணம் உயர்ந்துள்ளது. அரசிடம்
கேட்டால் IRDA தான் உயர்த்துகிறது. கட்டுப்படுத்தும்
அதிகாரம் அரசிடம் இல்லை என கைவிரிக்கிறது. IRDA அரசாங்கம்
சொல்வதை நாங்கள் அமுலாக்குகிறோம் என்கிறது. நீதிமன்றமோ அரசின் கொள்கைகளில்
தலையிடமுடியாது என சொல்கிறது. பாதிக்கப்படும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவும் இடமாக
மூன்று அமைப்புகளும் இல்லை.
மாநில
அரசின் தொழிலாளர் விரோத கொள்கை:
ஆட்டோ தொழிலை முடக்கி
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க மறுப்பது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜி.பி.எஸ் மீட்டர் வழங்க மறுப்பது, ஆட்டோவின் விலை, உதிரி பாகங்களின் விலை,
எரிபொருள் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை
கணக்கில் கொண்டு இன்றைய தேவையின் அடிப்படையில் கட்டண உயர்வை மாற்றியமைக்க முயற்சி
மேற்கொள்ளாதது என தொழிலாளர் விரோத கொள்கையுடன் மாநில அரசு செயல்படுகிறது. மீட்டர்
கட்டணம் நிர்ணயம் செய், ஆட்டோவிற்கான எரிபொருள்
மானியத்தில் வழங்கிடு, கேஸ், டீசல்,
பெட்ரோல் ஆகிய எரி பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்திடு,
ஆட்டோ ஒட்டுநர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு
ஒதுக்கீடு செய்திடு, மருத்துவ வசதி பெற இஎஸ்ஐ திட்டத்தை
உருவாக்கு போன்ற கோரிக்கைகளை வென்றெடுக்க களத்தில் இறங்கி ஜாதி, மத, இன, மொழி
வேறுபாடின்றி அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து களம் அமைத்து போராட தயாராவோம்!
இன்று தமிழகம்
போராட்டக் களமாக மாறியுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள்,
வாலிபர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், வணிகர்கள், திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவிஜீவிகள் என அனைத்துப்
பிரிவினரும் போராட்டக் களத்தில் உள்ளனர். நம்முடைய உரிமைகள் பாதுகாக்கவும்
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்தும் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்து
செல்லும் வகையில் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரையும்
அணிதிரட்ட திட்டமிடுவோம், ஆட்டோ தொழிலை பாதுகாப்போம்.
கட்டுரையாளர்
: மாநில துணைப் பொதுச்செயலாளர், சிஐடியு
மோட்டார் வாகன சட்டத்திருத்தம் யாருக்காக? - கே.ஆறுமுக நயினார்
நமது நிருபர், தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019
உலகில் சாலை விபத்துக்கள் அதிகம் நடை பெறும் நாடுகளின்
பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாளும் 1275 விபத்துக்கள் ஏற்பட்டு 405
பேர் மரணம் அடைகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 17பேர் இறக்கின்றனர். ஒரு வரு டத்தில் 4,65,000 விபத்துக்கள் ஏற்பட்டு ஒன்றரை லட்சம் பேர் மரணமடைவதுடன், 5 லட்சம் பேர் காயமடைகின்றனர். எனவே விபத்தைக் குறைக்க ஒரே வழி
மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதுதான் என முடிவுசெய்து, அந்த சட்டத்தில் 93 திருத்தங்களை செய்துள்ளது
பிஜேபி அரசு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிஜேபி அரசு
இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. மோட்டார் தொழி லாளர்கள் இரண்டு முறை நாடு தழுவிய
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எண்ணற்ற போராட்டங்களை நடத்தினர். இதன்
மூலம் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து
நிறுத்தினர். கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை இப்போது செய்துவிட்டது
மோடி அரசு. மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டுவிட்டது.
சட்டத்திருத்தம்
விபத்தைக் குறைக்குமா?
மோட்டார் வாகனங்களால் எல்லா
நாடுகளிலும் அன்றாடம் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டிஷ் இளவரசி
டயானாவே கார் விபத்தில்தான் மரணமடைந்தார். விபத்தைக் குறைக்க வாகனப் பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவது, சாலைகளை மேம்படுத்துவது,
பொதுப்போக்கு வரத்தை வலுப்படுத்துவதுதான் உலகம் முழுவதும் மேற்
கொள்ளப்படும் நடவடிக்கை. ஆனால் இதற்கான எந்த விதிகளும் சட்டத்திருத்தத்தில்
இல்லை. அனைத்தையும் தனியார்மயமாக்குவதே சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
ஆர்.டி.ஓ ஆபிசுக்கு வேலை இல்லை!
அரசிடம் அனுமதி பெற்ற
அடிப்படையில் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து
வாகனங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படும். ஆனால் இனி அப்படிப்பட்ட ஆய்வே தேவையில்லை. வாகனம்
உற்பத்தியாகி வெளியே வரும்போதே பதிவு எண்ணுடன்தான் வெளியே வரும். பதிவு எண்
வழங்கும் உரிமையும், வாகனங்களை பதிவுச் செய்யும்
உரிமையும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப பதிவுக் கட்டணத்தை
உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. (கீழே தனியாக பட்டியல் வழங்கப்பட்டுள்ளது)
ஒரே நாடு,
ஒரே லைசென்ஸ்
ஒரே நாடு, ஒரே தேர்தல் வரிசையில் ஓட்டுநர் உரிமமும் சேர்ந்துவிட்டது.
தற்போது உரிமம் பெற்றுள்ள அனைவரும் இனி புதிய உரிமம் பெற வேண்டும்.
நாடு தழுவிய அளவில் ஒரே உரிமம்தான். தற்போது மாநில அரசிடம் உள்ள
உரிமம் வழங்கும் உரிமை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் படும்.தற்போது உரிமம் பெற
குறைந்தபட்ச கல்வித்தகுதி உள்ளது. இனி எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை.
உரிமம் பெற கல்வித்தகுதியே தேவையில்லை என்பதன் மூலம் விபத்தைக் குறைக்கப்
போகிறதாம் மோடி அரசு.
தகுதிச்சான்றிதழ்
தனியார் வாகனங்கள் தவிர
பொதுப்போக்குவரத்துக் கான அனைத்து வாகனங்களும் (பயணிகள் பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சி,
வேன்கள், சிறிய சரக்கு வாகனம் உட்பட)
வருடம் ஒரு முறை ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்று தகுதிச்சான்றிதழ் பெற
வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தகுதிச்சான்றிதழ் வழங்கும் பணி தனியார்
நிறுவ னங்களிடம் ஒப்படைக்கப்படும்.
பொதுப்போக்குவரத்து வாகனம்
மட்டுமின்றி சொந்த வாகனம் வைத்திருப்போரும் குறிப்பிட்ட காலத்தில் தகுதிச்
சான்றிதழ் பெற சட்டத்தில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகுதிச்சான்றிதழ்
பெறுவதற்கான கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பழுதான வாகனத்தை
எங்கே பழுது பார்ப்பது?
வாகனங்கள் பழுதானால் தற்போது
சாலையோர ஒர்க் ஷாப்களில் பழுது பார்க்கிறோம். உதிரிபாக கடைக ளில் உதிரிபாகம்
வாங்குகிறோம். ஆனால், வாகன உற்பத்தி செய்யும்
நிறுவனம் தயார் செய்யும் உதிரிபாகத்தைத் தவிர வேறு உதிரிபாகம் மாட்டினால் வாகன
உரிமையாளருக்கு சிறைத்தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது
வாகனங்களை இனி உற்பத்தியாளரின் சர்வீஸ் ஸ்டேஷனில்தான் வேலை பார்க்க வேண்டும்.
சாலையோரம் ஒர்க் ஷாப் நடத்தும் பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதா ரம் பறிக்கப்பட்டு,
வீதியில் நிறுத்தப்படுவர்.
வாடகை வாகனங்கள்
இயக்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே!
பெரு நகரங்களில் ஓலா, உபேர் போன்ற நிறுவ னங்கள் மூலம் இப்போது ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்க ளை வாடகைக்கு பிடிக்கிறோம். ஓலா, உபேர் மூலம் அனுப்பப் படும் வாகனங்கள் எதுவும் அந்த நிறுவனங்களுக்கு
சொந்த மானதல்ல. அவர்களிடம் இருப்பது ஒரு செயலி மட்டுமே. இதை வைத்தே
இப்போது இந்த தொழிலை கபளீகரம் செய்துவிட்டனர். சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த
நிறுவனங்க ளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடகை வாகனம்
வைத்து பிழைக்கும் பல லட்சக்கணக்கா னோரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவ னங்களின் கூலி அடிமைகளாக மாற்றப்படும் அவலம்
உருவாகும்.
அரசு பஸ்,
தனியார் பஸ் என்னவாகும்?
பொதுமக்களுக்கு குறைந்த
கட்டணத்தில் போக்கு வரத்து சேவை அளிக்கும்நோக்கத்தோடு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
சில தனியார் பேருந்துகளும் தற்போது இயங்கி வருகின்றன. இவற்றிற்கு பெர்மிட்
வழங்கும் உரிமை, கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை மாநில
அரசிடம் உள்ளது. இனி மத்திய அரசே தனியார் பேருந்து இயக்க லைசென்ஸ் வழங்கும்.
அவர்களே கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என சட்டம் திருத்தப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் முதலாளிகள் பயணிகள் போக்குவரத்தைக் கைப்பற்ற அனைத்து
விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய தனியார் பேருந்து களோ,
அரசுப்பேருந்துகளோ கார்ப்பரேட் நிறுவனங்க ளோடு போட்டிபோட்டு
உயிர்வாழ முடியுமா? குறைந்த கட்ட ணத்தில்
போக்குவரத்து என்பது எட்டா கனி ஆகும்.
இன்சூரன்ஸ்
கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம்
வாகன விபத்தால் பாதிக்கப்பட்ட
நபரின் வயது, அவரது வருமானம், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையை யொட்டி இழப்பீடு வழங்கும்
அடிப்படையில் மோட்டார் வாகன சட்டத்தில் அட்டவணை இருந்தது. இதை வைத்துத்தான்
விபத்திற்கான நஷ்டஈட்டை கணக்கீட்டு வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு
பெற்றுத்தருவார்கள். தற்போது இந்த அட்டவணை சட்டத்திலிருந்து அகற்றப் பட்டுவிட்டது.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனம், மரணமடைந்தால்
ரூ. 5 லட்சம் மட்டும் இழப்பீடாக வழங்கினால் போதும். ஊனமானால்
அதிகபட்ச இழப்பீடு ரூ. 2 லட்சம் வழங்கினால் போதும் என
சட்டம் திருத்தப் பட்டுள்ளது. இதற்கு மேல் நீதிமன்றம் தொகை நிச்சயித்தால்
அதை வாகன உரிமையாளர்தான் வழங்க வேண்டும். சட்டத்திருத்தத்தின் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
மோடி அரசு அளித்துள்ள பரிசு இது. இனி வழக்கறிஞர்க ளுக்கும் வேலை இல்லை.
சிறிய
விதிமீறலுக்குக்கூட கடும் தண்டனை
மோட்டார் வாகன விதிகளைப்
பின்பற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதே உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. ஆனால்
சிறிய விதிமீறலுக்குக்கூட கடும் தண்டனை கொடுக்கிறது மோடி அரசு. ஒரு வாகனம் பழுதாகி
நின்றால் சாலையிலிருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.500 தண்டத்தொகை கட்ட வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய். கொள்ள ளவைவிட கூடுதல் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல்
பயணிக்கும் ரூ.200, கூடுதல் சுமையை ஏற்றினால் ஒவ்வொரு
டன்னுக்கும் ரூ.1000, தொடர்ந்து ஹாரன் அடித்தால் முதல்
முறை 1000 ரூபாய், அடுத்த முறை 2000
ரூபாய், வண்டியை கூடுதல் சத்தத்தோடு
இயக்கினால் 3 மாதம் ஜெயில், 5000 ரூபாய் அபராதம், இரண்டாவது முறை என்றால் ஒரு
வருட ஜெயில் ரூ.10000 அபராதம். இதுபோல் எண்ணற்ற
தண்டனைகள். சட்டம் நிச்சயித்துள்ள தண்டனை மூலம் யார் பயன்பெறப் போகிறார்கள் என்பது
கேள்விக்குறியே. விபத்தைக் காரணம் காட்டி மோடி அரசு செய்துள்ள சட்டத் திருத்தம்
தேன் தடவிய விஷம். மோட்டார் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றவும்,
பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவும், ஏழை மக்களின் பயண உரிமையை மறுக்கவும் செய்யப்பட்டுள்ள அநியாயமான
நடவடிக்கை. மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிராக அனைத்துப் பகுதி
மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு உயர்த்தவுள்ள புதிய கட்டண விகிதங்கள்
வாகன வகை தற்போதைய கட்டணம் ரூ பரிந்துரை கட்டணம் ரூ
இருசக்கர வாகனம்
ரூ.50/- ரூ.1,000/-
ஆட்டோ வாகனம் ரூ.600/-
ரூ.5,000/-
கார், ஜீப் (சொந்த பயன்பாடு) ரூ.600/-
ரூ.5,000/-
கார், ஜீப் (வணிக பயன்பாடு) ரூ.1,000/-
ரூ.10,000/-
பயணிகள் சரக்கு வாகனம்
ரூ.1,500/-
ரூ.20,000/-
வாகன புதுப்பித்தல் மற்றும் எப்.சி.
கட்டணம்
வாகன வகை தற்போதைய கட்டணம் ரூ பரிந்துரை கட்டணம் ரூ
இருசக்கர வாகனம்
ரூ.50/- ரூ.2,000/-
ஆட்டோ வாகனம்
ரூ.625/-
ரூ.10,000/-
கார், ஜீப் (சொந்த பயன்பாடு) ரூ.600/- ரூ.15,000/-
கார், ஜீப் (வணிக பயன்பாடு) ரூ.1,000/-
ரூ.20,000/-
பயணிகள் சரக்கு வாகனம்
ரூ.1,500/- ரூ.40,000/-
கட்டுரையாளர்
: பொதுச்செயலாளர், தமிழ்நாடு
அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)
வாங்கும் சக்தியும் அதீத உற்பத்தியும்
நமது நிருபர், தீக்கதிர், ஆகஸ்ட் 24, 2019
“2019 - 2020 நிதியாண்டில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தை துவக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கனவுத் திட்டத்தை முன் வைத்திருக்கிறார். விவசாயம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை மூன்றும் இணைந்து மிகப்பெரும் பங்களிப்பினைச் செய்தால், இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால் இன்றைய உண்மை நிலவரம் - கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள துறைகளில் ஒன்றான ஆட்டோமொபைல் (மோட்டார் வாகனம்) உற்பத்தி தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்டோமொபைல் துறையின் நிலவரம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. இத்துறையின் வளர்ச்சி வேகமாக சரிவை சந்தித்திருக்கிறது. மோட்டார் வாகனங்களுக்கு உடனடியாக போதிய கிராக்கி உறுதி செய்யப்படவில்லை என்றால் மிகப்பெரிய அளவிற்கு வேலை இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இது ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே உடனடியாக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்”.
இந்திய முதலாளிகளின் சங்கமான
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) பொதுச் செயலாளர் சந்திரஜித் பானர்ஜி,
2019 ஆகஸ்ட் 6 அன்று ஆசியன் ஏஜ் ஏட்டில்
எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டவை. சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மோடி - 2
ஆட்சி பொறுப்பேற்றவுடன் தாக்கல் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமனின்
முதலாவது பட்ஜெட்டை விழுந்து விழுந்து வரவேற்றவர்களும் இந்த பெருமுதலாளிகளின்
சங்கம்தான். இப்போது குய்யோ முறையோ என்று குமுறுகிறார்கள். இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை
படிப்படியாக சரிந்து, தற்போது முற்றாக தேங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உற்பத்தியை குறைக்கவும் நிறுத்தவும் வேண்டிய நிலை
உருவாகியுள்ளது. தேங்கி நிற்கும் வாகனங்களை என்ன செய்வது என்று முதலாளிகள்
குழம்பிப் போய் உள்ளனர். வாகனங்களை யார் தலையில் கட்டுவது என்று அவர்களுக்கு
தெரியவில்லை. எல்லாம் தனியார்மயம் என்று முழங்கிக் கொண்டிருந்த பெரும் கார்ப்பரேட்
முதலாளிகள் இப்போது, அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று
கேட்கிறார்கள். தங்களை மீட்க அரசு நிதி தர வேண்டும் என்று சொல்கிறார்கள். தங்களது
நிறுவனங்களில் தேங்கியுள்ள வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கைகளில் ‘வாங்கும் சக்தி’ இல்லை என்றும் அவர்களது
வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் கடனுதவி செய்ய வேண்டும் என்று புதிய
புதிய கோரிக்கைகளை முதலாளிகளே வைக்கத் துவங்கியிருக்கிறார்கள். நாட்டு மக்களிடம்
வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது பல்லாண்டுகாலமாக இடதுசாரிகள்
இடைவிடாமல் கூறிக்கொண்டிருக்கிற விசயம்தான். அதை நேற்று வரையிலும் காதில் போட்டுக்
கொள்ளாத முதலாளிகள், தற்போது தங்களது லாபம் பறிபோகிறது
என்றவுடன் கூப்பாடு போடத்துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
முதலாளித்துவ பொருளாதார
விதிகளின்படி, ஒரு பொருளின் உற்பத்தியையும் அது
தொடர்பான அனைத்து அம்சங்களையும் சந்தையே தீர்மானிக்கிறது. சந்தையில் உற்பத்தி
பொருளுக்கு கிராக்கி இருக்கும் வரை மட்டுமே லாபம் குவியும். கிராக்கியில் வீழ்ச்சி
ஏற்படும் பொழுது லாபம் மளமளவென சரியும். பொருட்கள் தேங்கும். உற்பத்தியை நிறுத்த
வேண்டிய நிலை ஏற்படும். அத்துறையின் பொருளாதாரமே உடனடியாக பின்னோக்கி சுழலத்
துவங்கிவிடும். மாமேதை மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பே
இதை விரிவாக ஆராய்ந்தார். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் அதன் அதீத
உற்பத்தியின் விளைவாக ஏற்படுகிற நெருக்கடியே என்றார். வேலைவாய்ப்பை உருவாக்காமல்;
நுகர்வோரின் கைகளில் பணம் புழங்கச்செய்யும் விதத்தில் அவர்களது
கூலியை அல்லது ஊதியத்தை தொடர்ந்து உயர்த்தாமல்; நுகர்வோரின்
கைகளில் பணம் புரள்வதற்கான விவசாயம் மற்றும் பல்வேறு உற்பத்தித் துறைகளை
சீர்செய்யாமல்; மொத்தத்தில் நுகர்வோரின் வாங்கும் சக்தியை
மேம்படுத்தாமல், கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பொருளை
விற்க முடியாது. இந்த நிலையில் அதீதமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் நிச்சயம்
தேங்கும். பொருட்கள் தேங்கினால் பொருளாதாரமும் தேங்கும். அது முதலாளியின் அதீத
லாபவெறிக்கு இடையூறாக அமையும். பொருள் விற்காததால், லாபம்
கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஏற்கெனவே தொழிலாளிக்கு அளித்துக் கொண்டிருக்கும்
சம்பளத்தை வெட்டுவது, அவர்களது சலுகைகளை பறிப்பது என
கொஞ்சநஞ்சம் அவர்களது கையில் புழங்கிக் கொண்டிருக்கும் பணத்தையும் முதலாளி
பறிப்பான். இதன் விளைவு நுகர்வோராக இருக்கிற தொழிலாளியின் கைகளில் இருந்து
வாங்கும் சக்தி முற்றாக பறிக்கப்படும். இது இன்னும் தீவிரமாக உற்பத்திப் பொருள்
தேக்கத்திற்கும் அதன் தொடர் விளைவாக உற்பத்தி நிறுத்தத்திற்கும் அதன் தொடர்
விளைவாக ஆலை மூடலுக்கும் இட்டுச் செல்லும்.
இந்த நிலையில் எங்களது லாபத்தை
மீட்டுக்கொடு என்று முதலாளிகள் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பார்கள். அவர்கள்
தொழிலாளியின் கைகளில் அல்லது நுகர்வோரின் கைகளில் பணம் கொடு என்று
சொல்லமாட்டார்கள். நுகர்வோரின் கைகளில் இருப்பதையும் பறித்து எங்கள் கைகளில் கொடு
என்று நிர்ப்பந்திப்பார்கள். அதற்குப் பெயர்தான் மீட்புநிதி. இப்போது இந்திய
பெருமுதலாளிகளுக்கு அப்படி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்திய மோட்டார்
வாகனத்துறை மீள்வதற்கும் அதன் மூலம் மேற்படி முதலாளிகளே மீள்வதற்கும் மீட்புநிதி
தீர்வல்ல. மீட்புநிதியை 2008 உலகப்பொருளாதார
நெருக்கடியின்போது அமெரிக்க முதலாளிகளும் உலகின் இன்னபிற கார்ப்பரேட் பெரும்
முதலாளிகளும் எப்படியெல்லாம் சூறையாடினார்கள் என்பதை இந்த உலகம் அறியும். அப்படி
சூறையாடியதன் விளைவாகத்தான் இன்றைக்கும் பத்தாண்டுகள் கழித்தும் கூட உலக முதலாளித்துவத்தால்
மீட்சிபெற முடியவில்லை. எனவே இந்திய மோட்டார் வாகனத்துறையில் உடனடியாக வீழ்ச்சியை
தடுக்கவும் அதிலிருந்து மீளவும் வேண்டுமென்றால்,
மோடி அரசு தனது நாசகர
பொருளாதாரக் கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். உதிரி பாகங்கள் உள்பட அனைத்துப்
பொருள்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி என்பதை
உடனடியாக குறைக்க வேண்டும். வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முன்னால் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள பல லட்சம்
கோடி ரூபாய் வராக்கடனை தயவு தாட்சண்யமின்றி வசூலித்திட வேண்டும். வாக்குறுதிப்படி 10
கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். ரயில்வே
உட்பட மத்திய அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும்.
இந்திய கிராமப்புற மக்களின் அடிநாதமாக இருக்கிற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்
திட்டத்தை உடனடியாக பலப்படுத்திட வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும்
தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட
இடதுசாரிக் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் மட்டுமல்ல;
சிறு-குறு, நடுத்தர தொழிற்துறையினரும் பல்வேறு
தொழில் வர்த்தகத் துறையினரும் கூட வலியுறுத்தியுள்ளனர். இந்தக்
கோரிக்கைகளுக்கும் மோட்டார் வாகன தொழில் மீட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று
மோடியின் ஊதுகுழல்கள் கேட்கலாம். இவற்றை நிறைவேற்றினால்தான், முதலாளிகள் தங்களது பொருட்களின் நுகர்வோராகக் கருதும் இந்திய மக்களின்
கைகளில் பணம் புழங்கத் துவங்கும் அவர்களது வாங்கும் சக்தி மெல்ல மெல்ல உயரும்.
