Monday, July 2, 2018

ஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்!

#Troll_அம்பேத்கார்
#Troll_NGOஅம்பேத்காரிஸ்ட்டுகள்
எழுத்தாளர்: பாவெல் சக்தி & திருப்பூர் குணா பிரிவு: கட்டுரைகள்வெளியிடப்பட்டது: 26 ஜூன் 2017
ஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்!
தலித் அம்பேத்கர் முதலாளித்துவம் கம்யூனிசம் பின்நவீனத்துவம் சாதி ஒழிப்பு
“ஜிக்னேஷ் மெவானி” “சந்திரசேகர் ஆசாத் எனும் ராவணன்” இவர்களிருவரும் சாதி ஒழிப்பை இலட்சியமாக கொண்டவர்கள். அம்பேத்கரை தங்களின் போராட்டத்திற்கான உந்துசக்தியாக கொண்டவர்கள். ஆனாலும் ‘இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் இந்தியாவில் இல்லை; உழைக்கும் மக்களில் பெரும்பாலவரான சாதி இந்துக்களுக்கு இழக்க முடியாத சொத்தாக சாதி இருக்கிறது; ஆதலால் சாதிகளுக்கிடையே ஒற்றுமை சாத்தியமில்லை; ஆகவே இந்தியாவில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை’ என்கிற அறிவியலுக்குப் புறம்பான அம்பேத்கரின் கருத்தை நிராகரித்து முன்னேறுகிறார்கள்.
“தலித்துகளும், முஸ்லீம்களும் இணைந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான அரசியல் படை ஒன்றை உருவாக்குவது!” என்கிற வர்க்க அணிசேர்க்கையை முவைத்தார் குஜராத்தை சேர்ந்த "உனா எழுச்சி”-யின் நாயகனான ஜிக்னேஷ் மெவானி. இப்போது உத்தரப்பிரதேசத்தில் பீம் படையை உருவாக்கியுள்ள வழக்கறிஞர் சந்திரசேகர் ஆசாத்தும், “தனது செயல்பாடுகள் தலித்துகள், பிற்படுத்தப்போட்டோர், சிறுபான்மை மக்களின் உரிமைக்கானதாக இருக்கும்” என வர்க்க அணிசேர்க்கையையே முன்வைக்கிறார். “சமத்துவம், விடுதலை, நீதி” என முழக்கமிடும் இவர் தன்னை ராவணன் என அழைத்துக் கொள்கிறார்.
ஆம்! சாதி ஒழிப்பு என்பது வர்க்கப்போராட்டம்தான், அதற்கு தேவையாயிருப்பது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் வர்க்க அணிசேர்க்கைதான் என்பதை இயல்பாக எடுத்துக்கொண்ட இவர்களிருவரிடமும் வெளிப்படுவது வர்க்க அரசியல்தான்.
வர்க்கபோராட்டத்தை மறுத்தஅம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே முறியடிக்கப்பட்டது!
நாம் முந்தைய கட்டுரைகளில் பார்த்தபடியான 1921-இல் இசுலாமியர்களும், தலித்துகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்து நின்ற கேரளா மலபார் பகுதியின் “மாப்ளா கிளர்ச்சி” ஆகட்டும்; 1946 – 1951 ஆண்டு காலத்தில் தலித்துகள், இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள், இவர்களோடு இணைந்து உயிரை தியாகம் செய்த ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து நாட்டையே உலுக்கிய “வீரத்தெலுங்கானா” போராட்டம் ஆகட்டும்; 1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு தஞ்சையில் பிறந்த சாதி ஒழிப்பு போராட்டங்கள் ஆகட்டும் அனைத்துமே சாதி ஒழிப்பிற்கு வர்க்க அணிசேர்க்கையையும், அதன் மூலமான வர்க்கப்போராட்டத்தையும் தவிர வேறு வழி எதுவும் இல்லையென்பதையே நிரூபித்தது.
இவையனைத்தும் அம்பேத்கரின் காலத்திலேயே நடந்தது. அவருக்கு சாதி ஒழிப்பை முன்னெடுத்து சென்ற வர்க்க அணிசேர்க்கையும், வர்க்கப்போராட்டமும், வர்க்க அரசியலும் கசந்தது. அவருக்கு மட்டுமல்ல, அவர் சட்ட அமைச்சராக இருந்த 1950-இல் இந்தியாவிற்கு வந்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் கசந்தது.