வாங்கும் சக்தி இருந்தால் மட்டுமே சந்தையில் பொருட்கள் விற்கும்.
வேறு வழியே இல்லை
நரேந்திர மோடி அவர்களே..!
- எஸ்.பி.ராஜேந்திரன்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 971 கோடி டாலர் முதலீடு வெளியேறியது
புதுதில்லி:
இந்திய ரூபாய் மதிப்பானது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 65 காசுகளாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. புதன்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 55 காசுகளாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று திடீரென 26 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 81 காசுகளாகவும், வார வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று காலை மேலும் 22 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 3 காசுகளாகவும் வீழ்ச்சியைச் சந்தித்தது.இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாகும்.
இந்திய ரூபாய் மதிப்பானது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 65 காசுகளாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. புதன்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 55 காசுகளாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று திடீரென 26 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 81 காசுகளாகவும், வார வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று காலை மேலும் 22 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 3 காசுகளாகவும் வீழ்ச்சியைச் சந்தித்தது.இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாகும்.
எனினும் பிற்பகலில் சற்று
முன்னேற்றம் அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, 2.35 மணியளவில்
71 ரூபாய் 59 காசுகளாக
உயர்ந்தது. எனினும் வர்த்தகநேரம் முடிவில், 71 ரூபாய் 77
காசுகளாக மீண்டும் இறக்கத்தைச் சந்தித்தது.இந்த வீழ்ச்சியானது,
நடப்பு ஆண்டில் 2019-இல் 3.10 சதவிகிதம் ஆகும்.ஆகஸ்ட் மாதங்களின் நிலவரத்தை எடுத்துக் கொண்டால்,
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2019 ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மதிப்பு படுமோசமாக 4.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனா நாட்டின் பணமான யுவானின் மதிப்பு,
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
வீழ்ச்சி கண்டுள்ளது என்று, அந்த நாடு அறிவித்துள்ளது.
இது, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை
ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், யதார்த்தத்தில்
அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு
சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்திய பங்குச்
சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் 971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.
மறுபுறத்தில் அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய ‘யென்’னில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். கச்சா எண்ணெய்
விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
இந்து ராஷ்டிரத்தை நோக்கி அமலாகும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் - பூர்ணிமா எஸ்.திரிபாதி
பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான் மையைப்
பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை
ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி
இருக்கிறது. இது, சங்பரிவாரத்தின் கனவான இந்து
ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும். ஆர்எஸ்எஸ். 1952இல் தன்னுடைய மத்திய நிர்வாகப் பிரிவு (Kendriya Karyakari
Mandal) என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்
ஜம்மு-காஷ்மீர் குறித்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானமானது,
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உதவி தொடர்பாக
செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமான பாகிஸ்தான்-அமெரிக்கா திட்டத்தை (Pak-American
Pact) கண்டித்தது. மேலும் அந்தத் தீர்மானத்தில் “காஷ்மீரில் வெளிப்படையான வன்தாக்குதல் தொடர்வதாகவும்” கூறப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் அரசியல் அங்கமான பாரதிய ஜன சங்கம், 370ஆவது பிரிவை
ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில்
பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ்
சித்தாந்தத்திற்கு விசுவாசியான ஷியாம் பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. அந்த
சமயத்தில், முகர்ஜி 1953 மே
மாதத்தில் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்தார்.
அப்போது ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்திற்குள் எவரேனும் செல்ல விரும்பினால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் அவ்வாறு அவர் எதையும் பெறாது அரசின் விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீருக்குச்
சென்றார். அங்கு சென்றதுமே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் ஒரு மாதம்
சிறையிலிருந்தார். அப்போது ஜூன் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார். 1964இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முடிவுகளைத் தீர்மானித்திடும் உச்சபட்ச
அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா ‘பாரதத்தின் காஷ்மீர்
கொள்கை’ என்னும் தலைப்பில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றியது. அது “நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில்
காஷ்மீர் மீது தற்காலிக ஷரத்தாக சேர்க்கப்பட்டுள்ள 370ஆவது
பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். அம்மாநிலம் இதர மாநிலங்களுக்கு இணையாகக்
கொண்டுவரப்பட வேண்டும்” என்று கூறியது.
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம், பிரிவினையின் போது
பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள முஸ்லிம்கள் திரும்பி வரவேண்டும் என்று
அழைப்பு விடுத்தது. அவ்வாறு வருவார்களெனில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை
வழங்கப்படும் என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியபின்னர், 1982இல் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் அகில பாரதிய நிர்வாகப் பிரிவும் இதே கோரிக்கையை
மீண்டும் எழுப்பியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறி மற்றும் பிரிவினை
உணர்வுகளைத் தூண்டிவிட 370ஆவது பிரிவு அம்மாநில
அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகவும், எனவே
அப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கூறி வந்தது.
இதே கோரிக்கை ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளாலும் 1984, 1986 மற்றும்
1993 ஆகிய ஆண்டுக ளிலும் திரும்பத்திரும்ப
எழுப்பப்பட்டது. 1995இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக, ஜம்மு பிராந்தி யம் தனி சுயாட்சி கவுன்சிலாக அமைக்கப்பட வேண்டும் என்று
கோரியது. இதற்கு, இந்தப் பகுதியை மாநில அர சாங்கம்
புறக்கணித்துக்கொண்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 1996இல்
அகில பாரதிய நிர்வாகப் பிரிவு 370ஆவது பிரிவு தற்காலிகமான
ஒன்றே என்றும் எனவே அதனை முழுமையாக செயலிழக்கச் செய்திட வேண்டும் என்றும் ஒரு
தீர்மானத்தை நிறைவேற்றியது. 2000இல் மத்தியில் அடல்
பிகாரி வாஜ்பாய் தலைமை யில் பாஜக அரசாங்கம் அமைந்தபோது, ஜம்மு-காஷ்மீர்
மாநில சட்டமன்றம் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றி யது.
அதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இன் அகில பாரதிய
நிர்வாகப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் நிறை வேற்றிய தீர்மானத்தைக்
கண்டித்து ஒரு தீர்மானம் நிறை வேற்றியது. மேலும் 370ஆவது
பிரிவு ரத்து செய்யப்பட்டி ருந்தால் அம்மாநில அரசுக்கு இந்த அளவிற்குத் துணிவு
வந்திருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜம்மு தனி மாநிலக் கோரிக்கை
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், “நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரி வினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,” என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. 2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் “துணிச்ச லான நடவடிக்கை” எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறினார். அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது.
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், “நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரி வினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,” என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. 2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் “துணிச்ச லான நடவடிக்கை” எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறினார். அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது.
இது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஜம்முவிற்குப் பொறுப்பு வகித்துவந்த பிரேம் நாத்
டோக்ரா என்பவரால் இந்து மகாசபையைச் சேர்ந்த பால்ராஜ் மதோக்குடன் இணைந்து
நிறுவப்பட்டது. பால்ராஜ் மதோக்கும் சங் பரிவாரத்தின் சித்தாந்தங்களுக்கு
உட்பட்டவர்தான். ஜம்முவில் உள்ள இந்துக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொண்ட பிரஜா
பரிசத் கட்சி, ஷேக் அப்துல்லா அர சாங்கத்தின் கீழ்
ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடும் அட்டூழி யங்களுக்கு ஆட்பட்டார்கள் என்றும்,
எனவே மத்திய அரசாங்கம் 370ஆவது பிரிவை
ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தையும் இதர மன்னர்
சமஸ்தானங்களை இணைத்ததுபோன்று இந்தியாவுடன் இணைத்திட முடியும் என்றும் கூறிவந்தது.
ஷியாம் பிரசாத் முகர்ஜி முதன்முதலாக 1952இல் நாடாளுமன்ற
மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தில்லியிலிருந்து ஒரு பாரதிய ஜன சங்க வேட்பாளராகத்
தேர்வுசெய்யப்பட்டு வெற்றிபெற்றபோது, கட்சியின் கோரிக்கை
தெளிவாக முன்வைக்கப்பட்டது. ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால்
நேருவின் முதல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்திருக்கிறார். எனினும் 370ஆவது பிரிவு உட்பட பல்வேறு பிரச்சனை களில் தத்துவார்த்தரீதியாக
வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார்.
நேரு வுக்கும் ஷேக்
அப்துல்லாவுக்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து, பத்து
கடிதங்கள் எழுதினார். இந்தக் கடிதங்களுக்கு அநேகமாகப் பதிலேதும் இல்லை. ஷியாம்
பிரசாத் முகர்ஜி, 1953 ஜனவரி 9 அன்று
நேருவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், பிரஜா பரிசத் தலை
மையிலான இயக்கம் கோரிவந்தபடி, ஜம்மு மக்களின் உணர்வுகளைப்
புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “அடக்குமுறை
மக்களின் அடிப்ப டைக் கேள்விகளுக்குப் பதிலாகிவிடாது. இந்தியாவில் பிற பகுதிகளில்
வாழும் மக்களுக்குள்ள அரசமைப்புச் சட்டமே ஜம்முவில் வாழும் தங்களுக்கும் வேண்டும்
என்று அவர்கள் கோருவது, அவர்களின் இயல்பான உரிமை (inherent
right) இல்லையா? காஷ்மீர் பள்ளத்தாக்கில்
வாழும் மக்கள் வேறுவிதமாக நினைத்தால், அதற்காக ஜம்மு
மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? ஏனெனில் காஷ்மீரிக ளுக்கு
இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் விருப்ப மில்லை. ஜம்மு மக்கள் தங்கள்
போராட்டத்தின்போது எழுப்பிடும், “ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலை வர்” –
என்பது மிகவும் உயர்ந்த தேசப்பற்று மிக்க மற்றும் உணர்ச்சிகரமான
கோஷமாகும். நீங்களோ அல்லது ஷேக் அப்துல்லாவோ இந்தக் கேள்விக்கு சிறையில் அடைத்தல்
அல்லது புல்லட்டுகளால் பதில் சொல்ல முடியாது,” என்று அவர்
எழுதினார். இவ்வாறு அன்றையதினம் ஷியாம் பிரசாத் முகர்ஜி, “ ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர்” – என்று எழுப்பிய கோஷத்தை அடிப்படையாக வைத்துத்தான் “இந்தத் தேசத்தில் இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள், இரண்டு தலைவர்கள் ஏன்?
அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்”
என்று இன்று பாஜகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கி றார்கள்.
வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும், இதில் தீர்வுகாண்ப தற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை.
அப்போது வாஜ்பாயி, “நமக்குப் பெரும்பான்மை இல்லாததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது,”
என்று ஒப்புக்கொண்டார். இப்போது, மோடி
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது.
ஆயினும் இப்போது அனைவர் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அம்சம்
என்னவென்றால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான,
இந்து ராஷ்டி ரத்தை நிறுவிட, மோடி
அரசாங்கம் முயற்சித்துக் கொண்டி ருக்கிறதா என்பதாகும். பாஜக தலைவர்கள் எப்போதுமே “மதச்சார்பின்மை” என்கிற வார்த்தை மீதும்,
இந்திரா காந்தியால் ஒரு திருத்தத் தின்மூலமாக அரசமைப்புச்
சட்டத்தில் சேர்க்கப்பட்ட வழி யின்மீதும் அவநம்பிக்கை கொண்டவர்கள். இப்போது,
நேரு-காந்தி மரபினை சிறிதும் ஈவிரக்கமின்றி இடித்துத்தள்ள
மோடி-அமித்ஷா இரட்டையர் மேற் கொண்டிருக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், மேலும் இவர்கள் மனதில் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற
கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
நன்றி: பிரண்ட்லைன்
தமிழில் : ச.வீரமணி
நன்றி: பிரண்ட்லைன்
தமிழில் : ச.வீரமணி
மோட்டார் வாகனத் துறை போல் நுகர்பொருள் வணிகமும் சரியும் அபாயம் வரி பயங்கரவாதத்தின் உச்சம்
சுதந்திர இந்தியாவில், ஒரு மறைமுக வரியின் அமலாக்கம் ஆயிரக்கணக்கான தொழில் வணிகத்துறையினரை
வியாபாரத்தை விட்டே ஓடச் செய்த ‘பெருமை’ ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்கு உண்டு.
மதுரை, ஆக. 21 - மத்திய பாஜக அரசு அமலாக்கி யுள்ள
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை யால் இந்திய மோட்டார் வாகன தொழில்துறை வரலாறு காணாத
சரிவை சந்தித்திருப்பது போல், எப்எம்சிஜி எனப்படும்
நுகர்ப் பொருள் வணிகமும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
என வர்த்தகர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். ‘வரி
பயங்கரவாதத்தை’ தவிர்க்கப்போவதாகக் கூறி, நரேந்திர மோடி அரசு கொண்டுவந்து அமலாக்கியுள்ள ஜிஎஸ்டி வரி முறைதான்
உண்மையிலேயே ‘வரி பயங்கரவாதத்தின் உச்சம்’ என்றும் கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக
சங்கத்தின் முது நிலைத் தலைவர் எஸ்.இரத்தின வேல், தலைவர்
என்.ஜெகதீசன் ஆகியோர் ஆகஸ்ட் 21 புதனன்று விடுத்துள்ள
விரிவான அறிக்கை வருமாறு: சுதந்திர இந்தியாவில், ஒரு
மறைமுக வரியின் அமலாக்கம் ஆயிரக்கணக்கான தொழில் வணி கத் துறையினரை வியாபாரத்தை
விட்டே ஓடச் செய்த ‘பெருமை’ ஜி.எஸ்.டி
வரி அமலாக்கத்திற்கு உண்டு. மிகவும் முற்போக்கான ஜி.எஸ்.டி வரி முறையை அந்த
அளவுக்குச் சிக்கலாக்கிவிட்டார்கள். வரி வீதங்களை தாங்கமுடியாத அளவுக்கு
அதிகமாக நிர்ணயித்து, வரி அதிகாரிகளும், தணிக்கை யாளர்களும் கூட புரிந்துகொள்ள முடியாத வகையில் மத்திய அரசு
நாளொரு திருத்தமும், பொழுதொரு விளக்கமும் கொடுத்து
சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கே அதிக நேரமும், பணமும்
செலவழிக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார்கள். ஜி.எஸ்.டி வரிச் சட்டஅமலாக்கத்தில்
முக்கிய பங்காற்றும் தொழில் வணிகத் துறையினரைக் கலந்து பேசாததே இந்த
குழப்பங்களுக்குக் காரணம்.
அடுத்த பாதிப்பு
நுகர்பொருள் வணிகத்திற்கு
ஆட்டோ மொபைல் தொழிலைத்
தொடர்ந்து ஜி.எஸ்.டி வரியின் குளறுபடியான அமலாக்கத்தால் அடுத்து
பாதிக்கப்படப்போவது, எப்எம்சிஜி (F.M.C.G)
என்றழைக்கப் படும் நுகர்பொருள் வணிகம்தான். நுகர்பொருள்
வணிகத்தில், சரக்குகளை தங்கள் டீலர்களுக்கு விற்பனை செய்த
நிறுவனங்கள், அதன் பின் பல்வேறு காரணங் களுக்காக, குறிப்பாக டீலர்கள் கையிருப்பில் உள்ள சரக்கின் விலையைக் குறைத்து
நுகர்வோ ருக்கு வேகமாக விற்பதற்கு சரக்கு சப்ளை நிறுவனங்கள் டிஸ்கவுண்ட்
(தள்ளுபடி) கொடுப்பது வழக்கம். இது அத்தொழிலில் தவிர்க்க முடி யாத ஒன்று. இத்தகைய
டிஸ்கவுண்ட் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு உட் படாது. ஆனால் சட்டம் அமலாகி
இரண்டாண்டுகளுக்குப் பிறகு மத்திய மறைமுகவரி வாரியம் 28.06.2019 தேதியிட்டு வெளி யிட்டுள்ள எண் 106 சுற்றறிக்கையில்
இத்தகைய டிஸ்கவுண்ட் குறித்து கொடுத்திருக்கும் விளக்கங்கள் குழப்பத்தின்
உச்சகட்டமாகும். நுகர்பொருள் வணிகத்தில் ஈடு பட்டுள்ள சிறிய, நடுத்தர வர்த்த கர்கள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமலும்,
அதற்கேற்ப கணக்கு களை பராமரிக்க முடியாமலும் தங்கள் வணிகத்தையே
நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது. இதனால்
லட்சக்கணக்கானோர் வேலை இழப்பர்.
மத்திய அரசின் குழப்பமான
விளக்கங்கள்
1. டீலரிடம் உள்ள
இருப்புச் சரக்கை வேகமாக விற்க, சரக்கை விற்ற நிறுவனம்,
டீலருக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கும் பொழுது, “இத்தொகை சிறப்பு விற்பனை முயற்சியை மேற்கொள்வதற்காகக்
கொடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுக் கொடுத்தால்,
சரக்கை வாங்கிய டீலர் சரக்கை விற்றவருக்கு
சேவை அளிப்பவ ராகக் கருதப்படுவாராம். எனவே, அந்த
டிஸ்கவுண்ட் தொகைக்கு டீலர் தனக்கு சரக்கை விற்றவருக்கு சேவை சப்ளைக்கான பில்
போட்டு 18 சதவீதம் வரி வசூலித்து செலுத்த வேண்டுமாம்.
சரக்கை விற்றவர், வாங்கிய டீலர் இடையே உள்ள விற்றவர் -
வாங்கியவர் உறவு, அதே விற்பனை நடவடிக்கையில் எப்படி சேவை
அளிப்பவர், சேவை பெறுகிறவர் உறவாக மாற முடியும்? இது கற்பனையையும் மிஞ்சிய விளக்கமாகும்.
2. தங்களிடம் தேங்கிவிட்ட சரக்கை, டீலர் தனது வாடிக்கை யாளருக்கு விலையைக் குறைத்து வேகமாக விற்பதற்காக, சரக்கை சப்ளை செய்த நிறுவனம், டீலருக்கு டிஸ்கவுண்ட் கொடுத்தால், அந்த டிஸ்கவுண்ட், சரக்கைக் குறைத்து விற்ற டீலருக்கு சரக்கின் சப்ளையர் கொடுக்கும் விலையாகக் கருதப்படுமாம். எனவே, டீலர் சரக்கு சப்ளையருக்கு அந்த டிஸ்கவுண்ட் தொகைக்கு பில் போட்டு வரி வசூலித்து செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு பொருளின் விலையைக் குறைத்துக் கொடுத்தா லும் சிக்கல். தொழில் வணிகம் பாதிக்கும் வகையில் யதார்த்த நிலைக்கு எதி ராகக் கொடுக்கப்படும் விளக்கத் திற்கு இது ஒரு உதாரணமாகும். இந்த விநோதமான விளக்கங் களை எல்லாம் முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி அமலாக்கத் தேதியான 1.7.2017 முதல் அமலாக்கினால் நுகர்பொருள் வணிகத்தில் ஈடு பட்டுள்ள சிறு, நடுத்தர வணிகர்கள் மிக அதிகமாக விதிக்கப்படும் வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் நிறுவனத்தை யே மூடுவதைத்தவிர வேறு வழியில்லை. எனவே 26.6.2019ஆம் நாளிட்ட 106ம் எண் சுற்றறிக்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தும் பொழுது பிரதமர் மோடி அவர்கள், ஏற்கெனவே உள்ள வரிச் சட்டங்களினால் ஏற் பட்டுள்ள “வரி பயங்கரவாதத்தைத்” தவிர்க்கவே எளிமையான ஜி.எஸ்.டி வரி என்றார். ஆனால் ஜி.எஸ்.டி வரியை அமலாக்கம் செய்யும் முறைதான் “வரி பயங்கரவாதத்தின் உச்சம்”. இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு,தான் வாக்குறுதி அளித்தபடி, ஜி.எஸ்.டி வரியை “நல்ல மற்றும் எளிமையான வரி யாக” (Good & Simple Tax) மாற்றி அமலாக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு துறை தொழில் வணிகம் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கேடு அடையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
2. தங்களிடம் தேங்கிவிட்ட சரக்கை, டீலர் தனது வாடிக்கை யாளருக்கு விலையைக் குறைத்து வேகமாக விற்பதற்காக, சரக்கை சப்ளை செய்த நிறுவனம், டீலருக்கு டிஸ்கவுண்ட் கொடுத்தால், அந்த டிஸ்கவுண்ட், சரக்கைக் குறைத்து விற்ற டீலருக்கு சரக்கின் சப்ளையர் கொடுக்கும் விலையாகக் கருதப்படுமாம். எனவே, டீலர் சரக்கு சப்ளையருக்கு அந்த டிஸ்கவுண்ட் தொகைக்கு பில் போட்டு வரி வசூலித்து செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு பொருளின் விலையைக் குறைத்துக் கொடுத்தா லும் சிக்கல். தொழில் வணிகம் பாதிக்கும் வகையில் யதார்த்த நிலைக்கு எதி ராகக் கொடுக்கப்படும் விளக்கத் திற்கு இது ஒரு உதாரணமாகும். இந்த விநோதமான விளக்கங் களை எல்லாம் முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி அமலாக்கத் தேதியான 1.7.2017 முதல் அமலாக்கினால் நுகர்பொருள் வணிகத்தில் ஈடு பட்டுள்ள சிறு, நடுத்தர வணிகர்கள் மிக அதிகமாக விதிக்கப்படும் வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் நிறுவனத்தை யே மூடுவதைத்தவிர வேறு வழியில்லை. எனவே 26.6.2019ஆம் நாளிட்ட 106ம் எண் சுற்றறிக்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தும் பொழுது பிரதமர் மோடி அவர்கள், ஏற்கெனவே உள்ள வரிச் சட்டங்களினால் ஏற் பட்டுள்ள “வரி பயங்கரவாதத்தைத்” தவிர்க்கவே எளிமையான ஜி.எஸ்.டி வரி என்றார். ஆனால் ஜி.எஸ்.டி வரியை அமலாக்கம் செய்யும் முறைதான் “வரி பயங்கரவாதத்தின் உச்சம்”. இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு,தான் வாக்குறுதி அளித்தபடி, ஜி.எஸ்.டி வரியை “நல்ல மற்றும் எளிமையான வரி யாக” (Good & Simple Tax) மாற்றி அமலாக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு துறை தொழில் வணிகம் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கேடு அடையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
உண்மையை களவாடும் கார்ப்பரேட் அரசியல்! -எம்.கண்ணன்
கார்ப்பரேட்
நிறுவனங்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக மக்களை தயார்
செய்யும் வேலை தீவிரமடைந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில்
முடியும்.
இந்தியாவில் இதுவரை
முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் திசைவழியை தீர்மானித்து வந்த கார்ப்பரேட்
நிறுவனங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தனிநபரும் எந்த
அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற முடிவை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்
எடுக்க துவங்கியிருக்கின்றன. இந்நடவடிக்கை ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக
மிகப்பெரிய அபாய அறிகுறியுடன் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இன்றைய
நவீன தகவல் ஊடகங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்படுவது
அம்பலமாகி வருகிறது.
இந்திய
இணைய பயன்பாடு
நவீன அறிவியல் தொழில்
நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்று இந்திய சந்தைக்கான
ஆராய்ச்சி குழு (ஐஎம்ஆர்பி) தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய
மக்கள் தொகையில் 62 கோடியே 70 லட்சம்
பேர் பயன்படுத்துவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களை
விட கிராமப்புறங்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் வளர்ச்சி விகிதம் வேகமாக
அதிகரித்து வருகிறது. 2015ல் 9 சதவிகிதமாக
இருந்த வளர்ச்சி தற்போது 35சதவிகிதமாக
அதிகரித்திருக்கிறது.
சமூக
ஊடகம் பயன்பாடு
இணைய பயன்பாடு
விரிவாக்கத்தின் விளைவாக பிரதான ஊடகங்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக் காட்சிகளை பின்னுக்கு தள்ளி இன்று சமூக ஊடகங்கள் அனைவரையும்
எளிதாக எட்டக்கூடிய இடத்திற்கு வந்தி ருக்கின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரில்
18 வயது முதல் 34 வயதுடையோர் 72
சதவிகிதம் பேர். டிவி பார்ப்பதில் சராசரியாக செலவிடும் நேரம் 2
மணி 51 நிமிடம். இணையத்தை பயன்படுத்தும்
56 கோடி பேரில் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் 31 கோடி. இதில் மொபைல் போன் மூலம் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் 29
கோடி. அதாவது இந்தியாவில் 3ல் ஒருவர்
சமூக ஊடகத்தை பயன்படுத்துவோராக மாறியிருக்கின்றனர். சமூக ஊடகத்தில் யூடியூப் 93
சதவிகிதத்துடன் முதலிடத்திலும், பேஸ்புக்
89 சதவிகிதத்துடன் 2ம்
இடத்திலும், வாட்ஸ்ஆப் 82 சதவிகிதத்துடன்
3 வது இடத்திலும் இருக்கிறது. அதிக நேரம் செலவிடுவதில்
முதலிடத்தில் டின்டர் (TINDER), 2ம் இடத்தில்
நெட்பிளிக்ஸ்(NETFLIX) 3ம் இடத்தில் டென்சென்ட் வீடியோ (TENCENTVIDEO)
வீடியோகேம் இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும்
இளைய தலைமுறையினர் எந்த அளவிற்கு சமூக ஊடகம் தாக்கத்தை செலுத்தி வருகிறது என்பதை
அறிய முடிகிறது. இவையெல்லாம் மக்களுக்கு செய்யும் சேவை போல் தெரியும். ஆனால் இதன்
பின்னணியில் இயங்கும் மிகப் பெரிய வணிகமும், நமது அன்றாட
செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக இருப்ப தும் பெருமளவில் வெளியே தெரிவதில்லை.
(ஆதாரம்:IMRB REPORT 2019 JAN
வலைப்பின்னல்
ஊடகங்கள் வழியாக
மிகப்பெரிய வர்த்தக வலைப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வேலையும் நயவஞ்சகமாக
அரங்கேற்று கின்றன. இதில் உள்நாட்டு சிறுகுறு தொழில் சார்ந்த உற்பத்தி பொருட்கள்
அழிக்கும் வேலையும் சப்தமின்றி நடைபெறு கிறது. சமூக ஊடகத்தின் வழியே யார் எதை
தேடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது. எதனை விரும்பு கின்றனர். எதை
வெறுக்கின்றனர் என்பதை வயது, படிப்பு, பாலினம், நம்பிக்கை, பகுதி,
அங்கிருக்கும் சூழல் உள்ளிட்ட விபரங்கள் மிகநுணுக்கமாக மைக்ரோ
மற்றும் நேனோ லெவலில் தொகுக்கப்படுகிறது. இந்த விபரங்களை யாருக்கு கொடுத்து,
யாரை நாடி செல்ல வைப்பது என்பதையும் இந்த சமூக ஊடகங்களே
தீர்மானிக்கின்றன. தற்போது ஒரு படி மேல் சென்று எந்த கார்ப்பரேட்கள் எந்த பகுதி
மக்களை நுகர்ந்து ஊதி பெருக்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்கின்றன. சேகரிக்கும்
தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு ஏற்ப விலையை நிர்ண யம் செய்து சமூக ஊடகங்கள்
கார்ப்பரேட் நிறுவனங்களில் விற்று விடுகின்றன. இது ஒரு வகையான வியாபாரம்.மற்றொன்று
சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து, அந்த பொருளை நுகர்வதற்கு எந்த பகுதி மக்களை நுகர்வோர்களாக மாற்றம்
செய்ய வேண்டும் என்ப தையும் சமூக ஊடகங்களின் வாயிலாக தீர்மானிக்கின்றன.
கண்காணிப்பு
உதாரணமாக பேஸ்புக்
பயன்படுத்தும் நாம் எதை விரும்புகிறோம். எதுமாதிரியான செய்திகளுக்கு
லைக்போடு கிறோம், எதை நிராகரிக்கிறோம். என்ன
தேடுகிறோம் என்பது உள்ளிட்ட விபரங்கள் கோப்புகளாக மாற்றப்படுகின்றன. இதனை நமது
பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் ஆக்டிவிட்டி லாக்கை பார்த்தால் தெரியும். இங்கு நம்
தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நம்மை பற்றிய ஒரு ப்ரோஃபைல் உருவாக்கும். பின்னர்
அதனை தொடர்ந்து மேம்படுத்தி தகவல்களை பிரித்து தேவையான போது பயன்படுத்திக்
கொள்ளும். அதன் அடிப்படையில்தான் நமது பக்கத்தில் செய்திகள் தகவல்கள் (நியூஸ்ஃபீட்
) வரும். அதேபோல் கடந்தாண்டு நாம் பதிவிட்டதில் பலர் லைக்செய்திருந்தால் அந்த
பதிவு மறுவருடம் அதே நாளில் நமது பக்கத்தில் வெளி யாவதையும் பார்க்கலாம். இதுவும்
கண்காணிப்பின் அடிப்படையில் நடப்பதுதான். இதேபோல் கூகுள் இணைய பக்கத்திலோ, யூடியூப் பகுதிக்கோ சென்று நாம் எதை தேடுகிறோமோ அது குறித்த
தகவல்கள் குக்கீஸ் என்ற பெயரில் சேமிக்கப்படும். அப்படி சேமிக்கப்படும்
தகவல்கள் 10நிமிடங்களுக்கு ஒரு முறை கூகுள் நிறுவனம் நம்
கோப்புகளில் மேம்படுத்திக் கொண்டே இருக்கும். இதேபோல் பேஸ்புக் ஒவ்வொரு 15நிமிடத்திற்கு ஒரு முறை நமது தகவல்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.
இசைவு
உற்பத்தி
இன்றைய ஊடக உலகம்
முழுவதும் டிஜிட்டல் சாம்ராஜ் யங்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனை கையில்
வைத்திருப்போர், மக்களுக்கு எதிரான கொள்கைகள், செய்திகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை மக்களே
ஏற்றுக் கொள்ளும்படி அவர்களின் இசைவை நுணுக்கமாக உற்பத்தி (manufacturing
consent ) செய்கின்றன. இதே போல் கார்ப்பரேட் உற்பத்தி பொருட்களை
மட்டும் மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும் மூளைச்சலவையும் நடைபெறு கிறது.இதனையே
பேரறிஞர் நோம்சாம்ஸ்கி இசைவு உற்பத்தி என்கிறார். ஊடகங்கள் சென்றடையாத கிராமப்புற
பின்தங்கிய பகுதிகளும் இதற்கு ஆட்பட்டு விடுகின்றன. காரணம் இந்த சமூகத்தை ஆதிக்கம்
செலுத்துகிற சமூக, பொருளாதார, அரசியல்
அனைத்தையும் இந்த ஊடகங்க ளே வழிநடத்துகின்றன. அதன் வழியாகவும் கருத்துரு வாக்கம்
நடைபெறுகிறது.
கேம்பிரிட்ஜ்
அனாலிடிகா மோசடி
அமெரிக்க ஜனாதிபதி
தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி செய்தி உலகையே ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது.
அமெரிக்கா முழுவதும் டிரம்ப் வெற்றி பின்னணியில் ரஷ்யா அது,இது என விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்த வேளையில், “எனக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. உண்மையை கூறுகிறேன்” என்றார் ஒருவர். அவர் நாங்கள் பேஸ்புக் மூலம் வாக்காளர்களின் தகவல்களை
திரட்டி, உளவியல் வல்லுநர்கள் உதவியுடன் டிரம்பிற்கு
வாக்க ளிக்க பல மோசடிகளை செய்தோம். வாக்காளர்களை வசியம் செய்து எதிர்க்கட்சிகளை
எதிராளியாக மாற்றினோம் என்றார். இந்த வேலைகளை செய்த கேம்பிரிட்ஜ் அனாலி டிகாவில்
மீத்தகவல் ஆய்வாளராக ( big data analyst) பணியாற்றிய
கிறிஸ்டோபர் வையலி என்பவர். இந்த சதியில் கேம்பிரிட்ஜ் அனாலிடிக்காவின் தாய்
நிறுவன மான குளோபல் சயின்ஸ் ரிசர்ச் ( ஜிஎஸ்ஆர் ) நிறுவனமும் இணைந்து செயல்பட்டது
விசாரணையில் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதனை விசாரணை செய்த அமெரிக்க பெடரல்
வர்த்தக மையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.34 ஆயிரம் கோடி
அபராதம் விதித்திருக்கிறது.
பாஜகவின்
மோசடி கூட்டு
இதே கேம்பிரிட்ஜ்
அனாலிடிகா நிறுவனம் 2014ல் மோடியை பிரதமராக்க இதே
போல் மோசடிகளை இந்தியா வில் அரங்கேற்றியிருக்கிறது. இந்த மோசடிகளை வெளிக் கொண்டு
வந்த கிறிஸ்டோபர் வையலி பிரிட்டிஷ் நாடாளு மன்ற குழுவிடம் அளித்திருக்கும்
அறிக்கையில் இந்தியா வில் மோடிக்கு எப்படியெல்லாம் வேலை செய்தோம் என்ற அறிக்கையை
சமர்ப்பித்திருக்கிறார். குறிப்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் தாய்
நிறுவனமான எஸ்சிஎல் என்கிற ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேஷன் லேபாரட்ரி இந்தியா பிரைவேட்
லிமிடெட் (startagic communication labarotry india ltd) மூலம்
இந்தியாவில் 7 லட்சம் கிராமங்களில் மிக நுட்பமான தகவல்களை
திரட்டி அதன் மூலம் தேர்தலுக்கு பயன்படுத்தியிருப்பதையும் அறிக்கையில்
தெரிவித்துள் ளார். இந்த நிறுவனம் பிடிபட்டதை தொடர்ந்து தாம் வேலை செய்த அரசியல்
கட்சிகளின் பெயர்களை இணைய பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. தனது பெயரை
எமர்டேட்டா என மாற்றி புதிய முகமூடியுடன் இயங்கி வருகிறது.
பகுப்பாய்வு
– தரம்பிரித்தல்
நாம்தானே
வாக்களிக்கிறோம் அதை எப்படி அவர்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும்
எழுவது இயற்கைதான். ஆனால் அவர்களின் வேலைமுறையை பார்த்தால், அதற்கான சாத்தியக்கூறை புரிந்து கொள்ள முடியும். இதில் மார்க்கெட்டிங்
வல்லுநர்கள், கணினி நிபு ணர்கள், உளவியல் வல்லுநர்கள் உள்ளிட்டவர்களின் மிகச் சிறந்த ஆய்வுகளை உள்ளடக்கி
ஒன்றிணைத்து அதிலி ருந்து பகுப்பாய்வு செய்கின்றனர். அதில் ஒவ்வொருவரின்
குணாதிசயங்களை உறுதி செய்கின்றனர். அம்முடிவின்படி ஒருவரை எந்த
கருத்துருவுக்கு உடன்பட செய்ய வேண்டுமோ அந்த கருத்தை படிமுறை அடிப்படையில் கொண்டு
சேர்க்கின்றனர். அது அவர்களுக்கு 90 சதவிகித வெற்றியை
தருவதாக கூறுகின்றனர். இந்த ஆய்வு தற்போது ஆளுமை உளவியலுடன் ( personality
psycology) இணைத்து, செயற்கை நுண்ண றிவு
திறன் கொண்ட பிரத்யேக கணினிகளை கொண்டு நடைபெறுகிறது. பல லட்சம் பேரின்
தகவல்கள்அடங்கிய பிக்டேட்டாவை சில வினாடிகளில் இந்த முறையில் தரம்பிரித்து
வகைப்படுத்துகின்றனர். அதன் பின்னர் பிரிவு வாரியாக தனித்தனியாக வீடியோ, படங்கள், செய்திகளை உற்பத்தி செய்து அவர்களை
மூளைச்சலவை செய்யும் வேலை நடைபெறுகிறது. அதன் மூலம் தங்களின் கருத்தாக்கத்தை ஏற்க
செய்து இசைவை பெறுகின்ற னர். அந்த இசைவு வாக்குகளாக மாற்றப்படுகிறது.
பாஜகவின்
நரிதந்திரம்
இந்தியாவில் பாஜக
பரந்து விரிந்த அளவில் தகவல் தொழில்நுட்ப குழுக்களை வைத்திருந்தாலும், அவர்கள் செய்யும் வேலையை தீர்மானிப்பது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா போன்ற
நிறுவனங்கள்தான். இவர்களின் தொடர்புடன் பல்வேறு வகையில் தனது செயல்பாட்டை அரசியல்
களத்தில் செயல்படுத்தி வரும் நிறுவனங்களில் ஒன்றுதான் ஐபேக் என்ற இந்திய அரசியல்
செயல்பாட்டுக்குழு (Indian Political action commitee - I PAC ) . அதன் இயக்குநர் பிரசாந்த் கிஷோர். இது போன்ற பல்வேறு நிறுவனங்களை
பாஜகவிற்காக தேர்தல் காலத்தில் களம் இறக்கியது. அந்த நிறுவனங்கள் தற்போதும் தொடர்ந்து
ஆர்எஸ்எஸ், பாஜக கருத்துக்களுக்கு ஆதரவாக மக்களிடம் இசைவை
உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நிறுவனமயமாகும் அரசியல்
இதுவரை இந்தியாவில் மக்களுடன்
நேரடியாக இருந்த அரசியல் இப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டு கார்ப்பரேட் அரசியலாக
மாற்றம் பெற்று வருகிறது. பாஜக மட்டுமல்ல ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர்
காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்
இதே பாணியில் களம் இறங்கியிருக்கின்றன அதன் விளைவு இந்த கட்சிகளுக்கு தேர்தல்
அறிக்கை முதல் வேட்பா ளர் தேர்வு வரை இந்த நிறுவனங்களே முடிவு செய்யும் அவலமும் நடைபெற்று
வருகிறது.
தமிழகம்
பாஜகவுடன் சேர்ந்திருக்கும்
அதிமுக தற்போது பாஜகவின் கூட்டாளியாக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக செய்தி கள் வருகின்றன. அதன்
செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக ஊடகங்களில் தற்போது படிப்படியாக அதிமுக, பாஜக செல்வாக்கு அதிகரித்து வருவது போலவும், எடப்பாடி
பழனி சாமி ஒரு திறன்மிக்க தலைவராக உருவெடுத்திருப்பதாகவும் முதன்மைப் படுத்தப்படுகிறது.
அதற்கேற்றவாறு சமூக ஊடகம் மூலம் மக்கள் வாக்களிப்பதாகவும் ஊடகங்களின் வாயிலாக
கருத்துருவாக்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இவர்களை எல்லாம் பாஜக
பின்னுக்கு தள்ளியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தையும் உள்ள டக்கி
கார்ப்பரேட் தேர்தல் நிறுவனங்களால் தமிழகத்திற்கான பிரத்யேக திட்டங்கள்
வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வீச்சு மிக அதிகமாக இருக்கும் என இத்துறை
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.1. தமிழகம் முழுவதும்
ஒருங்கிணைக்கப் பட்ட வகையில் சமூக ஊடக நெட்ஒர்க். 2. அதன்
வழியாக தினமும் அந்த பகுதியின் தன்மைக்கு ஏற்ப பொதுமக்களி டம் குறைந்தது 4 செய்திகளை கொண்டு சேர்ப்பது. 3.ஒவ்வொரு
வாரமும் ஒரு மத்திய அமைச்சர் தமிழகத்தில் இருப்பதை உறுதி செய்வது. 4. அத்திவரதர், வைகை விழா உள்ளிட்ட பல்வேறு
நிகழ்வுகள் மூலம் பாஜவிற்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசின் பங்கேற்பு
டன் செயல்படுத்துவது என திட்டங்கள் விரிகின்றன. குறிப்பாக தமிழக ஊடகத்துறையை
முதலில் தங்களின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வருவது. அதற்கு உடன்படாத நபர்களை
ஊடகத்துறையில் இருந்து தனிமைப்படுத்துவது. தமிழக சினிமா துறையிலும் இதே பாணியை
கையாள முடிவு செய்திருக்கின்றனர். அதற்கடுத்து தமிழக ஆசிரியர்களில் இடதுசாரி
மற்றும் திராவிட சிந்தனை கொண்டவர்களை கையாள்வது குறித்த திட்டத்தையும் சப்தமின்றி செயல்படுத்தி
வருகின்றனர்.
எதிர்காலம்
கார்ப்பரேட் நிறுவனங்கள்
ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளையும், அதன்
கொள்கைகளையும் ஏற்றுக்கொள் ளும் இயந்திரங்களாக மக்களை தயார் செய்யும் வேலை
தீவிரமடைந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியும். ஜனநாயகத்தின் மூச்சாக
இருப்பதே ஒருவர் முழு சுதந்தி ரத்துடன் சுய சிந்தனை அடிப்படையில்
சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயல்பட அனுமதிப்பதே ஆகும். ஆனால் கார்ப்ப ரேட்
அரசியல் என்பது ஒருவரின் சுதந்திரமான சிந்தனையைக் களவாடி ஒரு குறிப்பிட்ட அரசியல்
சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு இயங்க செய்வதாக இருக்கிறது. இதுகுறித்த
விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதே சமூக
ஊடகத்தின் மூலம் திட்டமிட்ட அடிப்படையில் செயல்பட்டால் இவர்களை ஆதாரத்துடன்
அம்பலப்படுத்த முடியும். அதன் மூலம் மக்களிடம் இருந்து நிறுவனமயப்படுத்தப்படும்
அரசியல் கட்சிகளையும் தனிமைப்படுத்தி, இந்தியாவின்
ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க முடியும்.
இது தேசத் துரோகம் இல்லையா?
நமது நிருபர், தீக்கதிர், ஆகஸ்ட் 22, 2019
இந்திய
முப்படைகளின் அனைத்து பாது காப்புத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளிலும் தனியார்
கார்ப்பரேட்களையும், அந்நியர்களை யும் அனுமதிக்க மோடி
அரசு முடிவு செய்தி ருக்கிறது. இதற்கெதிராக நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் பணி புரியும் 1 லட்சத்து
20 ஆயிரம் தொழிலாளர்கள் 30 நாள்
தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கியி ருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தங்கள் குடும்பத்தையும்
இணைத்து வீதிக்கு வந்திருக்கின் றனர். இது வாழ்வாதாரத்திற்கான போராட்டம் அல்ல;
தேசத்தின் பாதுகாப்பிற்கான போராட்டம். மோடி ஆட்சிக்கு
வருவதற்கு முன்பு வரை, “பாதுகாப்புத் துறையில் அந்நியரை
அனுமதிக்க லாமா?; தேசத்தின் பாதுகாப்பு என்னவாகும்”
என வானத்திற்கும் பூமிக்கும் குதித்த கட்சிதான் பாஜக. ஆனால்
இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், கூச்சநாச்சமின்றி
பாதுகாப்புத் துறையில் நூறு சதவிகித அந்நிய மூலதனத்தை அனுமதித்தி ருக்கிறது.
தற்போது பொதுத்துறை ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தனியார் பொது பங்களிப்பு என்ற
பெயரில் அந்நியர்களை உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கவில்லை. மாறாக தொழிற்சாலைக
ளின் கையில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத் தையும் இந்த அந்நிய
நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இப்போது ராணுவ ரகசியங்களை பாஜக அரசு எந்த
லாக்கரில் வைத்துப் பூட்டும்? கார்ப்பரேட்
நலனுக்காக தேசத்தின் செல்வங் களை சூறையாடுவது பாஜகவிற்கு ஒன்றும் புதி தல்ல.
தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் ஊழலின் உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது தான்
பாஜக அரசு. கார்கில் போரின் போது சவப் பெட்டி ஊழல், சுகோய்
ஜெட் விமான பேர ஊழல், டி-90 டேங்குகள்
பேர ஊழல், பாரக் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் பேர ஊழல்,
மீட்பு வண்டிகள் பேர ஊழல், இலகுரக
பைனாகுலர் பேர ஊழல், யுத்த தளவாடங்கள் பேர ஊழல், மோடியே நேரில் களம் கண்ட ரபேல் விமான ஒப்பந்த ஊழல் என பட்டியல் ராணுவ
அணிவகுப்பாக நீள்கிறது. உலக அளவில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி
செய்வதில் 9.5 சதவிகிதத்துடன் இந்தியா இரண்டாமிடத்தில்
இருக்கிறது. மேக் இன் இந்தியா எனக் கூறும் மோடி அரசு ஏன் வெளிநாடுகளில் இருந்து
ஆயு தங்களை வாங்கிக் குவிக்க வேண்டும்? நம் ராணுவ ஆயுதத்
தளவாட தொழிற்சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி நவீனமயப்படுத்தி நாமே தயாரிக்க லாமே?
அதுதானே சுதேசி மற்றும் தேசபக்தியாக இருக்க முடியும். ஆனால்
எதற்காக அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும்? காரணம்,
கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்க
அந்நியர்களும் பெரும் கார்ப்பரேட்களும் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்.
ராணுவத்தில் உணவு சரியில்லை என காஷ் மீரில் இருந்து சொன்ன ராணுவ வீரர் தேஜ்
பகதூர் நிலை என்ன ஆனது? இவர்களுக்கு ராணுவ வீரர்களைப்
பற்றியோ நாட்டின் பாதுகாப்பைப் பற்றி யோ எந்தக் கவலையும் இல்லை. கார்ப்பரேட்க ளின்
நலன் மட்டுமே குறி. மோடி அரசிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்க ராணுவத்தளவாட தொழி
லாளர்களுடன் இணைந்து நாமும் கரம் கோர்க்க வேண்டும். இதில் எது தேசத்துரோகம்?
எது தேசபக்தி?