அம்பேத்கருக்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இருந்த ஒரே வேறுபாடு என்னவென்றால், அம்பேத்கர் உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்து கசப்பை வெளிப்படுத்தினார். ஆளும்வர்க்கம் உண்மையை ஒத்துக்கொண்டு தனது கசப்பை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் சமூகச்சூழல்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகியப் பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும்வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாற்றாக, இவர்களிடையே ஆளும்வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.
அம்பேத்கரின் காலத்தில் ஃபோர்டு பவுண்டேசன் முன்வைத்த இந்த முடிவுகளை அவர் எதிர்க்கவில்லை. தனது கண்டுபிடிப்பான ‘இந்தியாவில் வர்க்கப்போராட்டம் நடக்காது, கம்யூனிசம் காலூன்றாது’ என்பதை முன்வைத்து வாதாடவில்லை.
அம்பேத்கர் அப்படி வாதம் செய்திருப்பாரேயானால் இந்தியாவெங்கும் பற்றிப்படர்ந்து கொண்டிருந்த கம்யூனிச நெருப்பின் நிலையினை ஆதாரங்களுடன் முன்வைத்து ஆளும்வர்க்கமே அவரை வாயடைக்க செய்திருக்கும்.
அம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே உழைக்கும் மக்களின் போராட்டங்களாலும், அதைக்கண்டு நடுங்கிய ஆளும்வர்க்கத்தாலும் முறியடிக்கப்பட்டது.
அம்பேத்கரியத்தை தூக்கி நிறுத்த ஆனந்த் டெல்டும்ப்டெக்கள் மேற்கொண்ட பித்தலாட்டங்கள்!
அம்பேத்கரின் பலவீனத்தை உணர்ந்தவர்களில் முக்கியமானவர் ஆனந்த் டெல்டும்ப்டெ. அதேநேரத்தில் அந்த பலவீனத்தை மறைக்க முட்டாள்தனமான முயற்சி செய்தவரும் அவரேதான்.
அவர் தனது “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்” என்ற நூலில் சொன்னார், “வர்க்கப்போராட்டம் தவிர்க்க முடியாதது. வர்க்கப்போராட்டம்தான் சாதியை ஒழிக்கும். ஆனால் இந்தப் போராட்டங்களில் தலித்துகளின் பங்கேற்பு மட்டும் சாத்தியமில்லை”
இந்திய துணைக்கண்டத்தின் ஏடறிந்த வரலாறான வர்க்கப்போராட்ட வரலாறுகள் அனைத்தும் தலித்துகளின் பங்கேற்போடே நடந்தன என்பதற்கு நாம் மேலே தந்துள்ள சில சான்றுகளே போதும். இப்போதும் அப்படித்தான் நடக்கின்றன என்பதற்கும் “ஜிக்னேஷ் மெவானியும்” “சந்திரசேகர் ஆசாத் எனும் ராவணனும்” சிறந்த சாட்சிகளாகும். இனியும் இப்படித்தான் நடக்கும் என்பதே அறிவியல்.
இந்த உண்மைக்கு மாறாக ஆனந்த் டெல்டும்ப்டெ பொய் சொன்னார். அந்த பொய்யில் புனையப்பட்ட நூலை தமிழக முற்போக்கு இயக்கங்களிடமும் அதன் ஊழியர்களிடம் திணிக்கும் பணியை செய்தவர் எஸ்.வி.ஆர்.
இவர் கரூரை மையமாகக் கொண்டு இயங்கும் "AREDS" என்ற N.G.O-வோடு நேரடியாக தொடர்புடையவர். பின்நவீனத்துவவாதிகளின் செயல்பாட்டுக்குத் துணையாக 'நெறிக்கப்பட்ட குரல்வளைகள்', 'அந்நியமாதல்' ஆகிய நூல்களைக் கொண்டு வந்தவர்.
இங்கிலாந்தில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகளை பட்டியலிட்டு காட்டிக்கொடுத்த ஜார்ஜ் ஆர்வெல் என்கிற உளவாளி சோசலிச ஒன்றியத்தை கேவலமாக சித்தரித்து எழுதிய 1984 என்ற நூலை பாராட்டி பரப்பி கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுத்தவர.

No comments:

Post a Comment

பொருளாதார நெருக்கடி குறித்த தகவல்கள் தமிழில்

Book 7 - 2019 National Situations S.No Content Page 1 பொருளாதாரத் தேக்கம் உண்மைதான்.. பிரதமர் மோடியி...