பாதுகாப்புத்துறை கார்ப்பரேட்மயம் மக்களின் பாதுகாப்பிற்கும் வேட்டு - கே.சி.கோபிகுமார்
மோடி 2.0 அரசு அமைந்தவுடன் நூறுநாள் திட்டம் என அறிவித்து இந்திய நாட்டின்
வளங்களை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை
நிறுவனங்க ளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு அதை நாடாளு மன்றத்தில் தனது
மிருகபலப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வருகிறது. ஏறத்தாழ 28 மசோதாக்கள் அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டு பல மசோதாக்கள்
நிறைவேற்றப்பட்டு நாட்டின் இறையாண்மை மற்றும் சுயசார்புக்கு வேட்டு வைத்துள்ளது.
நாட்டின் நிதிஅமைச்சர் இந்திய பொருளாதார கொள்கை அறிக்கையில் இனி இந்திய அரசு
நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக நிதி முதலீடு செய்யாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
2019-20 நிதிநிலை அறிக்கையில் ராணுவ செலவு களுக்கு
ரூ. 4,31,011 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 15.5%
மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதென்றும் பெரும்
பகுதி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக
செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அரசு தெரி விக்கிறது. பாதுகாப்புத் துறையை
நவீனப்படுத்த 18% ஒதுக்கி யுள்ளது. இது 2011-12 ஆண்டின் ஒதுக்கீட்டை விட 8% குறைவாகும்.
இன்றைய தேவைக்கேற்ப நவீனமயத்திற்கு அதிகநிதி தேவைப்படுகின்றது என்று
பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. அதை எந்த ஒரு இந்தியனும் மறுக்க மாட்டான்.
ஆனால் நவீனம், தாராளமயம் என்ற பெயரில் நாட்டின்
பாதுகாப்பை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைப்பதை தான் தேசபக்தி உள்ள இந்தியர்கள்
ஏற்க மாட்டார்கள். மோடி அரசின் இந்த செயலை கண்டித்து தான் நாடு முழுவதும் முப்பது
நாட்கள் வேலைநிறுத்தம்.
நாட்டில் இந்த அமைச்சகத்திற்கு
ஏறத்தாழ 17
லட்சம் 30 ஆயிரம் ஏக்கர் உபரிநிலம்
உள்ளது. அவற்றை தனியார் மற்றும் பொதுத்துறை பங்கேற்பு மூலமாக முழுமையாக
பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே
அரசு நிலவங்கி என்று துவக்கப்பட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்
அடிப்படையில் இந்த உபரிநிலங்க ளை ஒன்று சேர்த்து அவற்றை தனியாருக்கு குறிப்பாக
கார்ப்பரேட்டுகளுக்கும் இந்திய ஏக போக முதலாளி களுக்கும் தாரைவார்ப்பது தான்
நோக்கம் .மத்திய இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை தொழிற்
சங்கங்கள் அனைத்தும் இந்த உபரிநிலங்களை முறை யாக பாதுகாப்பு உற்பத்தி வளாகங்களாக
உருவாக்கி அங்கு இந்திய பாதுகாப்புதுறைக்கு தேவையான உபரிபாகங்களை உற்பத்தி
செய்யும் சிறு குறு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால்
அரசின் நிலைபாடோ இதற்கு எதிர்மாறாக உள்ளது.
ஊழியர்கள் உரிமைகள் சலுகைகள் பறிப்பு
மனிதவளம் அதாவது ஊழியர்களை, தொழிலாளர்க ளை பகுத்தறிந்து குறைப்பதன் மூலம் நிதி நிலையை சீர்
படுத்துவது, ஏற்கனவே ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தை
நிராகரித்து புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைப்பது என்று தனது கொள்கையில்
அறிவித்து உள்ளது பாதுகாப்பு அமைச்சகம். அவ்வாறு இணைக்கும் போது ஊழியர்கள் பெற்று
வந்த சிறப்புச் சலுகைகள் மற்றும் பணப்பலன்களை பெருமளவில் இழக்க நேரிடும்.
ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம் என்பதும் நிராகரிக் கப்படும். முப்படைகளின்
அனைத்து பாதுகாப்பு உற்பத்தி தொழிற் சாலைகள், அடிப்படை
பராமரிப்பு நிறுவனங்கள் ,ராணுவ பணிமனைகள், கடற்படை தளங்கள் என அனைத்தும் தனியார்-பொது பங்கேற்பு என்ற
அடிப்படையில் இனி செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் போது நாட்டின் மிக
முக்கியமான பாதுகாப்பு ரகசியங்கள் களவாடப்படும் நிலை ஏற்படும். தற்போதுள்ள
பாதுகாப்பு தளவாட மற்றும் சாதனங்கள் கொள்முதல் முறை பழைய முறை என்றும் அது அமைச்ச
கத்திற்கு ஒப்புதல் பெற பல படிநிலைகளில் ஏறத்தாழ எட்டு கமிட்டிகளின் ஒப்புதல்,
80 அதிகாரிகளின் கையெழுத்து கள் பெறப்பட்ட பின்னர் தான் அது
ஆணையாக மாறும். இதற்கு பல மாதங்களாகிறது. அதுமட்டுமல்ல நாட்டின் தலைமை பொது
தணிக்கை ஜெனரல், கொள்முதல் நடை முறையில் பல்வேறு
பிரச்சனைகளான கால அவகாசத்தை குறைக்க வேண்டும்; சிக்கலான
நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்று பல தாவாக்களில் குறிப்பிட்டுள்ளார். அது
மட்டுமல்ல, ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் தகுதி
பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ள நடைமுறை வரம்புகளுக்குள் இல்லை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
மனிதவளம் அதாவது ஊழியர்களை, தொழிலாளர்க ளை பகுத்தறிந்து குறைப்பதன் மூலம் நிதி நிலையை சீர்
படுத்துவது, ஏற்கனவே ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தை
நிராகரித்து புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைப்பது என்று தனது கொள்கையில்
அறிவித்து உள்ளது பாதுகாப்பு அமைச்சகம். அவ்வாறு இணைக்கும் போது ஊழியர்கள் பெற்று
வந்த சிறப்புச் சலுகைகள் மற்றும் பணப்பலன்களை பெருமளவில் இழக்க நேரிடும்.
ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம் என்பதும் நிராகரிக் கப்படும். முப்படைகளின்
அனைத்து பாதுகாப்பு உற்பத்தி தொழிற் சாலைகள், அடிப்படை
பராமரிப்பு நிறுவனங்கள் ,ராணுவ பணிமனைகள், கடற்படை தளங்கள் என அனைத்தும் தனியார்-பொது பங்கேற்பு என்ற
அடிப்படையில் இனி செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் போது நாட்டின் மிக
முக்கியமான பாதுகாப்பு ரகசியங்கள் களவாடப்படும் நிலை ஏற்படும். தற்போதுள்ள
பாதுகாப்பு தளவாட மற்றும் சாதனங்கள் கொள்முதல் முறை பழைய முறை என்றும் அது அமைச்ச
கத்திற்கு ஒப்புதல் பெற பல படிநிலைகளில் ஏறத்தாழ எட்டு கமிட்டிகளின் ஒப்புதல்,
80 அதிகாரிகளின் கையெழுத்து கள் பெறப்பட்ட பின்னர் தான் அது
ஆணையாக மாறும். இதற்கு பல மாதங்களாகிறது. அதுமட்டுமல்ல நாட்டின் தலைமை பொது
தணிக்கை ஜெனரல், கொள்முதல் நடை முறையில் பல்வேறு
பிரச்சனைகளான கால அவகாசத்தை குறைக்க வேண்டும்; சிக்கலான
நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்று பல தாவாக்களில் குறிப்பிட்டுள்ளார். அது
மட்டுமல்ல, ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் தகுதி
பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ள நடைமுறை வரம்புகளுக்குள் இல்லை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின்
கீழ் பாதுகாப்பு உற்பத்தி யில் தனியாரை மற்றும் அந்நிய நாட்டு முதலாளிகளை
ஈடுபடுத்த இந்திய அரசு ஏற்கனவே ஏராளமான முயற்சி களை எடுத்து வருகிறது. அதாவது
ஏற்கனவே இருந்த 26% அந்நிய முதலீடு என்று
இருந்ததை 100% என அதிக ரித்துள்ளது. இந்திய தனியார்
நிறுவனங்களும் உற்பத்தியில் ஈடுபட, முதலீடு செய்ய மற்றும்
உற்பத்தி ஆணை கள் பெற ஏற்கனவே இருந்த பல்வேறு விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
2025 ஆண்டிற்குள் ரூ. 1,70,000 கோடி
அளவிற்கான தளவாட உற்பத்தி மற்றும் ரூ.35,000 கோடி
ஏற்றுமதிக்கான இலக்கை பாதுகாப்புத்துறை நிர்ண யித்து அவற்றை முழுமையாக தனியாருக்கு
வழங்குவது என்று ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே இந்திய பொ துத்துறை நிறுவனங்களுக்கு
வரவேண்டிய வேலை ஆணைகள் அனுபவமில்லாத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.6000 கோடி அளவிற்கு உற்பத்தி ஆணைகள் வழங்கப் பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு கூட தனது பாதுகாப்புத்துறை சம்பந் தப்பட்ட
நடவடிக்கைகளில் அந்நியநாட்டை அனுமதிப்பது இல்லை. அதற்கான சட்டப் பாதுகாப்பை அதன்
நாடாளு மன்றம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் நமது இந்திய அரசு உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் இந்திய பாது காப்புத் துறையை ஒரு சந்தையாக
மாற்றி அந்நிய நாட்டிற்கும் இந்திய பெரும் முதலாளிகளுக்கும் திறந்து விட்டுள்ளது
தேசபாதுகாப்பை காவு கொடுப்பதற்கு ஈடாகும். தேசப்பற்றை, தேசியவாதத்தை
நொடிக்கு ஒரு முறை பேசும் மோடி தலைமையிலான அரசு அதைச் செய்து வருகிறது.
பாதுகாப்புத்
தொழிற்சாலைகள் கார்ப்பரேட்மயம்
ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகளின்
செயல் திறனை மேம்படுத்துவது பொறுப்பாக்குவது மற்றும் கூட்டுமயமாக்கல் என்ற பெயரில்
மத்திய பொதுத்துறை களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க முடிவெடுத்துள் ளது மோடி
அரசு. அதில் பல இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து உள்ளன.
இந்திய பாதுகாப்புத்துறை தளவாடங்கள் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கை அளிக்கும்
பிஇஎம்எல், கோவா சிப்யார்டு லிட், மாசாகோன் டாக் சிப் பில்டர்ஸ் லிட், இந்துஸ்
தான் சிப் யார்ட் லிட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், உற்பத்தி
செய்து வந்த அனைத்தும் இனி தனியார் நிறுவ னங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து
உற்பத்தி செய்யும்.
நமது விஞ்ஞானிகளின், தொழிலாளர்களின், ஊழியர்க ளின் உழைப்பால்
உருவாக்கப்பட்டவை பொதுத்துறை நிறு வனங்கள். ‘பாதுகாப்பு
துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மிக நேர்த்தியாக தங்களுக்கு அளிக்கப்
பட்ட வேலை ஆணைகளை நிறைவேற்றுகிறார்கள்’ என்று முன்னாள்
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தனது புத்தகத்தில்
தெரிவித்துள்ளார். தனது அமைச்சரே பாராட்டிய நிறுவனங்களை மோடி 2.0 அரசு தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மும்முரமாக
செய்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்
லிட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிட் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும்
தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகின்றன. அவற்றையும் இந்த அரசு
கார்ப்பரேட்மயத்திற்கு தள்ளுகிறது. 2017 ஏப்ரல் மாதத்தில்
பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் 41 ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகள்
உற்பத்தி செய்து வந்த 143 தளவாடங்களை அவுட்சோர்சிங்
மூலமாக தனியாருக்கு வழங்கியுள்ளது. 222 உரிமங்களை
தனியார் நிறுவனங்க ளுக்கு வழங்கியுள்ளது மோடி அரசு. இதனால் அங்கு பணி புரியும் 20000
தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் அபாயத்தால்
தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற் பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஆர்எப்ஐ, ஒஎப்டி, எஸ்ஏஎப் ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு
வழங்க நிதி ஆயோக் ஆலோசனை கூறி உள்ளது. எளிமையான வர்த்தகம் என்ற பெயரில்
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை தனியாருக்கு வழங்குவது பன்னாட்டு
நிறுவனங்களுடன் கூட்டு என தனியாரை அனுமதித்து வருகிறது மோடி 2.0 அரசு. கோவா சிப் யார்ட் நிறுவனத்தில் 25% பங்குகள்
விற்பனை, மற்ற சிப் யார்டுகள் தென் கொரிய ஹூண்டாய் கனரக
தொழில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
அதோடு ரிலையன்ஸ் டிபென்ஸ் லிட், லார்சன் டுப்ரோ போன்ற நிறுவனங்களை அரசு முன்னிலைப்படுத்தி வரு கிறது.
குஜராத்தில் உள்ள பிப்பாவ் சிப் யார்டுடன் ரிலை யன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் 198 போர்க்கப்பல் மற்றும்
நீர்மூழ்கி கப்பல்களின் கட்டு மான பணிகள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளன. இதன்
மதிப்பு ஏறத்தாழ மூன்று லட்சம் கோடியாகும். கடந்த எழுபது ஆண்டுகளாக
அபிவிருத்தி செய்யப்பட்ட நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி
திறனை அழிப்பதற்கான இந்த சதியை எதிர்த்து 41 தொழிற்சாலைகளில்
பணி புரியும் 85 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 45
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் 20.08.19 முதல் முப்பது நாட்கள் தேசத்தை பாதுகாக்க உண்மையான தேசப்பற்றுடன்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டை காப்பாற்ற இந்திய மக்களை காப்பாற்ற இந்த
தேசப்பற்று மிக்க வேலைநிறுத்தத்தை இந்திய தொழிற்சங்க மையத்தின் அனைத்து
இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஆத ரிக்கின்றன. நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள
அனைத்து பகுதி மக்களும் இதை ஆதரிக்கின்றனர்.
தொழில்துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தனியார்மயமாக்குவது ஆபத்து
தபன்சென் எச்சரிக்கை
திருநெல்வேலி, ஆக.18- தொழில்துறையின் ஆணி வேரான மின்சாரத்தை
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருமானம் ஈட்டிவரு கின்றன.தென்
மாநிலங்களில் மின்சாரம் இருமடங்கு பணம் கொடுத்து அரசால் வாங்கப்பட்டு வருகிறது என
சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் குற்றம் சாட்டினார். நெல்லையில் தமிழ்நாடு மின்
ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐ டியு) மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று 2
ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் சிஐ டியு பொதுச் செயலாளர்
தபன் சென், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர்
எஸ்.எஸ்.சுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன்
உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனிடையே செய்தியாளர் களை சந்தித்த
தபன்சென் கூறிய தாவது:
மத்திய அரசு மின்துறையை
தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தனியார்மய மாக்கும் முயற்சியை
எதிர்த்து தொமுச உள்ளிட்ட தொழிற்சங் கங்களுடன் இணைந்து போராட் டம் நடத்த முடிவு
செய்யப்பட்டுள் ளது. பாஜக அரசின் தவறான கொள்கையால் நாட்டின் உற்பத்தி
மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் எழுந்துள்ளது. தொழில் துறையின்
ஆணிவேரான மின்சாரத்தை தென்னிந்தியாவில் இரு மடங்கு பணம் கொடுத்து பெறக் கூடிய
சூழல் உள்ளது. தனியார் நிறுவனங்கள் மின்சா ரத்தை விற்பனை செய்து பன் மடங்கு பணம்
சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில
அரசுகள் மின்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதனை விடுத்து
தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் தொழிலாளர் களும் பொதுமக்களும்
தெருவில் இறங்கி போராடக்கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், “மின்வாரியத்தில் 40
ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம்
கடத்துகிறது. 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நசுக்கப்
பார்க்கி றது. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ரயில் மறியல் போன்ற போராட்டங்கள்
நடத்தப்படும்” என கூறினார். பேட்டியின்போது சிஐடியு அகில
இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் உடன் இருந்தார்.
தீர்மானங்கள்
முன்னதாக, மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு: பதினாறாவது
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசு நூறு நாள்
திட்டத்தை அறிவித்து அதை அமலாக்க புயல்வேக நடவடிக்கை எடுத்து வருகிறது. லாபம்
தரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை ரூ.90
ஆயிரம் லட் சம் கோடிக்கு விற்பனை செய்வ தற்கான ஒப்பந்தப் புள்ளி
கோரி யுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து
வரு கிறது. மின்துறையில் உள்நாட்டு, பன்னாட்டு
முதலாளிகளை ஊக்கு விக்கிற வகையில் பல்வேறு சலு கைகளை வாரி வழங்கி வருகிறது. அதில்
ஒரு அம்சமாக மின் உற் பத்தியாளர்களுக்கு மின் விநி யோக நிறுவனங்கள் பெறுகின்ற
மின்சாரத்திற்கான தொகையை செலுத்த தவறும்போது அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கி
லிருந்து மின் உற்பத்தியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மின்சார வாரியத்தின்
கஜானாவை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறந்து விடுகிறது.
ஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச
ஊதியம் ரூ.18,000 என நிர்ணயம் செய்து உத்தரவாக வும்
வெளிவந்து அமலாகும் தரு ணத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியம் வெறும் ரூ.4628
என அறி வித்து உழைப்பாளி மக்களின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.
ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத் தில் மத்திய அரசு மேற்கொண் டுள்ள இந்திய உழைப்பாளி
மக்க ளின் உதிரத்தை உறிஞ்சும் செயல் களுக்கு எதிராக இந்திய நாட்டு உழைப்பாளி
மக்கள் கடுமையான போராட்டக் களங்களில் இறங்கும் போது தமிழக மின்வாரிய ஊழி யர்களும்
அந்த போராட்ட ஜுவா லையில் தங்களை இணைத்துக் கொள்ள மாநாடு அழைப்பு விடுக்கிறது.
மேலும் தமிழக மின்வாரிய மறு சீரமைப்பைக் கைவிட, மின்விநி
யோக சட்டதிருத்த மசோதா-2018 கைவிட, மின்வாரிய ஊழியர் களுக்கு ஊதிய உயர்வை அளித்திட, தமிழக மின் நுகர்வோ ருக்கு தரமான மின்சாரம் தடை யில்லா மின்சாரம்
வழங்கிட உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்க, மின்சாரம்,
போக்கு வரத்து, ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கி, காப்பீடு
உள்ளிட்டவை பொதுத்துறைகளாகவே நீடித்திட, புதிய பென்சன்
திட்டத்தை கை விட, மின்வாரியத்தில் காலியாக உள்ள 40ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த
ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், அடை யாள அட்டை,
நிரந்தரம் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாநாட்டை வாழ்த்தி இந்திய மின்
ஊழியர் கூட்டமைப்பின் (இஇஎப்ஐ) பொதுச் செயலாளர் பிரசாந்தோ நந்தி சவுத்ரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம்,
தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலா ளர்
எஸ்.ஜெகதீசன் ஆகியோர் பேசி னர். மாலையில் நடந்த சிஐடியு 50 ஆண்டுகால போராட்ட வரலாறு என்னும் கருத்தரங்கத்திற்கு தி.ஜெய்சங்கர்
தலைமை வகித் தார். சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஆகி
யோர் பேசினர்.
இன்று பேரணி
இன்று (திங்கட்கிழமை)
மாநாட்டில் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெறு கிறது. சி.ஐ.டி.யு மாநில
பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்று கிறார். மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் கணேசா திருமண மண்டபத்தில் இருந்து பேரணி
புறப்படும். தொடர்ந்து பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி மைதானத்தில்
பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்
எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். வரவேற்புக் குழு செயலாளர் வண்ணமுத்து
வரவேற்று பேசுகிறார்.
பொதுக்கூட்டத்தில் சிஐடியு
மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர்
ஜி.சுகுமாறன், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,
ஆர்.சிங்காரவேலு, ஆர்.கருமலையான்,
எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன்,
கே.அருள்செல்வன், எம்.தனலெட்சுமி,
ஆர்.மோகன், எம்.பீர்முகம்மது ஆகியோர்
பேசுகின்றனர்.
நெல்லையில்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 2 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க
மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசினர். அருகில் சிஐடியு அகில இந்திய
பொதுச்செயலாளர் தபன் சென் மற்றும் சிஐடியு தலைவர்கள் உள்ளனர்.
வச்ச குறி... முதலும் கடைசியுமாய்... -க.சுவாமிநாதன்
மீண்டும் எல்.ஐ.சி குறி
வைக்கப்பட்டுள்ளது. வணிக இதழ்கள் பரபரப்பாக எல்.ஐ.சியின் பங்குகள் சந்தைக்கு வரப்
போகின்றன என்று எழுதுகின்றன. வணிக இதழ்கள் யாரால் நடத்தப்படுகிறதோ அவர்கள் இது
போன்ற பங்கு விற்பனையை ஆசையோடு எதிர்நோக்கி காத்திருப்பவர்கள். ஆனால் செய்திகளின்
பின்புலமாக ஆசை மட்டும் இருப்பதாக தெரியவில்லை. குரங்கு குட்டியை விட்டு ஆழம்
பார்க்குமென்பார்களே அது போல மக்களின் மனதை தயார் செய்கிற அரசின் நோக்கமும் இதில்
ஒளிந்திருக்கலாம்.
வஞ்சத்தோடு காத்திருந்தவர்கள்
இது இந்தியப் பெரும்
தொழிலதிபர்களின் கால் நூற்றாண்டு கனவு. 1956ல் 245
தனியார் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு எல்.ஐ.சி பிறந்தது.
அப்போதே இன்சூரன்ஸ் வணிகத்தில் டாட்டா, பிர்லா, சிங்கானியா போன்ற பெரும் பெரும் புள்ளிகள் இருந்தவர்கள்தான். தலைமுறை
தலைமுறையாக வஞ்சம் தீர்க்க காத்திருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக 1991 க்கு பின்னர் அமலான உலகமயம் அமைந்தது. அவர்களின் முதல் குறியாக
அமைந்தது எல்.ஐ.சிதான். 1994 லிலேயே மல்ஹோத்ரா குழு
அறிக்கை வெளி வந்தது. அது 50 சதவீத எல்.ஐ.சி பங்குகள்
விற்கப்பட வேண்டுமென்றும், அந்நிய முதலீட்டிற்கு இந்த
துறை திறந்து விடப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. உலகமயத்தின் ஆனால்
இன்சூரன்ஸ் ஊழியர்களின், இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பு
அம் முன்மொழிவுகளுக்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்கியது. இன்சூரன்ஸ் துறையில்
எல்.ஐ.சி “இயல்பான ஏகபோகமாக” அமைய
வேண்டுமென்ற பிரச்சாரம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஐந்தாண்டு திட்டங்களுக்கு
எல்.ஐ.சி அளித்து வருகிற நிதியாதாரங்கள், ஆதார தொழில்
வளர்ச்சிக்கு அது அதன் பங்களிப்பு, சமூகத்தின் கடைசி
தட்டு வரை காப்பீடை கொண்டு போய் சேர்ப்பது, லஞ்ச
லாவண்யமற்ற உரிமப் பட்டுவாடா ஆகியன மக்கள் மத்தியிலான உரையாடல்களில் இடம் பெற்றன.
இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்திற்குள் இருந்த பலமும் இவ் வாதங்களுக்கு வலு
சேர்த்தது. நாடாளுமன்றத்திற்கு உள்ளும்- வெளியுமான போராட்டம் எவ்வாறு இணைக்கப்பட
வேண்டும் என்பதற்கு இப் பிரச்சனை உதாரணமாக அமைந்தது.
பாராசாரி குதிரைக்கு
கடிவாளம்
எத்தனையோ துறைகளை உடைத்து
உள்ளே நுழைந்த உலகமயம் இன்சூரன்ஸ் துறையில் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை. 1996 ல் நரசிம்மராவ் அரசாங்கம் வெளியேறுகிற வரை மல்ஹோத்ரா
குழு அறிக்கைகளில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கொள்கை
அளவில் ஏற்பதாக அறிவித்ததோடு நின்றது. அடுத்து ஐக்கிய முன்னணி அரசு. இடதுசாரிகளின்
ஆதரவோடு அமைந்த அரசாங்கம். பிரதமராக குஜ்ரால் இருந்த போது நாடாளுமன்றத்தில்
இன்சூரன்ஸ் கட்டுப்பாடு சட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அதில் அந்நிய
முதலீடு, தனியார்கள் அனுமதி பற்றி மட்டுமே இருந்ததே தவிர
அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து பேசப்படவில்லை. அன்றைய நிதி
அமைச்சர் பட்ஜெட் உரையில் எல்.ஐ.சி, அரசு பொது இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் பலப்படுத்தப்படுமென அறிவித்தார். இது மக்கள் கருத்திற்கு கிடைத்த
முதல் வெற்றி. எனினும் குஜ்ரால் அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு
மசோதாவும் நிறைவேறவில்லை. காத்திருந்தார்கள் அந்நிய முதலீடும், தனியார்களும் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைமைக்காக.
வாஜ்பாய் அரசாங்கம் வந்தது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுதேசி பேசி தெருத் தெருவாக சுதேசி சோப், சுதேசி பானம் என்று கூவி கூவி விற்று வந்தவர்கள். ஆட்சி நாற்காலியில்
அமர்ந்தவுடன் “படிப்படியான மீண்டும் எல்.ஐ.சி குறி
வைக்கப்பட்டுள்ளது. வணிக இதழ்கள் பரபரப்பாக எல்.ஐ.சியின் பங்குகள் சந்தைக்கு வரப்
போகின்றன என்று எழுதுகின்றன. வணிக இதழ்கள் யாரால் நடத்தப்படுகிறதோ அவர்கள் இது
போன்ற பங்கு விற்பனையை ஆசையோடு எதிர்நோக்கி காத்திருப்பவர்கள். ஆனால் செய்திகளின்
பின்புலமாக ஆசை மட்டும் இருப்பதாக தெரியவில்லை. குரங்கு குட்டியை விட்டு ஆழம்
பார்க்குமென்பார்களே அது போல மக்களின் மனதை தயார் செய்கிற அரசின் நோக்கமும் இதில்
ஒளிந்திருக்கலாம். அந்நிய முதலீடு அனுமதியே” (Calibrated Globalisation) சுதேசியின் இலக்கணம் என்று அறிவித்தார்கள். காங்கிரஸ் காலத்தில் சுதேசி
ஆட்டம் போட்ட ஆடிட்டர் குருமூர்த்தியின் சுதேசி ஜாக்ரான் மன்ச் போன்ற சங் பரிவார்
அமைப்புகள் முணு முணுப்பையே எதிர்வினையாக தந்து தங்கள் இரட்டை முகத்தை காண்பித்து
விட்டு மௌனமாகி விட்டன. நிதியமைச்சர் யஸ்வந்த்சிங் “இன்சூரன்ஸ்
கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவை” கொண்டு வந்தார். அதில் 49
சதவீத அந்நிய முதலீடு அனுமதி என்றே முதலில் இருந்தது. கடும்
எதிர்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட எதிர்க்கிற பாவத்தையே காட்டியது.
ஆனால் திரை மறைவு பேரங்கள்
காங்கிரஸ் நிலையில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதற்கு அரசியல் இடைத் தரகராக இருந்த
காங்கிரஸ் எம்.பி முரளி தியோரா அமெரிக்க அதிபர் கிளிண்டன் அவர்களால் புத்தாயிரம்
ஆண்டு விருந்துக்கு அழைக்கப்பட்டு “இந்திய
இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களின் சிற்பி” என்று
பாராட்டப்பட்டார். அவருக்கு அங்கு விருந்து, பன்னாட்டு
இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியாவில் விருந்து. என்றாலும் பொது வெளியில் இருந்த
எதிர்ப்பை சமாளிக்க 49 சதவீத அந்நிய முதலீட்டை 26
சதவீதம் என்று குறைத்து அந்த மசோதாவை சட்டம் ஆக்க
வேண்டியிருந்தது. அப்போதும் எல்.ஐ.சி, அரசு பொது
இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. இக் காலத்தில்தான்
இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இலக்குகளை கடந்து
ஒன்றரைக் கோடி கையெழுத்துக் களோடு மக்களால் பேசப்படுவதாக மாறியது. ஆனால் பெரிய
பெரிய பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் ஏ.ஐ.ஜி, சன் லைப்,
புருடன்சியல் போன்றவை உள்ளே நுழைந்தன. 26 சதவீதம் என்கிற அந்நிய முதலீட்டு வரையறை இருந்ததால் இந்திய இன்சூரன்ஸ்
நிறுவனங்களின் இளைய பங்காளிகளாகவே வர வேண்டி வந்தது. லாபம் கொட்டும் தொழில் எனும்
போது கௌரவமா பார்க்கும் பன்னாட்டு மூலதனம்? இப்படிப்பட்ட
கடிவாளத்தை எதிர்ப்பியக்கங்களால் போட முடிந்தாலும் பன்னாட்டு மூலதனக் குதிரை
திமிறிக் கொண்டுதான் இருந்தது.
காத்திருக்காமல் கம்பி
நீட்டியவர்கள்
இது மீண்டும் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசாங்கம்-1 காலத்தில் தொடுக்கப்பட்டது.
அப்போது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இரண்டு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.
ஒன்று எல்.ஐ.சி பங்கு விற்பனையையும், எல்.ஐ.சி க்கு உள்ள
அரசு உத்தரவாதத்தை நீக்குவதையும் உள்ளடக்கியது. இரண்டாவது, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதம்
ஆக உயர்த்துவது. மீண்டும் கருத்தாக்க களம் சூடானது. இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தெரிவித்தனர். இன்சூரன்ஸ் ஊழியர்களும்
களம் இறங்கினர். எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான சரத்து அம் மசோதாவில் இருந்து
நீக்கப்பட்டது. அரசு உத்தரவாதமும் தப்பியது. 2009ல்
கிடைத்த இன்னொரு குறிப்பிடத் தக்க வெற்றி. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு
அதிகரிப்பு மசோதா நாடாளுமன்ற நிலை குழுவின் பரிசீலனையில் தேறவில்லை. வினோதம்
என்னவெனில் 1999ல் அந்நிய முதலீட்டு மசோதாவை நிறைவேற்றிய
யஸ்வந்த் சின்காதான் இந்த நிலைக் குழுவின் தலைவர். உலக நிதி நெருக்கடியின் பின்
புலத்தில் இப்போது அந்நிய முதலீடு உயர்வு உசிதமல்ல என அக் குழு கூறியது.
மீண்டும் ஒரு வெற்றி. 49 சதவீத அந்நிய முதலீடு கனவு
தற்காலிகமாக கலைந்தது. அமெரிக்க நிறுவனமான ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலிய
நிறுவனமான ஏ.எம்.பி போன்றவை இந்திய இன்சூரன்ஸ் இணை வினைகளில் இருந்து வெளியேறின.
காத்திருக்காமல் கம்பி நீட்டியவர்கள் இவர்கள்!
இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து 2014 ல் மோடி வந்தார். மீண்டும் 49 சதவீத முதலீடு
மசோதா. அதில் ஒரு சூட்சுமத்தை சேர்த்து கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு தடவை
அந்நிய முதலீடு உயர்வுக்கும் ஏன் நாடாளுமன்ற த்திற்கு வர வேண்டும்? அரசு நினைக்கும் போது உயர்த்திக் கொள்ளலாம் என ஒரு வரியை அதில்
சேர்த்தார்கள். அவர்களால் 49 சதவீத அந்நிய முதலீடு
மசோதாவை நிறைவேற்ற முடிந்தாலும் இந்த வரியை மசோதாவில் இருந்து வெளியே எடுக்க
வேண்டி வந்தது. 49 சதவீதத்தை அந்நிய முதலீட்டிற்கு பெரும்
எதிர்ப்பு இருந்ததால் “இந்தியர் கட்டுப்பாட்டில்” நிறுவனங்கள் இருக்கும் என்ற வரியை சேர்க்க வேண்டியிருந்தது.
இப்படி ஓர் அரசின் முன்மொழிவு, சட்ட வரைவு வரிக்கு வரி
விவாதிக்கப்படு வதற்கு மக்கள் கருத்து திரட்டப்பட்டதே காரணம். இது உலகமய எதிர்ப்பு
இயக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம்.
மீண்டும் வருகிறார்கள்
இப்படி 25 ஆண்டு காலம் ஓடியுள்ளன. பொது இன்சூரன்ஸ் துறையில் பங்கு விற்பனையை
துவக்கியுள்ளார்கள். மறு காப்பீட்டு அரசு நிறுவனமான இந்திய பொது இன்சூரன்ஸ் கழகம்
(GIC Re) மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி ஆகியன
பங்கு விற்பனைக்கு ஆளாகியுள்ளன. எல்.ஐ.சி 100 சதவீத அரசு
பங்குகளோடு ஒரு செங்கல் கூட உருவப்படாமல் இருக்கிறது. இது கண்களை உறுத்தாமல்
இருக்குமா? எல்.ஐ.சியின் வைர விழா நிகழ்ச்சியில் 2016
ஆம் ஆண்டு மும்பையில் பங்கேற்ற அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
எல்.ஐ.சி பங்கு சந்தைக்கு சென்றிருந்தால் அதிகமான மதிப்பு மிக்க நிறுவனமாக
திகழ்ந்திருக்கும் என்று கூறி அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதுவே இப்போது
வணிக இதழ்களின் ஆசையாக வெளிப்பட்டுள்ளது. 1,05,000 கோடி
ரூபாய் பங்கு விற்பனை இலக்கு போட்டிருக்கிற நிர்மலா சீதாராமன் அதற்கு எங்கே போவார்?
அதுதான் எல்.ஐ.சி நோக்கி கவனம் திரும்பியுள்ளது.
எந்தெந்த வாதங்கள் எல்.ஐ.சி
தனியார் மயத்திற்கு எதிராக 1990 களில் முன்
வைக்கப்பட்டதோ அவை அத்தனையும் இப்போதும் பொருத்தமானவை. இன்னும் சொல்லப் போனால்
அதிகம் பொருத்தமானவை.
* 20 ஆண்டுகளாக களத்தில்
உள்ள தனியார் நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கான இன்சூரன்ஸ் பரவலை செய்யவில்லை.
* இன்றும் ஆதாரத் தொழில்
வளர்ச்சிக்கு எல்.ஐ.சியின் நிதியாதாரங்களே பெரும் பங்களிப்பாக உள்ளன. ரயில்வே 1,50,000
கோடிகள் வேண்டுமென்றவுடன் ஐந்தாண்டு களில் ரூ. 30000 கோடி வீதம் தருவதாக எல்.ஐ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்துபோட்டது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி என்றாலும் நம்பகமான ஊற்று
எல்.ஐ.சிதான். முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கு (1956- 62) ரூ.184
கோடிகள் கொடுத்த எல்.ஐ.சி 12வது
ஐந்தாண்டு திட்டத்திற்கு கொடுத்த தொகை ரூ.14,23,055 கோடிகள்.
13வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு
ஆண்டுகளிலேயே ரூ.7,01,483 கோடிகள். ஆண்டு சராசரி 3
லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அந்நிய முதலீடுகளை விட உள்
நாட்டு சேமிப்புகளே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு பக்க விளைவுகளும் இல்லாத
அருமருந்து என்பதை எல்.ஐ.சி நிரூபித்துள்ளது.
* ஒரு புறம் எல்.ஐ.சியில்
தன் பிடியை தளர்த்த விரும்புகிற அரசாங்கம் இன்னொரு புறம் தான் தத்தளிக்கிற
இடங்களில் எல்.ஐ.சியின் உதவிக் கரங்களைப் பற்றியே கரையேறி வருகிறது. அரசின்
மின்சாரக் கனவான “உஜ்வால் டிஸ்காம் அஸ்யூரன்ஸ்
யோஜனாவுக்கு” நிதி தந்தது யார்? என்.டி.பி.சி,
ஓ.என்.ஜி.சி, செயில், கோல் இந்தியா, பெல், எச்.ஏ.எல்,
ஐ.ஓ சி... என வரிசையாக அரசின் பங்கு விற்பனை முயற்சிகளில் விலை
சரிந்து அலாரம் அடித்த போதெல்லாம் ஓடிப் போய் உதவியது யார்? (2014-18
க்கு இடைப்பட்ட காலத்தில் மோடி அரசின் பங்கு விற்பனைக்கு
எல்.ஐ.சி மட்டுமே உதவியிருப்பது 48000 கோடிகள்).
ஐ.டி.பி.ஐ சிக்கலுக்கு ஆளான போது அதை வாங்க இன்னொரு வங்கி கிடைக்காத போது அதைக்
காப்பாற்ற உதவியது யார்?
தங்க வாத்து
எல்.ஐ.சி பங்கு சந்தைக்கு
வந்தால் ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களை விட
அதிக மதிப்பு மிக்க சரக்காக இருக்கும் என்பதுதான் மூலதனத்தின் நாக்குகளில் உமிழ்
நீர் சுரப்பதற்கு காரணம். அரசின் 5 கோடி மூலதனத்தோடு
1956ல் துவக்கப்பட்ட நிறுவனம் 2018 ல் ஈட்டிய உபரி மட்டும் ரூ. 48436 கோடிகள்.
அதன் சொத்து மதிப்பு 31.11 லட்சம் கோடிகள். மெகா
விருந்துதான் அவர்களுக்கு.... இருந்தாலும் லாப வெறி பன்னாட்டு மூலதனத்தை, இந்திய பெரும் தொழிலகங்களை உந்தித் தள்ளுகிறது. “100 சதவீத லாபம் கிடைக்குமென்றால் மூலதனம் எந்த சட்டங்களையும் உடைத்து
நொறுக்கும்” என்றார் காரல் மார்க்ஸ். அப்படியொரு
காமதேனுவாக திகழ்கிற எல்.ஐ.சியை விட்டு வைப்பார்களா? முதலில்
குறி வைத்து முடியாமல் போனவர்கள் கடைசியாய் மீண்டும் வருகிறார்கள்.
இவ்வளவு
பங்களிப்பு தருகிற நிறுவனத்தை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பது சரியா? என்ன செய்வது! தங்க வாத்தை அறுப்பவர்கள் எப்போதுமே யோசிப்பதில்லை.
கட்டுரையாளர்:
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்.
ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி ஆபத்தான அறிகுறி... நாடு பொருளாதார தேக்க நிலையில் இருப்பதற்கு இதுவே உதாரணம்
இந்திய ஆட்டோ மொபைல் துறை, கடந்த2
ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
நாட்டின் முன்னணிவாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மாருதி சுசுகிபோன்ற
நிறுவனங்களே, தங்கள் உற்பத்தியைநிறுத்தி வைக்கும்
அளவிற்கும், தொழிற்சாலைகளை மூடும் அளவிற்கும் நிலைமை
மோசமாகிவருகிறது. இப்போதே ஆட்டோ மொபைல் துறையை நம்பியிருந்த சுமார் 30 லட்சம் பேர் வேலையிழப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.இந்நிலையில், ஆட்டோ மொபைல் துறைக்கு
ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து,பொருளாதார வல்லுநர்
ஜெ. ஜெயரஞ்சனிடம் ‘மின்னம்பலம்’ இணையதள
ஏடு நடத்திய நேர்காணலும், அதற்கு ஜெயரஞ்சன் அளித்த
பதில்களும் வருமாறு:
வியாபார மந்தநிலை
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பதில்: விற்பனையை ஒவ்வொரு
ஆண்டும்அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுவர், அல்லது
இந்த காலாண்டை இதற்கு முந்தையகாலாண்டோடு ஒப்பிடுவர். இப்படி பார்க்கும் போது கடந்த
40 மாதங்களில் இல்லாத அளவுக்கு
இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிலும் கடந்த 15லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிசென்று கொண்டிருக்கிறது. இதையே வியாபாரமந்தநிலை என்று கூறுகிறார்கள். மோட்டார் வாகன உற்பத்தி துறை மட்டுமல்ல பல துறைகள்தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அந்த வீழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.
இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிலும் கடந்த 15லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிசென்று கொண்டிருக்கிறது. இதையே வியாபாரமந்தநிலை என்று கூறுகிறார்கள். மோட்டார் வாகன உற்பத்தி துறை மட்டுமல்ல பல துறைகள்தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அந்த வீழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.
மோட்டார் வாகன உற்பத்தி
துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கான காரணம் என்ன?
சாதாரண மக்கள்
உபயோகப்படுத்தும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள்,
அதற்குப்பின் கார், ஆடம்பர கார்,
லாரி, பஸ், டிராக்டர்ஆகிய
அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மோட்டார் வாகன உற்பத்தித் துறை. இதில் உள்ள
ஒவ்வொரு வாகனப் பிரிவுகளும் ஒவ்வொரு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.உதாரணமாக டிராக்டர் உற்பத்தியில் மந்தநிலை ஏற்படுகிறது என்றால் கிராமப்புறங்கள் நன்றாக இல்லை என்று அர்த்தம். விவசாயம்செழிப்பாக இல்லை என்றால் டிராக்டர்கள் வாங்குவது குறைந்து போகும். கிராமப்புற, நகர்ப்புறங்களைச் சார்ந்த கீழ் நடுத்தர வகுப்பினரிடம் வேலைவாய்ப்பு, பணப்புழக்கம் இல்லை என்றால் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இருக்காது.உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம்குறைகிறது என்றாலும் கார்கள் விற்பனை குறைந்துவிடும். புதிய தொழில் தொடங்கப்படவில்லை என்றால், தொழிலுக்கான மூலதனங்கள் குறைந்து போனால் சரக்கு போக்குவரத்துக்கான லாரிகள் விற்பனை குறைந்து போகும். ஆக ஒட்டுமொத்தமாக மோட்டார் வாகனஉற்பத்தித் துறையின் வியாபாரம் மந்தநிலையைஅடைந்ததற்கு காரணம், அனைத்து தரப்பிலும் பணப்புழக்கம் இல்லை, பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது.
ஒவ்வொரு வாகனப் பிரிவுகளும் ஒவ்வொரு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.உதாரணமாக டிராக்டர் உற்பத்தியில் மந்தநிலை ஏற்படுகிறது என்றால் கிராமப்புறங்கள் நன்றாக இல்லை என்று அர்த்தம். விவசாயம்செழிப்பாக இல்லை என்றால் டிராக்டர்கள் வாங்குவது குறைந்து போகும். கிராமப்புற, நகர்ப்புறங்களைச் சார்ந்த கீழ் நடுத்தர வகுப்பினரிடம் வேலைவாய்ப்பு, பணப்புழக்கம் இல்லை என்றால் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இருக்காது.உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம்குறைகிறது என்றாலும் கார்கள் விற்பனை குறைந்துவிடும். புதிய தொழில் தொடங்கப்படவில்லை என்றால், தொழிலுக்கான மூலதனங்கள் குறைந்து போனால் சரக்கு போக்குவரத்துக்கான லாரிகள் விற்பனை குறைந்து போகும். ஆக ஒட்டுமொத்தமாக மோட்டார் வாகனஉற்பத்தித் துறையின் வியாபாரம் மந்தநிலையைஅடைந்ததற்கு காரணம், அனைத்து தரப்பிலும் பணப்புழக்கம் இல்லை, பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது.
இந்தத் துறையில் உள்ள
சுமார் பத்து நிறுவனங்கள் சில நாள்கள் தொழிற்கூடங்களை மூடுவதால் என்ன மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி விடும்?
ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கு
பின்னாலும் ஆயிரம் சிறிய நிறுவனங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு பிரபல நிறுவனம்
கார் தயாரிக்கிறது என்றால், முழு காரையும் அந்த நிறுவனம்
தயாரிப்பதில்லை. காரில் உள்ள உதிரிபாகங்கள் அனைத்தும் தனித்தனி நிறுவனங்களில்
தயாராகி பெரிய நிறுவனத்திற்கு வரும். அதாவது ஒரு நிறுவனம் காரின் டயரை
மட்டும்தயாரிக்கும், இன்னொரு நிறுவனம் பிரேக்கை மட்டும்
தயாரிக்கும், மற்றொரு நிறுவனம் எலெக்டிரிக் பாகங்களை
தயாரித்து அனுப்பும்.காருக்கு தேவையான இரும்பு தகடுகள் ஒரு தொழிற்சாலையில்
தயாராகும். அந்த இரும்பு ஒரு சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும்.
பெரிய நிறுவனம் அந்த பாகங்களை
எல்லாம்சேர்த்து காரை உருவாக்கும். இந்நிறுவனம் சிலநாள்கள் தொழிற்கூடத்தை மூடினால்
அதற்குபாகங்களை விநியோகிக்கும் ஆயிரம் நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்த
வேண்டும். அந்த நிறுவன ஊழியர்களும் குடும்பங்களும் வேலையிழப்பை சந்திக்க
வேண்டிவரும்.
இந்த தற்காலிக வேலையிழப்பு
நிரந்தர வேலையிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதா?
இது ஒரு சங்கிலித் தொடர்
போன்றது. இந்த தற்காலிக வேலையிழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான
குடும்பங்களின் வருவாய் பறிபோகிறது. இவர்கள்தான் சந்தையில் மோட்டார் வாகனங்களை
வாங்க வேண்டும். பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள இவர்கள் சந்தையில் எப்படி
வாகனங்களை வாங்குவார்கள்? அப்படியெனில் மேலும்
மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் மந்தநிலையை அடையும். அதனால் அதை
நம்பியுள்ள நிறுவனங்கள், அதைச் சார்ந்த லட்சக்கணக்கான
குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு ஏற்படும். இதற்கு
மல்டிபிளேயர் என்று பெயர்.அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை அடித்தால் ஒன்று
மற்றொன்றை அடித்து சாய்த்துக் கொண்டே போகுமே அப்படியானது இது.
அப்படியானால்
ஒட்டுமொத்தமாக அத்தனை தரப்பையும் பதம் பார்த்துவிடுமா இந்த வியாபார மந்தநிலை?
இல்லை. அதைத் தடுக்க
வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு சரிந்துகொண்டே வரும் சீட்டுகட்டில் இடையில் இரண்டு
சீட்டுகளை உருவிவிட்டால் போதும், பின்னால் உள்ள
சீட்டுகள்விழாமல் தடுக்கலாம். அதைப் போல் வியாபார மந்தநிலையைப் போக்க
நிறுவனங்களுக்கு அரசு, வங்கிகள் மூலமாக நிதியை அளிக்க
வேண்டும். மேலும் இந்த வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள
வேண்டும். அதன் மூலம் இந்த மந்தநிலையை குறைக்கலாம். மிக முக்கியமாக கிராமப்புற
வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும், அரசு அவர் களுக்கான
வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் தேக்கநிலை
ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக நாட்டின்அனைத்து துறைகளையும் பாதிக்கும். வாங்கும்திறன்
அதிகரித்தால் தானே சந்தையில் விற்பனை இருக்கும். அதைவிடுத்து
வெளிநாட்டுநிறுவனங்களுக்கு எவ்வளவு சலுகைகள் அளித்தாலும் அவர்கள் தொழில் தொடங்க
முன்வர மாட்டார்கள். தங்கள் பொருள்களை விற்கமுடியாவிட்டால் எப்படி வருவார்கள்.
வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாவிட்டால் இந்த சீட்டுகட்டு சரிவதை நிறுத்த முடியாது.
நன்றி: மின்னம்பலம்.காம்
இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?
மக்கள்
விடுதலை, 24 Aug 2019
ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள் விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக
இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச்
செய்தியாகி வருகின்றன.ஆட்டோமொபைல் தொழிற்துறையைப்
பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.9
விழுக்காடாக இருந்த விற்பனை வளர்ச்சி, ஏப்ரல்-ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் 6.2 விழுக்காடாக
குறைந்துள்ளது (பிபிசி தரவு).
தொழில்மந்த காலத்தில், லாப வீதம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்காக முதலாளித்துவ நிறுவனங்கள்
உற்பத்தி குறைப்பிலும், ஆட் குறைப்பு நடவடிக்கைகளில்
தற்போது ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவின் முன்னணி பிஸ்கெட் நிறுவனமான பார்லே,
பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.
டிவிஎஸ், நிசான், டாடா,
அசோக் லேலண்ட் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்
விடுமுறை அறிவிப்புகளும் ஆட் குறைப்பு அறிவிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றன.
“இந்தியப் பொருளாதாரம் கடுமையான தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் பிஸ்கட்டை
வாங்கக்கூட வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர்” என பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வருண் பெரி தெரிவித்துள்ளார்.
நாட்டின்
பொருளாதார சூழல் கவலை அளிக்கிறது என இந்திய ரிசர்வ் வங்கியின்
முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவிக்கிறார்.
2016-17
ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி வீதம் சரியத் தொடங்கியதிலிருந்து பொருளாதார மந்தப்
போக்கு என்ற பிரச்சனை நடைமுறையில் வெளிப்படத் தொடங்கிவிட்டது. அப்போது பிரதமர்
மோடியோ, எல்லாம் சரியாக செல்கிறது என்றார்.
தற்போது
2018-19
, ஜனவரி–மார்ச் காலாண்டில் நாட்டின்
ஜி.டி.பி 5.8 விழுக்காடாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏப்ரல்-–ஜூன்
காலாண்டில் 8 விழுக்காடாகவும் ஜூலை –செப்டம்பர் காலாண்டில் 7 விழுக்காடாகவும்,
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.6 விழுக்காடாகவும்
சரிந்து வந்த பொருளாதாரம் தற்போது 5.8 விழுக்காடாக
வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், முதல்
முறையாக இத்தொடர் சரிவு ஏற்பட்டுவருகிறது. (https://www.businesstoday.in/current/slowdown-blues/gdp-india-fall-march-quarter-q4-fy-2018-19/story/352601.html)
நாட்டின் பொருளாதார மந்தப் போக்கின் எதார்த்த உண்மை
விவரங்கள் இவ்வாறு இருக்க நாட்டின் பிரதமர், வழக்கம்
போல நடைமுறை சாத்தியப்பாடற்ற பொய் உறுதிமொழிகளை வழங்கிவருகிறார். கடந்த சுந்தந்திர தின உரையில்,
2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவோம் என்றார். பிரதமரின் வெற்று உறுதிமொழிகள்
நிதி ஆயோக் தலைவரை அச்சப்படுத்தியிருக்கக் கூடும் போலும்.
“கடந்த 70 ஆண்டுகளில் (நாங்கள்) இந்த வகையான
பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது.
நாட்டின் பொருளாதார சரிந்துள்ளது” என நிதி ஆயோக்கின்
தலைவர், ராஜீவ் குமார் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.
மோடியின் “ஐந்து ட்ரில்லியன் டாலர்” உரை முடிந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள்ளாக
(அறுபது ஆண்டுகால திட்டகுழுவை கலைத்து உருவாக்கப்பட்ட) நிதி ஆயோக்கின் தலைவர்
நாட்டின் பொருளாதரம் குறித்த உண்மையை உடைத்துவிட்டார்.
முன்னதாக
2008
உலக நெருக்கடியை முன் அனுமானித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரகுராம் ராஜனை பாஜக தூக்கி எறிந்தது. அடுத்த வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்
பட்டேல் ராஜினாமா செய்துவிட்டார். அடுத்து நிதி
ஆயோக்கின் முன்னால் தலைவர் அரவிந்த் பனக்காரிய மற்றும் பிரதமரின் பொருளாதார
ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், ரிசர்வ் வங்கியின் துணை
ஆளுநர் விரால் ஆச்சார்யா ஆகியோர் அடுத்தடுத்த “சொந்தக்
காரணங்களுக்காக” ராஜினாமா செய்துவிட்டு நடையைக் கட்டினர்.
இந்த ராஜினாமாக்கள் பாஜக அரசுக்கும் லிபரல் பொருளாதார அறிவுஜீவி குழுக்குமான
(அதிகாரவர்க்கத்தின்) வெளிப்படையான முரண்பாட்டை
அம்பலப்படுத்தியது.
தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசோ இந்தியப்
பொருளாதாரம் ‘சரியாகிவிடும் என நினைத்தால்
சரியாகிவிடும்’ என சொந்தக் காரண ராஜினாமாவை தவிர்க்குப்
பொருட்டு கவனமாக பேசுகிறார். தாராளமயகட்டத்தில், முதலாளித்துவம்-மதமாகவும்,
சந்தை கடவுளாகவும், பொருளாதாரம்-ஏதோ
இறையையில் நம்பிக்கை சார்ந்த விஷயம்போல ஆகிவிட்டது என்ற அலக்ஸ் ஆண்ட்ரூஸின்(கார்டியன்
நாளிதழில்)மேற்கோளுக்கு,இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
சமகால உதாரணமாகவும் மாறிவிட்டார்!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணம்தான் என்ன? இது தொழில் மந்தப் போக்கா?அல்லது
இந்தியப் பொருளாதாரத்தின் structural நெருக்கடியா?
என்பதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.
1
பாஜகவின்
மோசடி ஜிடிபி பிரச்சாரமும், வேலைவாய்ப்பற்ற
வளர்ச்சியும்
நாட்டின் பொருளாதாரம் பற்றி
பேசும்போதும், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியே நாட்டின்
வளர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. ஆகவே, இதிலிருந்தே
நாமும் தொடங்குவோம்.
நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தி( GDP) 7 விழுக்காடு வளர்ச்சியில்
செல்லும்போது, வேலையில்லாமல் எப்படி இருக்கும் என பிரதமர்
மோடி கதையளந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராஜன், ஒருவேளை GDP
எண்ணே தவறாக இருக்கலாம் என்றார். ராஜனைப் பொறுத்தவரை,
பாஜகவின் அழுத்தத்தின் பேரில் வேண்டுமென்ற GDP’யை மிகையாக உயர்த்தி கணக்கிடுவதை விமர்சித்து வந்தார். இதை மனதில்
வைத்தே, விருப்ப வெறுப்பற்ற வகையில் சுதந்திரமான அமைப்பை
கொண்டு GDP கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என
வற்புறுத்தி வந்தார். (https://economictimes.indiatimes.com/news/economy/indicators/raghuram-rajan-raises-doubts-about-india-growing-at-7-says-cloud-over-gdp-data-needs-to-be-cleared/articleshow/68581012.cms?from=mdr)
2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்குவந்த சில காலத்திலயே நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையை மாற்றினார்கள். இதனால் ஜி.டி.பி
வளர்ச்சிவிகிதம் 2 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாறு
ஜி.டி.பி கணக்கீட்டு முறைகளை மாற்றி, காங்கிரஸ் ஆட்சியில்
வளர்ச்சியில்லை எனவும் பாஜக ஆட்சியில் 7 விழுக்காடு
வளர்ச்சியடைந்ததது எனவும் பொய் விளம்பரப் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. புதிய
கணக்கீட்டு முறையால் பொருளாதார வளர்ச்சியானது மிகையாக 2.5 விழுக்காடு அதிகரித்துக் காட்டப்பட்டது என முன்னாள் தலைமைப் பொருளாதார
ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறினார். மேலும் ‘ரிசர்வ்
வங்கியானது வலிமையான தன்னாட்சி அமைப்பாக இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதன்
சுயாட்சி மற்றும் சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு
வெளியிட்டுள்ள ஜி.டி.பி புள்ளி விவரங்கள் குழப்பத்துடன் இருக்கிறது. அதைத்
தெளிவுபடுத்த வேண்டும்‘ என பாஜகவின் ஜிடிபி எண்
மோசடியை மறைமுகமாக சாடினார்.
நாடு
வளர்கிறது என்றால் வேலை வாய்ப்பு எங்கே? 2017-18 இல்
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை 6.1
விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியில் ஆணையம் நடத்திய
ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை மறைக்க முயன்ற பாஜக அம்பலப்பட்டது. ஒரு
கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என
வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடியோ தற்போது பக்கோடா
விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம்
என்கிறார். உள்துறை அமைச்சர் அமித்சாவோ, வேலை இல்லாமல்
இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என நாடாளுமன்றத்தில் பேசுகிறார்!
வேலைவாய்ப்ப்பின்மை குறித்த ஆளும் கட்சியின் “அக்கறைக்கு”
இந்த ஒரு எடுத்துக் காட்டுப் போதும்.
2
கூலிவீதத்தின்
வீழ்ச்சி
வேலைவாய்ப்பின்மை பிரச்சனை
ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் தொழிலாளர்களின் கூலி வீத சரிவு. நாட்டின்
மொத்த உற்பத்தியில் ஐந்து ரூபாய் பிஸ்கட்டிலிருந்து கார்,
வீடு வரையிலும் விற்பனைப் பண்டங்களின் தனிநபர் நுகர்வே(Private
consumption) தேச மொத்த உற்பத்தியில் 60 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது. இந்நிலையில், தனி நபர் வருமானப் பற்றாக்குறையானது, சேமிப்பையும்
செலவையும் குறைக்கிறது. நுகர்வுச் சந்தை வீழ்ச்சியடைச் செய்கிறது.
நுகர்வுச்சந்தை வீழ்ச்சியால் முதலீடும் வீழ்ச்சியடைகிறது.
தொழிலாளர்கள் கூலிவீதத்தின்
சரிவு:
ILO-2018 ஆய்வறிக்கையின்படி,
தொழிலாளர்களின் உழைப்புத்திறனுக்கு ஏற்ற கூலி விகிதமானது வேகமாக
சரிந்துவருவதை சுட்டிக் காட்டுகிறது. 1981 ஆம் ஆண்டில் 38.5
விழுக்காடாக இருந்த கூலி வீதம் 2013 ஆம்
ஆண்டில் 35.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசோ (2016
ஆம் ஆண்டின்) உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி குறைந்தபட்ச
கூலியை உத்தரவாதப்படுத்த மறுத்துவருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை இன்னும்
கொடுமையானது.
கிராமப்புற கூலி
வீதத்தின் சரிவு:
கிராமப்புற வேலை வாய்ப்பையும்
கிராம மக்களின் வருமானத்தையும் (குறிப்பாக நிலமற்ற ஏழை கூலி விவசாயிகள்)
உத்தரவாதப்படுத்தியதில் மகாத்மா காந்தி ஊரக
வளர்ச்சித் திட்டம் முக்கியப் பங்காற்றியது. இத்திட்டத்தால் 2007-13 காலகட்டத்தில் கிராமப்புற கூலிவீதம் அதிகரித்தது.
அரசின் பொருளாதார அறிக்கைகள், ஊரக வளர்ச்சித் திட்டங்களை மேம்பபடுத்த வேண்டும் என்றது. ஆனால் தற்போது,
இத்திட்டம் மோசமாக அமலாக்கப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீட்டில்
தாமதம், கூலி வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால்
இத்திட்டத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.(https://www.businesstoday.in/opinion/slowdown-blues-govt-needs-raise-income-levels-working-population-boost-growth/story/373820.html)
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி
உயராததால் தனி நபர் வருமானம் சுருங்கத் தொடங்கியது. அதேநேரத்தில் வேலையற்ற
தொழிலாளர்களின் ரிசர்வ் பட்டாலும் ஆண்டுக்கும் ஆண்டுக்கு அதிகரித்துவருகிறது.
இப்போக்கு இந்தியாவின்
பொருளாதார கட்டமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. இப்போது நமது
கேள்விஎன்னவென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி
வேலை வாய்ப்பை ஏன் உறுதிசெய்யவில்லை?.
3
இந்தியப்
பொருளாதாரத்தின் அடித்தள கட்டமைப்பு சிக்கல் குறித்த இந்திய லிபரல்
பொருளாதாரவாதிகளின் பகுப்பாய்வுகள்
கடந்த 2006 ஆம் ஆண்டில் ரகுராம் ராஜன், அரவிந்த்
சுப்பிரமணியம் உள்ளிட்டோர் , பன்னாட்டு நிதியகத்தின் (IMF)
ஆய்வுத் துறை கட்டுரை ஒன்றை வெளியிட்டார்கள். ”இந்திய வளர்ச்சியின் பண்பு: என்ன நடந்துள்ளது? என்ன தொடரப்போகிறது?” (India’s Pattern of Development: What
Happened, What Follows?) என்ற தலைப்பிலான அக்கட்டுரையில்
இந்தியப் பொருளாதாரத்தின் பண்புகள் குறித்த சில குறிப்பான
காரணங்களை முன் வைக்கின்றனர்.
அடுத்த நாற்பது ஆண்டுகளில், ஆண்டுக்கு 13 மில்லியன் மக்கள், தொழிலாளர் சந்தையில் வந்து சேர்வர்.
அடுத்த பதினைந்து ஆண்டுகால வேலையற்ற வளர்ச்சி குறித்த பலரும் கவலை தெரிவித்து
வருகின்றனர் என தொடங்குகிற அந்த ஆய்வுக் கட்டுரையானது, இந்தியாவின்
பொருளாதாரப் பண்புகள் குறித்து கீழ்வரும் அவதானிப்புகளை முன்வைகிறது.
- உலகின் உற்பத்திக் கூடமாக உள்ள சீனாவில், விவசாயத் துறையின் உபரி தொழிலாளர்களை, தொழிற்சாலைகள் சுவீகரித்துக் கொண்டது. இந்தியாவிலோ பின்தங்கிய தொழில்துறை வளர்ச்சியானது, விவசாய உபரித் தொழிலாளர்களை ஈர்க்கத் தவறியது.
- 1947 களுக்கும் 80 களுக்கும் இடையிலான பொருளாதாரக் கொள்கையானது, பொதுத்துறை நிறுவனங்களை மையப்படுத்தியதாக இருந்தது. பெரும் கனரக தொழிற்சாலைகளை அரசே ஏற்று நடத்தியது. அதே நேரத்தில் அந்நிய முதலீடுகளை பெறுவதில் தனியார் முதலாளிகளுக்கு கட்டுப்பாடு, கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற மத்திய அரசின் தொழிற்கொள்கையால், இந்தியாவில் தனியார் முதலாளித்துவ வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது.
- .IIT ,IIM போன்ற கல்வி நிறுவனங்கள், திறன் சார்ந்த தொழிலாளர்களை அதிகளவில் உருவாக்கின. குறைவான கூலியுடன் அதிக திறன் சார் தொழிலாளர்கள் உருவாவதற்கு இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. 80’களுக்கு பிறகு, திறன் சார் தொழிலாளர்களை (skill intensive lanour) அடித்தளமாகக் கொண்ட சேவைப் துறை வளர்ச்சிக்கு இது முக்கியக் காரணமாகியது.
- 1980’இல் நாட்டின் மொத்த உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 37 விழுக்காடாக இருந்தது. 2002’இல் இது 49 விழுக்காடாக உயர்ந்தது. நாட்டின் தொழிற்துறையோ 1980-2002 முன்னேற்றம் இல்லாமல் 16 விழுக்காடாக இருந்தது. சேவைத் துறையைப் பொறுத்தவரை பெருமளவு தொழிலாளர்களை ஈர்க்கவில்லை. நாட்டின் மொத்த உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்களிப்பு செய்கிற சேவை துறை,குறைவான வேலைவாய்ப்பையே வழங்குகிறது.
- 90 களுக்கு பிறகும் நாட்டின் தொழிற்துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சேவைத் துறை வளர்ச்சியடைந்து வந்தது.
- மற்ற கிழக்காசிய நாடுகளை விட இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் சிறியவையாக இருந்தன. இதன் உற்பத்தியும் தொழிலாளர் எண்ணிக்கையும் சொற்பமாக இருந்தன
- நாட்டின் தீபகற்ப மாநிலங்களின் அதிக வளர்ச்சியும் நாட்டின் உள்மாநிலங்களில் குறை வளர்ச்சியாகவும் சமச்சீரற்ற வளர்ச்சி நிலவுகிறது.
மேற்கூறிய அம்சங்களை நாம்
கவனத்தில் கொண்டால், இந்தியப் பொருளாதாரத்தின்
முரண்பாடுகள் குறித்த ஒரு பொதுத் சித்திரத்திற்கு வந்து சேருகிறோம். அவை வருமாறு
- பின்தங்கிய தொழில்துறை வளர்ச்சி, விவசாய உபரித் தொழிலாளர்களை ஈர்க்கவில்லை
- விவசாயத்துறை-தொழில்துறை-சேவைத்துறை என்ற முதலாளித்துவ வளர்ச்சிப் படிநிலைகளில், தொழிற்துறையை கடக்காமல், நேரடியாக சேவைத் துறைக்குள் இந்தியா சென்றது ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் ஆதாரமாகிறது
- விவசாயப் பொருட்கள் இறக்குமதியால், உள்நாட்டு சந்தையில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இது உள்நாட்டு சந்தையில் விவசாய உற்பத்திப் பொருளை மிகையாகக் குவிக்கிறது. உணவு விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. அதேநேரம் உள்நாட்டு விவசாயிகளின் ரத்தத்தை சுரண்டியே உணவுப்பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கொள் வைக்கிறது அரசு.
4
அடித்தள
கட்டமமைப்பு பிரச்சனையை தற்காலிகமாக அமுக்குகிற ஆளும் கட்சிகள்
மேற்கூறிய முரண்பாடுகள்
இந்தியாவின் அரசியல் சுதந்திர காலம் முதலாக தற்போதைய
உலகமய காலம் வரையிலும் தொடர்கிறது. இந்தியப் பொருளாதாராத்தின்
அடிப்படைக் கட்டமைப்பு சிக்கலை தீர்க்க இயலாமல் மேம்போக்கான தற்காலிக தீர்வை
எட்டுவதிலேயே ஆளும்கட்சிகள் ஈடுபட்டுவந்தன.அவை வருமாறு
- கிராமப்பற வேலைவாய்ப்பு பிரச்சனையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு மட்டுப்படுத்தியது.
- உள்நாட்டு பண்டத் தேவையை பூர்த்தி செய்ய அந்நிய முதலீடுகளை அதிகரிக்கவைத்தது.
- பெரு முதலாளிகளுக்கு அதிகளவில் வங்கிக் கடன் வழங்குவது, பிறகு வாராக் கடன்களால் வங்கிகள் தவிப்பது, மீண்டும் வங்கிககளுக்கு அரசு மறு மூலதனம் வழங்குவது தொடர் நிகழ்வாகிறது.
இதுபோன்ற தற்காலிக
ஏற்பாடுகள், பொருளாதார நெருக்கடிகளை அமுக்கிவைக்கவே
பயன்பட்டன. அவ்வப்போது இந்த கட்டமைப்பு சிக்கல் ரூபாய் மதிப்பு சரிவாக,
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பாக, பண்ட
விற்பனை தேக்கமாக வெளிப்பட்டு வருகின்றன.
5
பொருளாதார
அழிவை மேலும்
ஆழப்படுத்திய பாஜக அரசு
காங்கிரஸ் காலத்தில் இருந்து
தொடர்கிற இந்த அடிப்படை சிக்கலை இந்தியாவில் ஆளும் கட்சியாக அமர்கிற எந்தக்
கட்சியாலும் தீர்க்க இயலவில்லை. காரணம், ஏகாதிபத்திய
சார்பு கொள்கை, இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தை
அழித்துவிட்டது. இந்தியாவின் முதலாளிகள்-பன்னாட்டு முதலாளிகள்- இந்திய ஆளும்
கட்சிகள் என்ற கூட்டணி, பொருளாதார அழிவை ஆழப்படுத்தியதே
அன்றி தீர்க்க இயலவில்லை. ஆளும்கட்சிகள் இந்த முதலாளிகளின் நலன் சார்த்த
கொள்கைகளையே மேற்கொள்கின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்கு 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி அரசோ, பண
மதிப்பிழப்பு நீக்க அறிவிப்பு மற்றும் மிக மோசமாக திட்டமிடப்பட்ட ஜி.எஸ்.டி வரி
அமலாக்கத்தால் சிக்கலை மேலும் ஆழப்படுத்தியது. மோடியின் இரட்டை தாக்குதலான இந்த
“பொருளாதார சீர்திருத்தங்கள்” நாட்டின் சிறு குறு நிறுவனங்களை நாசம் செய்தது, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறித்தது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்
போக்கில்,
குறிப்பாக முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டமான ஏகாதிபத்திய
கட்டத்தில், சிறு வணிகர்களை பெரும் ஏகபோக முதலாளியம்
விழுங்குகிறது. மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தம் யாவுமே சிறு வணிகர்களை காவு
வாங்குகிறது..
“முதலாளித்துவ
பொருளுற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமின்றி, அந்த
வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகிறோம்….”என 150
வருடத்திற்கு முன்பாக தனது மூலதன முன்னுரையில் (முதலாம் ஜெர்மன்
பதிப்பு) மார்க்ஸ் எழுதியது இன்றைய இந்திய சூழலை விவரிப்பதாக உள்ளது. இன்னும்
பொருத்தமாக சொல்லவேண்டுமென்றால், இந்தியாவின் சமச்சீரற்ற
உதிரி லும்பன் வளர்ச்சியால் ஏற்றத் தாழ்வால் நெருக்கடியால் நாம் அவதிப்படுகிறோம்.
பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்மேல் ஏற்றிவிடுகிறது.
-அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம்
http://peoplesfront.in/2019/08/24/இந்தியப்-பொருளாதார-நெருக/
காஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா!
காஷ்மீரில்
தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும்
அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.
அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அளவில் விவாதத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
கண்ணன்
கோபிநாத்,
கேரளாவைச் சேர்ந்த 2012 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் இப்போது தாத்ரா
நகர்,
ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறைச் செயலாளராக இருக்கிறார்.
இந்த
நிலையில் கடந்த புதன் கிழமை (ஆகஸ்டு 21) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் கண்ணன் கோபிநாத்
அதுகுறித்த காரணங்களையும் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“என்
கருத்துரியை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க
ஆசைப்படுகிறேன். ‘உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன்னில் இருக்கும் ஒரு மாநிலம் முழுக்க தடை
உத்தரவு பிறப்பித்திருக்கிறது, அங்கே
மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருகின்றன. இந்த நாட்டின் ஆட்சிப் பணி
அதிகாரியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால்
நான் அவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதால்தான் எனது ஐ.ஏ.எஸ். பதவியை
ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு செய்தித் தாள் நடத்துபவராக இருந்தால் ஒவ்வொரு
நாளும் முதல் பக்கத்தில் எண்களை மட்டுமே பிரசுரிப்பேன். இன்று ’19’ என்று குறிப்பிட்டிருப்பேன். ஏனெனில் காஷ்மீர் மக்கள்
தங்கள் உரிமைகளை இழந்து இன்று 19
ஆவது நாள்” என்று
கூறியிருக்கிறார் கண்ணன் கோபிநாத்.
மேலும்
அவர்,
“நான் நிறைய நம்பிக்கையோடு இந்திய
ஆட்சிப் பணியில் சேர்ந்தேன். குரலற்றவர்களின் குரலாக இருக்கலாம் என்ற
நம்பிக்கையோடுதான் ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்தேன். ஆனால் இங்கே என் குரலையே நான்
இழந்துவிட்டேன். எனது ராஜினாமா என்பது ஒரு பொருட்டான விளைவை, தாக்கத்தை ஏற்படுத்துமா என்று நான் நினைக்கவில்லை. நாடு ஒரு
கொந்தளிப்பான நேரத்தை கடந்து செல்லும்போது, ‘நீ என்ன செய்தாய்’ என்று என்னிடம் யாராவது கேட்டால், ‘நான் லீவு எடுத்துக் கொண்டு அமெரிக்கா போய் மேல்படிப்பு
படிக்கப் போகிறேன்’ என்று
சொல்ல விரும்பவில்லை. அதைவிட வேலையை விட்டு விலகுவது நல்லது” என்று கூறியிருக்கும் கண்ணன் கோபிநாத்,
இந்த
நாட்டின் சிஸ்டம் பற்றியும் பேசுகிறார்.
“இந்த நாட்டின் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசுகிறோம்.
அப்படி மாற்ற வேண்டுமெனில் நாம் இந்த சிஸ்டத்துக்குள் இருக்க வேண்டும். நான் இந்த
சிஸ்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தேன். ஆனால் இதை சரிசெய்ய முடியும் என்ற
நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கென்று எந்த சேமிப்பும் இல்லை. இப்போதுவரை அரசு
வீட்டில்தான் இருக்கிறேன். வேலையை விட்டு போய்விட்டால் எங்கே போவது என்று இன்னும்
முடிவு செய்யவில்லை. என் மனைவி வேலையில் இருக்கிறார். அவர் எனக்கு துணையாக
இருக்கிறார்” என்று
கூறியிருக்கிறார் பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாத்.
அண்மையில்
கேரள வெள்ளத்தின் போது தாத்ரா நகர் சார்பில் நிவாரண உதவிகளை கேரள முதல்வரிடம்
அளிக்க வந்த கண்ணன் கோபிநாத், பணிக்கு
விடுப்பு போட்டுவிட்டு தான் ஐ.ஏ.எஸ். என்று காட்டிக் கொள்ளாமலேயே நிவாரணப் பணிகளில்
ஈடுபட்டார்.
கேரள
மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ண கோபிநாத் அருகே உள்ள புதுப்பள்ளியில் தனது
பள்ளிப் படிப்பை முடித்தார். பிர்லா தொழில்நுட்ப மையத்தில் எலக்ட்ரிகல்
இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த கண்ணன் கோபிநாத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே 59 ஆவது இடத்தில் வெற்றிபெற்றார்.
காஷ்மீர்
மக்களுக்காக கண்ணன் ஐ.ஏ.எஸ்.சின் ராஜினாமா முடிவு இந்தியா முழுதும் ஊடகங்களிடையே
விவாதப் பொருளாகி வருகிறது.
வலுக்கும் அமெரிக்கா – சீனா
குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்!
By Pugazharasi S
Published: Sunday, August 25, 2019, 8:57 [IST]
அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் குடுமிப்பிடி சண்டையால், உலகப்
பொருளாதாரம் மிக பின்னடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையானது, முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இது நாளுக்கு
நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும், பொருட்களுக்கு, மேலும் 5 சதவிகித வரியை அதிகரித்துள்ளார். ஏற்கனவே 250 பில்லியன்
டாலர் மதிப்பிலான பொருட்காளுக்கு 25 சதவிகிதமாக வரியை அதிகரித்ததானாலேயே, சீனாவின்
பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது. இந்த நிலையில் தற்போது அந்த 250 பில்லியன்
டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுக்கடுக்கான வரி அதிகரிப்பு இந்த 30 சதவிகித வரி
விதிப்பானாது, சீனாவின் குடியரசு தினமான அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா
எச்சரித்துள்ளது. மேலும் ஏற்கனவே கூறிய படி 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகிதமாக
அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இதே இந்த 10 சதவிகித
வரியும், இதே இரண்டாவது
தொகுதியாக இந்த பொருட்களுக்கு 15 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப்
கூறியுள்ளார். சீனாவுக்கு தக்க பதிலடி அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் முன்னரே
தொடர்ந்து அளித்து வந்த ட்வீட்களிலேயே இந்த வரி குறித்தான அறிவிப்புகள்
கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த அறிவிப்புகள் சர்வதேச அளவில் வளர்ந்து
வரும் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் இந்த வர்த்தகப்
போரின் தாக்கம் பற்றிய கவலை அளிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்த வரி
விதிப்பானது, சீனாவின் வரி விதிப்பு பதிலடிகளுக்கு, தக்க பதிலடி கொடுப்பதாகவும் டிரம்ப்
வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஜின்பிங் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி இந்த
நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர், ஜெரோம் பவெல், சீனாவின்
அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி என்றும்
குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தவிர அமெரிக்கா நிறுவனங்கள் சீனாவை முழுமையாக
கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறாக இந்த இரு நாடுகளும் மாறி மாறி
தங்களை ஒருவரையெருவர் சாடிக் கொண்டு வரியையும் அதிகரித்துக் கொண்டே வருவது, உலக நாடுகள்
அனைத்தையும் பாதிக்கும் என்பது இந்த நாடுகளுக்கு தெரியாமல் போனது ஏனோ? அமெரிக்கா
பொருட்களுக்கே வரி விதிப்பா அமெரிக்கா ஒரு புறம் வரியை அதிகரிக்க, சீனா நான்
என்ன சும்மாவா இருப்பேன், இதா வந்துட்டேன் என்று கூறுவது போல், அமெரிக்காவிலிருந்து
சீனாவுக்கு இறக்குமதியாகும் முக்கிய பொருட்களை குறி வைத்து, அதுவும்
அரசியல் ரீதியாக தொழில் சாலைகள் முதல் பண்னைகள் வரை குறி வைத்து 75 பில்லியன்
டாலர் மதிப்பிலான அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்க, சீனா
திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களே
சீனாவுக்கு மாற்று தேடுங்கள் இது குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ள அமெரிக்க
அதிபர் டிரம்ப், எங்களது பெரிய அமெரிக்க நிறுவனங்களே, சீனாவுக்கு மாற்றீட்டை தேடுங்கள் என்றும்
நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அது தவிர சீனா பொருட்கள் உங்கள் வீடுகளில் உபயோகிப்பதை
தவிர்த்து, அதை உங்கள் நிறுவனங்களில் தயாரிக்க பாருங்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். #1 Formula to Reduce Belly Fat Fast. Try For a Week.
www.purelyherbs.in Download & Play Rummy Get Welcome Bonus Upto Rs.2000
Rummy Circle These Seeds Help You Burn Calories And Get That Perfect Shape
healthyindia.life குடும்பத்திலேயே
குழப்பம் சீனா தனது முடிவுகளை மிக மெதுவாக எடுத்து வருகிறது. அதிலும், வர்த்தக
ஒப்பந்தம் குறித்த செயல்பாடுகளில் மிக மெதுவாக இருப்பதாக குற்றம் சாட்டிய டிரம்ப், தனது
உள்நாட்டில் நிலவும் உள்கட்சி பூசலால் கடுப்பாகியுள்ளார். ஆமாங்க. .. சீனாவுக்காக
ஆதரவு தரும் பேசும் பருந்துகளும் தனது அலுவலகத்தில் இருப்பதாக கூறியிருந்தது
நினைவு கூறத்தக்கது. இந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை
மாளிகையில் இருந்து வெளியேறும் போது, பவெல் பதவி விலக விரும்புகிறாரா என்று
கேட்டபோது, பவெல் தற்போது பதவி விலக விரும்புகிறாரா? அது தான் அவரின் விருப்பம் என்றால், அதை நான்
தடுக்கவில்லை என்றும் அசால்ட் காட்டியுள்ளார் டிரம்ப். நம் பெரிய எதிரி யார்? மேலும்
டிரம்ப் நமது மிகப் பெரிய எதிரி பவெல்லா அல்லது ஜி ஜின்பிங்கா என்றும் என்றும்
தனது டிவிட்டரில், பவெல்லில் உரைக்கு பின் டிவிட்டரில்
கேட்டுள்ளாராம். சரி அப்படி என்ன பவெல் பேசினார் என்று கேட்கிறீங்களா? Jackson Hole ஹாலில் உறையாற்றிய பவெல், டிரம்பின் வர்த்தக கொள்கைகள் அமெரிக்கா மட்டும்
அல்லாது உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றும் மறைமுகமாக டிரம்பை
விமர்ச்சித்துள்ளராம். அதான் மனுசன் பொங்கிட்டாரு போல. நாங்க இங்க கூலா தான்
இருக்கோம் சீனா 75 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க
பொருட்களுக்கு கட்டணங்களை அதிகப்படுத்துவதாக கூறி வரும் நிலையில், 30 டிரில்லியன்
டாலர் மதிப்புள்ள சந்தைக்கு, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதற்காக
ஒன்றும் கவலைப்பட போவதில்லை, நாங்கள் இதற்காக கோபப்படவும் இல்லை, கவலைப்படவும்
இல்லை, நாங்கள் இங்கு
கூலாக இருக்கிறோம் என்றும் மனுஷன் கூலாக கலாய்த்துள்ளார். கூலாக இருக்கிறோம் என்று
கூறும் டிரம்ப் கடுப்பில் இப்படி அடுத்தடுத்த டிவீட் செய்வதை மனுசன் மறந்திட்டாரு
போல. அமெரிக்க நிறுவனங்கள் அதிருப்தி வால்மார்ட் இங்க் உள்ளிட்ட உறுப்பினர்களை
உள்ளடக்கிய தேசிய சில்லறை கூட்டமைப்பு, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை
வெளியிட்டது. அந்த அறிக்கையில், டிரம்பின் கூடுதல் வரி குறித்து எச்சரிக்கை
விடுத்ததோடு, நாடு தற்போது இருக்கும் சூழலில், எதிர்கால வணிகங்களை திட்டமிடுவது சரியாக
இருக்காது. இது சாத்தியமும் இல்லை என்றும், அரசாங்க விவகாரங்களின் மூத்த துணைத் தலைவர்
டேவிட் பிரஞ்சு கூறியுள்ளர். அணுமுறையே தெளிவாக இல்லை மேலும் நிர்வாகத்தின்
அணுகுமுறை தெளிவாக செயல்பட வில்லை, வர்த்தக போருக்கான பதில், அதிக வரி
அல்ல. அமெரிக்க வணிகங்கள் மற்றும் நுகர்வோரின் நிலை எங்கே போய் முடியும். மேலும்
அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் சீனாவுடன் வர்த்தகம் செய்வதைத் தடைசெய்ய
ஜனாதிபதிக்கு சட்டபூர்வமாக அதிகாரம் இல்லை. டிரம்பின் இந்த ஆட்டம் செல்லுபடியாகாது
என்றும், தற்போது தேசிய
பொருளாதார அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் வர்த்தக வழக்கறிஞர்கள் மற்றும்
ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. சீனா விளையாட விரும்பவில்லை அமெரிக்கா ஒரு
புறம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும், மறுபுறம் அதிக சலுகைகளை சீனா கொடுக்கும் என்ற
நம்பிக்கையிலேயே அமெரிக்க செல்கிறது. ஆனாலும் எந்த அளவுக்கு அமெரிக்க சீனாவை
பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறதே, அந்த அளவுக்கு பிரச்சனைகளையும் சீனாவுக்கு
உருவாக்குகிறது. இதனால் சீனா திரும்பி சென்று விடுகிறது என்றும், சீனா இந்த
விளையாட்டை விளையாட மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் George W. Bushசிடம் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய பிலிப் லெவி கூறியுள்ளார். தற்போது இவர்
பிளக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுனராக பணியாற்றி வருகிறார். மற்ற
நாடுகளின் பொருளாதாரத்தின் கதி? ஒரு புறம் அமெரிக்காவும் சீனாவும் குடுமிப்பிடி
சண்டை போல் போட்டுக் கொள்வது, மற்ற நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தில் மிக பின்னடைவை
நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்த பிரச்சனை மீண்டும் தலைதூக்க
ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த இரு நாடுகளின் சண்டைக்கு, இந்த இரு
நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டும் அல்லாது, மறுபுறம் பல நாடுகளும் பலிக்கிடா ஆகிக்
கொண்டிருப்பதை எப்பதான் இந்த இரு நாடுகளும் உணரப்போகிறதோ தெரியவில்லை. தமிழ்
குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
https://tamil.goodreturns.in/news/2019/08/25/trump-says-raise-existing-tariffs-on-chinese-goods-to-30/articlecontent-pf80270-015791.html
https://tamil.goodreturns.in/news/2019/08/25/trump-says-raise-existing-tariffs-on-chinese-goods-to-30/articlecontent-pf80270-015791.html
பொருளாதார வீழ்ச்சி பாடம் கற்குமா மோடி அரசு? -கே.பாலகிருஷ்ணன்
“அடுத்த
ஐந்தாண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள
பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தை துவங்கப்போவதாக “பிரதமர்
நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் தனது சுதந்திர தின உரையில் நாட்டின்
விரைவான வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள தொழில் அதிபர்களை பாராட்ட வேண்டுமெனவும்
குறிப்பிட்டுள்ளார்.
பாதாளம் நோக்கி
பயணம்...
ஆனால், மத்திய அரசின் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் இதற்கு நேர்
எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதாவது, கடந்த 70
ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பின்னடைவை நாடு சந்தித்துக்
கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றை உறுதி செய்யும் வகையில் இந்திய
பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து பாதாளத்தை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது
என்பதையே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 – 2019ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம் என
மத்திய ஆட்சியாளர்கள் மார்தட்டி கொண்டனர். ஆனால் பிரதமரின் தலைமைப் பொருளாதார
ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம் இந்த புள்ளி விபரம் மிகைப்படுத்தப்பட்டது எனவும்,
உண்மையான வளர்ச்சி விகிதம் 4.3 சதவிகிதத்திற்கு
மேல் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதாவது, கடந்த 40
ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது
என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்வளர்ச்சி, மோட்டார் வாகன உற்பத்தி, நிலக்கரி, இன்ஜினியரிங், நூற்பாலை மற்றும் துணி ஆலைகள்,
ஆயத்த ஆடை உற்பத்தி, நாட்டின் ஏற்றுமதி,
இறக்குமதி அனைத்திலும் கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில்
அடித்துநொறுக்கப்பட்டுள்ளன. விவசாயம், முறைசாரா தொழில்,
சிறு வணிகம், சிறு-குறு மற்றும் நடுத்தர
தொழில்கள் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் முடங்கிக் கிடக்கிறது.
விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கும் வாழ்வை
இழந்துகொண்டுள்ளார்கள்.
வரலாறு காணா சரிவு
இந்திய தொழில்துறைக்கான முதலீடுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இது 34 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து கொண்டுள்ளது எனவும், குறிப்பாக, 2012ல் 43.4 சதவிகிதமாக இருந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் 2016ல் 27.57 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பெரும்பகுதியினரான கிராமப்புற மக்களது வாழ்வதாரம் சுருங்கி அவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு, கிராமப்புறங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு அத்தக்கூலிகளாக மாறிவருகின்றனர். வேலையில்லாத இளைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரது வாங்கும் சக்தி வேகமாக குறைந்துள்ளதால், உற்பத்தி பொருட்கள் சந்தையில் தேங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சாமான்கள், துணிகள் மற்றும் அதியாவசியப் பொருட்கள் தேங்கி தொழில் முடக்கம் தீவிரமடைந்துள்ளது.
இந்திய தொழில்துறைக்கான முதலீடுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இது 34 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து கொண்டுள்ளது எனவும், குறிப்பாக, 2012ல் 43.4 சதவிகிதமாக இருந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் 2016ல் 27.57 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பெரும்பகுதியினரான கிராமப்புற மக்களது வாழ்வதாரம் சுருங்கி அவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு, கிராமப்புறங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு அத்தக்கூலிகளாக மாறிவருகின்றனர். வேலையில்லாத இளைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரது வாங்கும் சக்தி வேகமாக குறைந்துள்ளதால், உற்பத்தி பொருட்கள் சந்தையில் தேங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சாமான்கள், துணிகள் மற்றும் அதியாவசியப் பொருட்கள் தேங்கி தொழில் முடக்கம் தீவிரமடைந்துள்ளது.
கடன்வாங்கி சுவாசம்
பொருளாதார பின்னடைவின் காரணமாக
அரசின் வருவாய் குறைந்து பற்றாக்குறை பலமடங்கு அதிகரித்துள்ளது. 2018
– 19ம் ஆண்டில் அரசின் மொத்த செலவு 24.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அரசின் வருமானம் ரூ. 17.7 லட்சம் கோடி மட்டுமே. இதுபோதாமல் சுமார் ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கி தான் மோடி அரசு சுவாசித்துக் கொண்டுள்ளது.
இதுவரை வாங்கியுள்ள கடன் சுமை இந்திய மக்களின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.
இக்கடன் தொகைக்கு மட்டும் ஆண்டுக்கு வட்டியாக ரூ. 6 லட்சம்
கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய வரி விதிப்புகள் நாட்டின் தொழிற்துறையை நிர்மூலமாக்கிவிட்டன.
இதன் காரணமாக பங்குசந்தையில் ரூ. 12 லட்சம் கோடி நட்டம்
ஏற்பட்டுள்ளது. மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்ட அந்நிய மூலதனம் 2 லட்சம் மில்லியன் அமெரிக்க டாலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டது. இது
தான் மோடி அரசின் மேக் இன் இந்தியாவின் சாதனையாகும்.
வெடித்துக் கிளம்பிய
மோட்டார் வாகனத்துறை நெருக்கடி
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார
தொழில்நெருக்கடியின் கூர்முனையாக மோட்டார் வாகனத்துறை நெருக்கடி வெடித்து
வெளிக்கிளம்பியுள்ளது. இந்திய ஆட்டோ மொபைல் துறையானது இந்தியப் பொருளாதாரத்தின்
முதுகெலும்பான துறை என்பது மட்டுமல்ல; உலகிலேயே
நான்காவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையும் ஆகும். இந்திய
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை மட்டும் 7.5 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. நாடு முழுவதும் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் சுமார் 4 கோடி மக்களுக்கு
வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. நேரடி ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி
இத்துறைக்கான துணை பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் உதிரி பாகங்கள் துறை
மட்டும் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம்
அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இத்தகைய பிரம்மாண்டமான துறைதான் கடந்த ஒரு
மாதத்தில் வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது.
பன்னாட்டு கார்ப்பரேட் வாகன
உற்பத்தி நிறுவனங்களான போர்டு, ஹூண்டாய், மாருதி சுசுகி ஆகியவற்றில் துவங்கி உள்நாட்டு நிறுவனங்களான மகிந்திரா
அண்ட் மகிந்திரா, டிவிஎஸ் குழுமம் உள்பட பல்வேறு
கார்ப்பரேட் நிறுவனங்களும் அவை சார்ந்து எண்ணற்ற துணை நிறுவனங்களும், உதிரி பாகங்கள் உற்பத்தியில் பல நூறு சிறிய, நடுத்தர
நிறுவனங்களும் செயல்படுகின்றன.
வாகன உற்பத்தி கடும்
பாதிப்பு
இந்நிறுவனங்களின் வாகன
உற்பத்தியில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற பொருளாதாரம்
சீரழிவதால் டிராக்டர் விற்பனை கடந்த ஏப்ரல் – ஜூன்
மாதங்களில் மட்டும் 30.98 சதமானம் சரிந்துள்ளது. இருசக்கர
வாகனங்கள் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் 11.7 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் கார்கள் விற்பனை கடந்த மாதங்களில் 35.95
சதவிகிதம் குறைந்துள்ளது. வணிக வாகனங்களுடைய விற்பனையும் 9.5
சதவிகிதம் குறைந்துள்ளது. வேன்கள் விற்பனை மிக மோசமாக 45.58
சதமானம் குறைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ
உட்பட நாடு முழுவதும் ஆட்டோமொபைல் துறையில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள்
வாரம் சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள்
ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வீதியில்
நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 90 சதவிகிதம் தொழிலாளர்கள்
இளம் பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்கள்.
தமிழகத்தில்...
மோட்டார் வாகனத்துறை
நெருக்கடியால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் வாகன உற்பத்தி
கம்பெனிகள் மூடுவிழாவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு உதிரி
பாகங்களை உற்பத்தி செய்து தரும் 500க்கும் அதிகமான
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
மேலும் இன்ஜினியரிங், நூற்பாலைகள், துணி ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி, சர்க்கரை ஆலைகள் போன்ற தொழிற்சாலைகளும் நெருக்கடியில் சிக்கி திணறிக்
கொண்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு. ஏராளமான சிறு-குறு
நடுத்தர தொழிற்சாலைகள் திவால் அடைந்து வருகின்றன. பல்லாயிரம் குடும்பங்கள்
நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி தவிக்கின்றனர். இத்தகைய நிலைமை
குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. இருக்கும் தொழிற்சாலைகள்
மூடப்படும் ஆபத்தான நிலையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க அந்நிய முதலாளிகளுக்கு
நேரில் அழைப்பு விடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு
சுற்றுப்பயணம் புறப்படவுள்ளாராம்.
நாசப்படுத்திய ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கம்
ஏன் இந்த அவல நிலை என்ற கேள்வி
எட்டுத்திக்கிலும் எழும்பியுள்ளது.
·
இதுகாறும் கடைப்பிடித்து வந்த
உலக, தாராளமய மற்றும் கார்ப்பரேட்மயக்
கொள்கைகள் நாட்டை திவால் நிலைக்கு தள்ளியுள்ளன.
·
மோடி அரசின் பண மதிப்பு நீக்க
பயங்கர நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி
விதிப்பும் ஒட்டுமொத்த சிறு-குறு தொழில்கள் மற்றும் வணிகத்துறையை
நாசப்படுத்திவிட்டது.
·
சேவைத்துறை உள்பட அனைத்துத்
துறைகளிலும் அதானி, அம்பானி உள்ளிட்ட
மோடியின் கூட்டுக்களவாணி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒட்டுமொத்த தொழில்களும்
நிலங்களும் லாபமும் குவியும் விதத்தில் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன.
·
பொதுத்துறை வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களால்
சூறையாடப்பட்டன. பல லட்சம் கோடி ரூபாய் கடன்பெற்ற பெரும் கார்ப்பரேட்டுகள் அதை
திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டே ஓடினார்கள். இதன் விளைவாக வங்கிகள்
நிலைகுலைந்தன.
- இவற்றின் ஒட்டுமொத்த
விளைவே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலைபறிப்பு, அதன்
தொடர்விளைவு பெருவாரியான மக்களின் கைகளில் பணப்புழக்கம் வீழ்ச்சி.
நெருக்கடியை
தீவிரமாக்கும் அரசின் அறிவிப்புகள்
அன்றாடம் வயிற்றுப்பாட்டை
நிரப்புவதற்கே பொருட்களை வாங்க திராணியற்றவர்களாக பெருவாரியான இந்திய மக்கள்
மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த நிலையில் சிறு உற்பத்திப்
பொருட்களின் விற்பனை வீழ்ச்சியில் துவங்கி படிப்படியாக மோட்டார் வாகன பொருட்கள்
விற்பனை வீழ்ச்சியில் வந்து நிற்கிறது. நிலைமை மோசமாகி மோட்டார் வாகனத்துறை
தள்ளாடிக் கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் இத்துறையை
நிலைகுலையச் செய்துவிட்டன. மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் பல மடங்கு
உயர்த்தப்பட்டுள்ள பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம்
மேலும், 2030க்குள் முற்றிலும் மின்சார வாகனங்களாக
மாற்றுவது, புகை மாசு அதிகம் கொண்டுள்ள பிஎஸ்4 எனப்படும் தற்போதைய வாகனங்களை புகைமாசு குறைக்கப்பட்டுள்ள பிஎஸ்6
ரக வாகனங்களாக ஏப்ரல் 2020க்குள் மாற்றப்பட
வேண்டும் போன்ற அறிவிப்புகள் இத்துறையின் நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பெருமுதலாளிகளின்
கூப்பாடு
ஏற்பட்டுள்ள வரலாறு காணாத
பொருளாதார, தொழில் நெருக்கடி மேலும்
தீவிரமடைந்து நாட்டின் ஒட்டுமொத்த இருப்பை உலுக்கிக் கொண்டுள்ள நிலையிலிருந்து
நாட்டையும், ஏழை, எளிய
மக்களையும் காப்பாற்றுவதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மத்திய மோடி அரசு எடுக்க
குரெலெழுப்ப வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்திய நாட்டு
பெருமுதலாளிகள், இந்த நெருக்கடிகளை காரணம் காட்டி
தங்களுக்கு மேலும் சலுகைகளையும், மானியங்களையும்
அதிகரிக்க வேண்டுமென குரலெழுப்பி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும்,
அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பிரதமரின் சுதந்திர தின உரையில் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டுமென கூறியது
இதன் வெளிப்பாடே. தற்போது தமிழ்நாட்டில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இவர்களுக்கு
ரூ. 1 லட்சம் கோடி சலுகைகள் வழங்க வேண்டுமென அறிக்கை
விடுத்துள்ளார்.
மாற்றுக் கோரிக்கைகள்
இந்த இக்கட்டான நிலையிலிருந்து
இந்திய நாட்டையையும், மக்களையும் பாதுகாப்பதற்கான
மாற்றுக் கோரிக்கைகளை நீண்ட காலமாகவே இடதுசாரி கட்சிகள் முன்வைத்து வற்புறுத்தி
வருகின்றன. மரணப் படுக்கையில் கிடக்கும் விவசாயத்துறையை மீட்டு அதற்கு கூடுதலான
மூலதனத்தை ஒதுக்குவது, பாசன மேம்பாட்டுத் திட்டங்களை
நிறைவேற்றுவது, இயற்கை இடர்பாடுகளிலிருந்து விவசாயத்தைக்
காப்பாற்ற பாதுகாப்பான பயனுள்ள பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவது,
விவசாய விளைப் பொருட்களுக்கு லாபத்துடன் கூடிய விலை தீர்மானித்து
அதை உறுதி செய்வது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை
உறுதித் திட்டத்தை திறம்பட நிறைவேற்றுவது, நில விநியோகம்,
வீட்டுமனைப்பட்டா, குடியிருப்பு வசதிகள்
போன்றவைகளை நிறைவேற்றி கிராமப்புற மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதின் மூலம்
அவர்களது வாங்கும் சக்தியை அதிகப்படுத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள
தினக்கூலி உழைப்பாளிகளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 18000 உறுதி செய்வது, வேலையில்லாத இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின்
ஆக்டோபஸ் கரங்களால் அழிந்து கொண்டுள்ள சிறு-குறு நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பு
அளிப்பது,
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடியைப் போக்க வங்கி கடன்
தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டியில் கடன், இந்நிறுவனங்கள்
உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உறுதியான சந்தை ஏற்பாடு, ஜி.எஸ்.டி வரிவிலக்கு உள்ளிட்டவைகளை வழங்குவது அவசர, அவசியமானதாகும். இந்திய நாடு சந்திக்கும் இன்றைய
நெருக்கடிகளுக்கு மேற்கண்ட நடவடிக்கைகளே விடிவை ஏற்படுத்தும்.
ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தியாவின் 7 வங்கிகள்!
புதுதில்லி:
இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள் ஏற்கெனவே
பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், நாட்டின்
பொருளாதாரம் என்ன ஆகும்? என்பது எல்லோருக்குமே
கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில்
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கித் துறையும், இந்தியாவில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ‘புளூம்பெர்க்’ (Bloomberg) நிதி நிறுவனம்
தெரிவித்துள்ளது. உலகிலேயே படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின்
பட்டியலில், 7 வங்கிகள்இந்திய வங்கிகள் என்று ‘புளூம்பெர்க்’ கூறியுள்ளது.
“இந்திய வங்கிகள் தற்போது
கடுமையான வராக்கடன் பிரச்சனையைச் சந்தித்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல்
கொடுத்தகடனை துரிதமாக திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறே இல்லாத அளவிற்கு
நாட்டின் வர்த்தக வளர்ச்சி உள்ளது. இதனால் இந்திய வங்கிகளின் எதிர்காலம்
கவலைக்கிடமாக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால்
வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிய நிதி
திரட்டும் முயற்சிகளையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது” என்று ‘புளூம்பெர்க்’ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள,
மோசமான நிலையிலுள்ள இந்திய வங்கிகளின் பட்டியலில், ‘யெஸ் வங்கி’, ‘ஐடிபிஐ வங்கி’, ‘சென்ட்ரல்பாங்க் ஆப் இந்தியா’, ‘பாங்க் ஆப்
இந்தியா’,‘ஆர்பிஎல் பாங்க் லிமிடெட்’, ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’, ‘கார்ப்பரேஷன்
வங்கி, ‘ஓரியெண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்’ உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில், ‘யெஸ்’
வங்கியின் பங்குகள் மட்டும் இந்த வருடம் சுமார் 70 சதவிகிதமும், ஐடிபிஐவங்கி பங்குகள் சுமார் 60
சதவிகிதம் வரையிலும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஆபத்தான நிலையில் இந்திய வங்கிகள்.. அதிர்ச்சி
அளிக்கும் ரிப்போர்ட்..!
By Prasanna Venkatesh Krishnamoorthy Published: Saturday, August
24, 2019
ஏற்கனவே இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள்
தொடர்ந்து பாதிப்புகளை அடைந்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆகும்
என்பது எல்லோருக்குமே கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக விளங்கும் வங்கி துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக
ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ப்ளூம்பெரக் வெளியிட்டுள்ள
அறிக்கையைப் பார்க்கும் போது, இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் இன்னும் சில
வருடங்களுக்குத் தொடர்ந்தால் பல வங்கிகள் திவாலாகும் எனத் தெரிகிறது. 10ல் 7 இந்திய
வங்கிகள் உலகிலேயே படுமோசமாக இயங்கும் வங்கிகளின் பட்டியலை பார்க்கும் போது டாப் 10 வங்கிகளில் 7 வங்கிகள்
இந்திய வங்கிகள் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. இந்திய வங்கிகள்
தற்போது கடுமையான வராக்கடன் பிரச்சனையைச் சந்தித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல்
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடனை விரைவில் திரும்பப் பெறும் அளவிற்கு எந்தச்
சாத்தியக்கூறும் இல்லாத அளவிற்கு நாட்டின் வர்த்தக வளர்ச்சி உள்ளது. இதனால் இந்திய
வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது. இந்திய பொருளாதாரம் பொருளாதார
வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து
குறைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிய நிதி திரட்டும் முயற்சிகளும் எடுக்க
முடியாத நிலையில் உள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கை தற்போது ப்ளூம்பெர்க்
வெளியிட்டுள்ள அறிக்கையில் மோசமான நிலையில் இருக்கும் டாப் 10 வங்கிகள்
பட்டியலில் இருக்கும் 7 வங்கிகளின் பட்டியல் இதோ. யெஸ் வங்கி ஐடிபிஐ
வங்கி சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் இந்தியா ஆர்பிஎல் பாங்க் லிமிடெட்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கார்ப்ரேஷன் பாங்க் ஓரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் யெஸ் வங்கி இதில் யெஸ் வங்கி பங்குகள் மட்டும் இந்த வருடம் சுமார் 70 சதவீத சரிவைச்
சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யெஸ் வங்கி
தனது கடுமையான முயற்சியின் மூலம் பங்குகளை விற்பனை செய்து 273 மில்லியன்
டாலர் நிதி திரட்டியுள்ளது. ஐடிபிஐ வங்கி இதேபோல் ஐடிபிஐ வங்கி பங்குகள் சுமார் 60 சதவீதம்
வரையில் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கடந்த 7 நிதியாண்டுகளாக
இவ்வங்கியின் வராக்கடன் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருந்தது தான்.
கழுத்தை நெறிக்கும் கடன்..! உடனடியாக 2,500
கோடி நிதி கேட்கும் விமான
நிறுவனம்..!
By
Gowthaman Mj Updated: Friday, August 23, 2019
டெல்லி: நிதிப் பிரச்னையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா
நிறுவனம் தன் அன்றாட வியாபார செயல்பாடுகளைக் கூடச் செய்ய முடியாமல் தற்போது
தவித்துக் கொண்டு இருக்கிறதாம். எனவே உடனடியாக 2,500 கோடி ரூபாயை அவசர நிதியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மத்திய அரசுக்கு வேண்டு கோள் வைத்திருக்கிறதாம்.
இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 60,000
கோடி ரூபாய் கடன் பாக்கி இருக்கிறது. இதுவரை அரசிடம்
ஈக்விட்டி சார் நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டி
இருக்கிறது. கடந்த
அக்டோபர் 2018-ல் ஏர் இந்தியா நிறுவனத்தின் சாவரின் கேரண்டி (Sovereign
Guarantee) திட்டத்துக்கு மத்திய அரசு
அனுமதி கொடுத்தது. இந்த திட்டம் மூலம் சுமார் 7,600 கோடி ரூபாய் கடன் வாங்க ஏர் இந்தியாவுக்கு அனுமதி கொடுத்தது
மத்திய அரசு. அதில் சுமாராக 5,000 கோடி ரூபாயைத் தான் கடன் வாங்கிக் கொண்டது ஏர் இந்தியா.
தற்போது பாக்கி இருக்கும் தொகையையும் கடனாக கொடுக்க மத்திய அரசிடம்
கேட்டிருக்கிறதாம். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஈக்விட்டி வழியாக நிதி வராத போது, கடன்களை கையாள முடியாது. இந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியா
நிறுவனத்தின் நிதி சார்ந்த செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. அதோடு ஏர் இந்தியா
நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமும் சிறப்பாக இருக்கிறது என ஏர் இந்தியா நிறுவனமே
சொல்லி இருக்கிறது. சமீபத்தில் அரசு ஏர் இந்தியாவின் 29,000
கோடி ரூபாய் கடனைக் குறைத்துக் கொடுத்தது. இருப்பினும் ஏர்
இந்தியா விமான சேவை நிறுவனத்தில் நிதி சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. சமீபத்தில்
ஏர் இந்தியா நிறுவனம் தன் விமானிகளுக்கு கொடுக்க வேண்டிய படிச் செலவுகளைக் கூட
கொடுக்கவில்லையாம். நாளுக்கு நாள் இப்படி நிச்சயமற்ற தன்மை நிறுவனத்தில்
அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஒரு ஏர் இந்தியா விமானி சொல்லி இருக்கிறார். ரூபாய்
வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும்? அதோடு பண்டிகை காலம் வேறு வருகிறது. ஏர் இந்தியா
நிர்வாகத்திடமும், அரசிடமும்
நிறுவனத்தை ஒழுங்காக நடத்தச் சொல்லி ஏர் இந்தியா விமானிகள் முறையிடப் போவதாக ஏர்
இந்தியா நிறுவனத்தின் மூத்த விமானிகளில் ஒருவர் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அரசு
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சித்து முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/08/23/air-india-funds-ai-asking-2500-crore-emergency-fund-from-government-to-do-day-to-day-expenses-015766.html
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/08/23/air-india-funds-ai-asking-2500-crore-emergency-fund-from-government-to-do-day-to-day-expenses-015766.html
படு வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் துறை.. அதள பாதாளம் நோக்கி
சென்ற பங்குகள்.. கதறும் முதலீட்டாளர்கள்!
By
Pugazharasi S August 21, 2019
டெல்லி : படு வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையில்
ஏற்பட்ட விற்பனை சரிவால், படும்
வீழ்ச்சியை சந்தித்துள்ளன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்த நிலையில் இந்த
நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 55 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக கடந்த ஜூலை 2018லிருந்தே விற்பனை மெதுவாக சரிய தொடங்கியது. இந்த நிலையில்
இந்த நிறுவனங்களின் பங்குகளும் பாதாளத்தை நோக்கி பாயத் தொடங்கி விட்டன. சர்வதேச
அளவில் மிகப்பெரிய நான்காவது சந்தையான இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி, சந்தையில் இதன் எதிரொலியைக் காண முடிகிறது.
பயணிகள் வாகன விற்பனை சரிவு குறிப்பாக கடந்த ஜூலை 2018லிருந்து, நடப்பு
ஆண்டு ஜூலை 2019 வரையிலான
ஒரு வருட காலத்தில், பயணிகள்
வாகன விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. குறிப்பாக இந்த சமயத்தில் கார்
விற்பனையாளர்களுக்கான, பயணிகள்
வாகன விற்பனை 30.9 சதவிகிதம்
வீழ்ச்சி கண்டு, 2,00,790 வாகனங்கள்
மட்டுமே விற்பனையாகியுள்ளது கவனிக்கதக்கது. இந்த வீழ்ச்சியானது நுகர்வோரிடம்
இருந்து தொடர்ந்து தேவை குறைந்து வருவதையே சுட்டிக் காட்டுகிறது. விற்பனை படு
வீழ்ச்சி சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM)
வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் 2000 முதல், தற்போது
வரை மொத்த வாகன விற்பனை 35.22 சதவிகிதம்
வீழ்ச்சி கண்டு காணப்படுவதாகவும் SIAM கூறியுள்ளது. இதே வர்த்தக வாகன விற்பனையானது 25.7 சதவிகிதம் குறைந்து, 56,866 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாகவும், இதுவே மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை 16.8 சதவிகிதம் குறைந்து, 1.51 மில்லியன் வாகனங்களாகவும், பயணிகள் கார்கள் விற்பனை 36 சதவிகிதம் குறைந்து, 1,22,956 வாகனங்களாகவும் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாகவிம் சியாம்
தனது அறிக்கையில் கூறியுள்ளது. உற்பத்தி குறைப்பு மேலும் சியாம் வெளியிட்டுள்ள
இந்த அறிக்கையில், இதே
மாதத்தில் உள்நாட்டு வாகன உற்பத்தியும் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. இது நுகர்வோர் தேவையும், இத்துறையில் நிலவி வரும் மந்த நிலையையுமே காட்டுகிறது
என்றும் கூறியுள்ளது. இந்த வீழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாகவே S&P
BSE auto sector index கடந்த ஒரு ஆண்டில்
மட்டும் 35
சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் 55% வீழ்ச்சி கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ்
பங்கின் விலையானது 55 சதவிகிதம்
வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதே காலத்தில் NSE's Nifty Auto index 36.70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதே
ஒரு வருட காலத்தில், மற்ற
ஆட்டோமொபைல் துறை பங்குகளான மாருதி சுசூகி 33 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ
பங்கின் விலை மட்டும் 1% ஏற்றம்!
இதுவே மஹிந்திரா அன்ட் மஹிந்திரா பங்கின் விலை 46 சதவிகித வீழ்ச்சி கண்டும், அசோக் லைலேண்ட் 50.31 சதவிகித வீழ்ச்சியுடனும், ஹூரோ மோட்டோகார்ப் 19 சதவிகித வீழ்ச்சியுடனும், டி.வி.எஸ் மோட்டார் 31.21 சதவிகித வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது. எனினும் இந்த
ஆட்டோமொபைல் துறையில் பஜாஜ் ஆட்டோ பங்கு மட்டும், விதி விலக்காக 1 சதவிகித ஏற்றத்துடனும் காணப்பட்டது. #1
Formula to Reduce Belly Fat Fast. Try For a Week. www.purelyherbs.in Play Rummy
Online & Get Rs.2000 Instant Bonus. Register For Free Rummy Circle 1 Year
Online PG Diploma in Business Analytics & Intelligence Amity University ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகளும் வீழ்ச்சி இத்துறை
மட்டும் அல்லாது, இத்துறை
சார்ந்த பங்குகளும் படு வீழ்ச்சியுடனே காணப்படுகின்றன. குறிப்பாக கார்களுக்கு வயர்
சேனல்கள்,
மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கண்ணாடி தயாரிப்பு, இது தவிர மற்ற பிளாஸ்டிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும்
மதர்சன் சுமி நிறுவனம், கடந்த
ஒரு ஆண்டில் மட்டும் அதன் பங்கு விலையில் 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே
போல் மிண்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 23 சதவிகித வீழ்ச்சியுடனும், பாஸ்க் 27.56 சதவிகித வீழ்ச்சியுடனும் காணப்பட்டதாக இந்த அறிக்கைகள்
வெளியாகியுள்ளன. முழு ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி மேலும் சியான்மின்
கூற்றுப்படி, முழு வாகனத் துறையும்
நீடித்த சரிவின் கீழ் உள்ள நிலையில், அனைத்து பிரிவிகளிலும் உள்ள வாகன விற்பனை வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில், மொத்த பயணிகள் வாகன விற்பனை, ஒட்டு மொத்த பொருளாதார மந்த நிலைக்கும் மத்தியில், தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக சரிந்து காணப்படுகிறது. சில்லறை
விற்பனையும் சரிவு’ ஒட்டுமொத்த
வாகன விற்பனையும் சரிந்துள்ள நிலையில், குறிப்பாக சில்லறை வாகன விற்பனையானது கடந்த ஆண்டோடு
ஒப்பிடும்போது கடந்த ஜூலை 2019ம்
ஆண்டில்,
6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு,
16,54,535 வாகனங்களாக விற்பனையாகி
உள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 17,59,219 வாகனங்களாக விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
என்றும் பெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் (FADA)
கூறியுள்ளது. ஷோரூம்கள் மூடப்பட்டது மேலும் இந்த FADA அமைப்பு, ஆட்டோமொபைல்
துறையில் உள்ள டீலர்ஷிப்களில், 2
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 32,000 பேர் தங்களது வேலையினை இழந்துள்ளதாகவும், 271 நகரங்களில் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இது தவிர நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த 18 மாதங்களில் இது நடந்துள்ளதாகவும் FADA அறிக்கைகள் கூறியுள்ளன.
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/08/21/automobile-sector-slowdown-tata-motors-maruti-suzuki-mahindra-stocks-fall/articlecontent-pf80079-015726.html
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/08/21/automobile-sector-slowdown-tata-motors-maruti-suzuki-mahindra-stocks-fall/articlecontent-pf80079-015726.html
“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்” : பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!
இந்தியாவில் தற்போதுள்ள பொருளாதார குழப்ப நிலையால், பல்வேறு வங்கிகளிலும் வாராக்கடன் அதிகரித்து வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி
விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் 5.8 சதவீதமாக
குறைந்துள்ளது; ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி
முடக்கப்பட்டு, மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே வங்கிகளும் தள்ளாடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது ஒரு பொருளாதார
ஆய்வு நிறுவனம்.
பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக
ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், நாட்டின்
பல்வேறு துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன. தவறான பொருளாதாரக் கொள்கைகளால்
உற்பத்தித் துறைகளை சீர்குலைத்துள்ளது பா.ஜ.க அரசு.
இந்நிலையில், அமெரிக்காவில் தொடங்கி, பல நாடுகளில்
கிளைகளைக் கொண்டுள்ள ‘மூடிஸ்’ என்கிற
ஆய்வு நிறுவனம், பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை
குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவி வரும்
பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் பல துறைகளில்
உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலை அடுத்த ஓராண்டில் இன்னும் மோசமடையும்.
இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். ஆட்குறைப்பு, உற்பத்தி, வங்கி நிதி உள்ளிட்ட எல்லாவற்றையும்
பாதிக்கச் செய்யும். இறுதியில் கடும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, விரைவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கும். இதைத் தொடர்ந்து,
வங்கி சாராத நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க
முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.
இதனால், வங்கிகள் வாராக்கடனால் தத்தளிக்கும். ஏற்கனவே, சில வங்கிகள் வாராக்கடனில் தத்தளித்து அரசு உதவியால் மீண்டு வருமா என
கேள்விக்குறி நிலவும் சூழலில் மேலும் சில வங்கிகளும் வீழ்ச்சியடையும் நாள் வெகு
தொலைவில் இல்லை. இந்த நிலையைப் போக்க தகுந்த பொருளாதார நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.
No comments:
Post a Comment